Type Here to Get Search Results !

TNPSC 24th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலக சுகாதார அமைப்பு தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு

  • உலக சுகாதார அமைப்பின் தலைவராக, ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசிஸ், 2017ல் பதவியேற்றார்.
  • எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், உலக சுகாதார அமைப்பின் தலைவராக பதவியேற்ற முதல் ஆப்ரிக்க நாட்டவர் என்ற பெருமையை பெற்றார். 
  • மேலும், டாக்டராக இல்லாத ஒருவர் இந்தப் பதவியை வகித்ததும் இதுவே முதல் முறையாகும்.அவருடைய பதவிக் காலம் முடிய உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியானது. 
  • ஆனால், யாரும் போட்டியிடாததால், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு, இந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தாவோஸ் மாநாட்டில் எரிசக்தி துறையில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

  • தாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார உச்சி மாநாட்டில், முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில், கர்நாடகாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், 'ரென்யூ பவர்' நிறுவனம், 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • ஸ்விட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில், இரண்டு நாட்கள் உலக பொருளாதார உச்சி மாநாடு நடந்தது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக குழு பங்கேற்றது.
  • முதல் நாளான கர்நாடகாவில் நான்கு ஷாப்பிங் மால்கள் கட்டுவதற்காக, 'லுலு' நிறுவனத்துடன், 2,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கிறது இலங்கை

  • நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில், எரிசக்தி அமைச்சகம், இந்திய எக்சிம் வங்கியிடம் இருந்து, 3,750 கோடி ரூபாய் கடன் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இத்தொகை, பெட்ரோலிய பொருட்கள் வாங்க பயன்படுத்தி கொள்ளப்படும். இலங்கை அரசு ஏற்கனவே இதற்காக, இந்திய எக்சிம் வங்கியிடம், 3,750 கோடி ரூபாயும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து, 1,500 கோடி ரூபாயும் கடன் வாங்கியுள்ளது. 
இந்திய அரசின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின்கீழ் (என்எஸ்எம்) ஒரு பகுதியாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சிராப்பள்ளி இடம்பெற்றுள்ளது
  • இந்திய அரசின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின்கீழ் (என்எஸ்எம்) ஒரு பகுதியாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சிராப்பள்ளி, இடம்பெற்றுள்ளது. 
  • பரம் பொருள் (PARAM PORUL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தை, NIT திருச்சியின் நிர்வாகக் குழுவின் தலைவர் ஸ்ரீ பாஸ்கர் பட், NIT திருச்சியின் இயக்குநர் Dr. G. அகிலா முன்னிலையில் திறந்து வைத்தார். 
  • இந்தியாவில் உள்ள அணைத்து NITகளில், NIT திருச்சிராப்பள்ளி மட்டுமே NSMஇல், அமைக்க பெற்றது பெருமைக்குரிய அம்சமாகும். இது தவிர NSMஇல் 9 IIT கள் மற்றும் NABI இடம் பெற்றுள்ளது. 
  • தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உயர் செயல்திறன் கணினி இயந்திரங்கள் அமைத்து, ஆராய்ச்சி மற்றும் அதிக கணினி பயன்பாடு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு அளிப்பதே NSMன் முக்கிய நோக்காகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமைக் கணக்காயராக திரு. கே.பி.ஆனந்த் பொறுப்பேற்பு
  • தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமைக் கணக்காயராக திரு. கே.பி.ஆனந்த் பொறுப்பேற்றார். இந்திய தணிக்கை மற்றும் கணக்குச் சேவையில் (IAAS) 1996-ஆம் ஆண்டு இணைந்த இவர், 1994 இல் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.
  • இந்தப் பொறுப்பை ஏற்கும் முன், கேரளாவின் முதன்மை தலைமைக் கணக்காயராகவும், வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தணிக்கை முதன்மை இயக்குநராகவும், அஸ்ஸாமில் தலைமை கணக்காயராகவும் பணியாற்றினார். அவர் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு மின் விநியோக நிறுவனத்தில் இயக்குனராக (நிதி) பணியாற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel