திரையுலக சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் விருது - தேர்வுக் குழு அமைத்து அரசு உத்தரவு
- தமிழ் திரையுலகில் சிறந்துவிளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் 'கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
- வரும் ஜூன் 3-ம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
- விருதாளரை தேர்வு செய்யதிரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமனை தலைவராகவும், நடிகர்சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டதேர்வுக் குழுவை அமைத்துஆணையிடப்பட்டுள்ளது.
- இக்குழு பரிந்துரைக்கும் விருதாளருக்கு விருது தொகை ரூ.10 லட்சம், நினைவுப் பரிசு ஆகியவற்றை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார்.
ஐபிஎல் கோப்பையை வென்று குஜராத் அணி சாதனை
- 15வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்களே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
- இறுதியில் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
- ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் எடுத்த பட்டியலில் வார்னரை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தை பட்லர் பிடித்தார்.
- இதே போன்று நடப்பு தொடரில் 27 விக்கெட்டுகள் வீழ்த்திய ராஜஸ்தான் அணி வீரர் சாஹல், ஊதா நிற தொப்பியை வென்றார். ஐதராபாத் அணியைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு, சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ரியல் மாட்ரிட் சாம்பியன்
- ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலில் இங்கிலாந்தின் லிவர்பூல் அணியுடன் மோதிய ரியல் மாட்ரிட் அணி (ஸ்பெயின்) 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்று 14வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
- அந்த அணியின் வினிசியஸ் ஜூனியர் 59வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் திபாட் கோர்ட்டாய்ஸ், லிவர்பூல் நட்சத்திர வீரர் முகமது சாலாவின் 6 கோல் முயற்சிகளை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர் ரியல் மாட்ரிட் வீரர்கள்.
- மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன்-இல் அகில இந்திய ஆயுர்வேத மகாசம் மேளனத்தின் 59வது மகா ஆதிவேஷனைத் தொடங்கி வைத்த, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் உஜ்ஜைன்-இல் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
- இந்திய மருத்துவ முறைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக இந்திய அரசு அவ்வப்போது பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் ஆயுஷ் தனி அமைச்சகம் நிறுவப்பட்ட பிறகு, இந்த பணி இன்னும் வேகம் பெற்றது. இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சி கவுன்சில்களால் ஆயுர்வேத துறையில் குறிப்பிடத்தக்க பணிகள் செய்யப்பட்டுள்ளன.
- நமது உணவு, வாழ்க்கை முறை மற்றும் நமது அன்றாட வழக்கத்தைப்பொறுத்து நமது உடல்நிலை உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது தினசரி வழக்கம் என்னவாக இருக்க வேண்டும், பருவகால வழக்கம் என்னவாக இருக்க வேண்டும், மருந்துக்கு முன் நமது உணவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் விளக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.