Type Here to Get Search Results !

TNPSC 16th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வினேஷ், சாக் ஷி கலக்கல் - காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி

  • இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22 வது காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 23 முதல் ஆக. 8 வரை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் டில்லியில் நடக்கிறது. 
  • 62 கிலோ பிரிவு முதல் போட்டியில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக் ஷி மாலிக், சோனம் மாலிக்கை சந்தித்தார். சமீபத்திய பல்வேறு போட்டிகளில் சோனம் மாலிக் வெற்றி பெற்றிருந்தார்.
  • இம்முறை எழுச்சி பெற் சாக் ஷி மாலிக், 8-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த போட்டியில் 7-1 என மணிஷாவை சாய்த்த சாக் ஷி மாலிக், பர்மிங்காம் போட்டிக்கு தகுதி பெற்றார். 
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏமாற்றிய வினேஷ் போகத், 53 கிலோ தகுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். பைனலில் 3-0 என அன்டிம்மை சாய்த்து, காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார். 
  • காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இதுவரை பூஜா கெலாட் (50 கிலோ), வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), சாக் ஷி மாலிக் (62 கிலோ), திவ்யா காக்ரன் (68 கிலோ), பூஜா ஷிகாக் (76 கிலோ) தகுதி பெற்றுள்ளனர்.

மதுரவாயல் - துறைமுகம் 21 கி.மீ. நீள பறக்கும் சாலை - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

  • சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் - தமிழ்நாடு அரசு - சென்னை துறைமுகம் - கடற்படை இடையே சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்தியசாலை, போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • இந்த சாலையானது 21 கி.மீ. நீளம் உடன் 7 என்ட்ரி, 6 எக்சிட் கூடிய டபுள் டக்கர் பாலமாக அமைய உள்ளது இந்த சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைமொத்த திட்டத்தின் மதிப்பு 5,885 கோடி ரூபாய் ஆகும்.
  • சென்னை கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும், இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
  • 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். 
  • அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  • சென்னை மதுரவாயல் - துறைமுகம் சாலை திட்டத்திற்கு வருகிற 26ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

'டெப்லிம்பிக்சில்' மல்யுத்தம் சுமித் 'தங்கம்'

  • பிரேசிலில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 24 வது 'டெப்லிம்பிக்ஸ்' போட்டி நடந்தது. கடைசி நாளில் மல்யுத்த போட்டிகள் நடந்தன. 
  • ஆண்களுக்கான 97 கிலோ 'பிரீஸ்டைல்' போட்டி பைனலுக்கு முன்னேறிய இந்தியாவின் சுமித் தாஹியா, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் 74 கிலோ போட்டியில் இந்தியாவின் வீரேந்தர் சிங், 86 கிலோ பிரிவில் அமித் கிருஷ்ணன் வெண்கலம் கைப்பற்றி அசத்தினர். 
  • ஆண்கள் 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்திய வீரர் சுதன், 4வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். ஒட்டுமொத்தமாக இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்றது. இதற்கு முன் 2017ல் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் வென்றதே அதிகமாக இருந்தது.

சிவகங்கையில் பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுப்பு

  • சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த க.சரவணன் வித்தியாசமான 3 உலோகச் சில்லுகள் சிவகங்கை அருகே உள்ள அரசனேரி கீழமேடு, பேச்சிக்குளம், முனிக் கோயிலில் கிடைத்ததாகச் சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசாவிடம் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஒப்படைத்தார். அவற்றை ஆய்வு செய்ததில் அவை, பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் எனத் தெரியவந்தது.
  • செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் நேர்த்தியான வட்ட வடிவில் இல்லாமல் முன்னும் பின்னுமாக இருந்தது. இதிலுள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தைக் கொண்டு காசு என்பதை உறுதி செய்ய முடிந்தது. 
  • இது குறித்த முழுமையான தகவலைத் தஞ்சை நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமனின் உதவியோடு ஆய்வு செய்ததில் இவை பிஜப்பூர் சுல்தான் காலத்தைச் சேர்த்த காசுகள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
  • ஒரு காசில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப் பெற்றுள்ளது மற்ற எழுத்துக்கள் பாரசீக எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. அதில், அலி அடில் ஷா 1558-1579 என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கலாம், இவரது காலம் 16-ம் நூற்றாண்டு.

வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குவளை கண்டெடுப்பு

  • தமிழகத்தில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டில் புதிதாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • இதன்படி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை வெம்பக்கோட்டையில் நுண்கற்கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள், கிளிஞ்சல்களால் ஆன வளையல்கள் யானையின் கடைவாய்ப்பல் ஆகியவை புதைபடிம வடிவில் ஆகியவைகள் கிடைத்துள்ளது.
  • இந்நிலையில், வெம்பக்கோட்டையில் புதிதாக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குவளை கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ரூ.81,361 கோடிக்கு பங்குகள் கைமாறியது - அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை கவுதம் அதானி வாங்கினார்

  • அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏசிசி நிறுவனத்தில் ஸ்விஸ் நிறுவனமான ஹோல்சிம் 63.19% பங்குகளை வைத்திருந்தது. 
  • இந்த பங்குகளை விற்றுவிட்டு ஸ்விஸ் திரும்ப உள்ளதாக ஹோல்சிம் நிறுவனர் தெரிவித்திருந்தார். இதன்படி நிறுவன பங்குகளை வாங்க அதானி குழுமம், பிர்லா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிட்டன.
  • இறுதியில் அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவன பங்குகளை 1,050 கோடி டாலருக்கு (ரூ.81,361 கோடி) கவுதம் அதானி குழுமம் வாங்கியது. 
  • ஹோல்சிம் ஏஜி நிறுவனம் அம்புஜா சிமென்ட் நிறுவனத்தில் 63.19 சதவீத பங்குகளையும், ஏசிசி லிமிடெட் நிறுவனத்தில் 4.48 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. 
  • இதன் மூலம் சிமென்ட் உற்பத்தியில் இந்தியாவின் 2-வது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது. முதலிடத்தில் பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கையகப்படுத்தல் அறிவிப்புக்குப் பிறகு அம்புஜா நிறுவனப் பங்கு விலை 2.9 சதவீதமும், ஏசிசி நிறுவனப் பங்கு விலை 6.4 சதவீதமும் உயர்ந்தன. அதேபோல அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 2.75% உயர்ந்தது. 
  • இந்தியாவிலிருந்து வெளியேறும் 2-வது பெரிய வெளிநாட்டு நிறுவனம் இதுவாகும். இதற்கு முன்பு கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தை வேதாந்தா குழுமத்துக்கு விற்றுவிட்டு கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி 2010-ல் வெளியேறியது.

சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்

  • வேர்ல்ட் பிரஸ் போட்டோ அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட உலக அளவிலான பத்திரிகை புகைப்பட கலைஞர் விருதுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
  • இதில் உலக அளவில் ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பியா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஓசேனியா ஆகிய 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒற்றையர் (சிங்கிள்), கதைகள், நீண்ட கால திட்டங்கள் மற்றும் திறந்த வடிவம். 
  • செய்தித் தருணங்கள், நிகழ்வுகள் மற்றும் பின்விளைவுகள், அத்துடன் சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் அல்லது தீர்வுகளை ஆவணப்படுத்துதல் ஆகிய தலைப்புகளின் அடிப்படையில் புகைப்பட விருதுக்கான தேர்வு நடைபெற்றறது.
  • 130 நாடுகளைச் சேர்ந்த 4,800 புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற இதில், மதுரையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் செந்தில்குமரன் நீண்ட கால திட்டங்கள் என்ற பிரிவின் கீழ் பத்தாண்டுகளாக புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படத்திற்காக பதிவு செய்திருந்தார். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற WORLD PRESS PHOTO விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். 
  • முன்னதாக பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர்கள் முன் செந்தில்குமரனின் புலிகள் மற்றும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படத்தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை அமைப்பின் சர்வதேச தலைவராக முகமது ரேலா நியமனம்

  • கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைப்பாக `ஐஎல்டிஎஸ்' விளங்கி வருகிறது. இதுவரை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க மருத்துவர்களே அதன் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தனர்.
  • இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மற்றும் கணைய அறுவைசிகிச்சை தொடர்பாக 500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போா்ன் நியமனம்

  • பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் கடந்த மாதம் 2-ஆவது முறையாகத் தோந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ், ராஜிநாமா செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. 
  • அதன்படி, ஜீன் காஸ்டெக்ஸ் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவருக்குப் பதிலாக புதிய பிரதமராக எலிசபெத் போா்னை அதிபா் மேக்ரான் நியமித்துள்ளாா்.
  • முந்தைய அரசில் 2020-ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளா் துறை அமைச்சராக இருந்த எலிசபெத் அமல்படுத்திய சில சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு தொழிலாளா்கள் மற்றும் இடதுசாரிகளிடமிருந்து விமா்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

பாங்க் ஆஃப் இங்கிலாந்து நிதிக்குழுவில் இந்தியப் பெண்

  • லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் ஸ்வாதி, தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவா். தொடா்ந்து தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றாா். 
  • பின்னா் பிரிட்டன் சென்று உயா்கல்வி பயின்ற அவா் பொருளாதாரத்தில் முனைவா் பட்டமும் பெற்றாா்; இவா் சா்வதேச பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவா்.
  • இந்நிலையில், பிரிட்டனில் வட்டி விகிதத்தை நிா்ணயம் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் அவா் நியமிக்கப்பட்டுள்ளாா். 
  • இக்குழுவில் இடம்பெறும் முதல் இந்தியப் பெண் ஸ்வாதி திங்ரா என்பது குறிப்பிடத்தக்கது. அவா் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இக்குழுவில் இருப்பாா். 
  • வங்கியின் நேரடி ஊழியராக இல்லாமல், வெளியில் இருந்து நிதிக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினராக ஸ்வாதி இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பொருளாதாரம், நிதித்துறை சாா்ந்த பல்வேறு அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை ஸ்வாதி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நேட்டோவில் ஸ்வீடனும் இணைகிறது - ஸ்வீடன் பிரதமா் அறிவிப்பு

  • ரஷியாவின் ஊடுருவல் அச்சத்துக்கு எதிராக பாதுகாப்பு தேடிக்கொள்ளும் பொருட்டு ஃபின்லாந்தை தொடா்ந்து ஸ்வீடன் இந்த முடிவை எடுத்துள்ளது.
  • உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போா் தொடுத்தது. நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் விரும்புவது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதுதான் ரஷியா போா் தொடுக்க பிரதான காரணமாக கூறப்படுகிறது.
  • இதையடுத்து, மற்றொரு அண்டை நாடான ஸ்வீடனும் ஃபின்லாந்தை பின்பற்றி நேட்டோவில் இணைய விண்ணப்பிக்கப் போவதாக அறிவித்தது.
  • ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பிரதமா் மக்தலீனா ஆண்டா்சன் பங்கேற்றுப் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். 

சோமாலியா தேர்தல்' மாஜி' அதிபர் வெற்றி

  • கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் அதிபராக, 2012 - 17 வரை பதவி வகித்தவர் ஹசன் ஷேக் முகமது. இவரையடுத்து அதிபராக பொறுப்பேற்ற முகமது அப்துல்லாஹி முகமதுவின் பதவிக் காலம், கடந்த ஆண்டு முடிவடைந்தது. 
  • ஆனால், புதிய அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. 'மே 17க்குள் அதிபர் தேர்தலை நடத்தவில்லையெனில் சோமாலியாவுக்கு நிதியுதவி நிறுத்தப்படும்' என சர்வதேச நிதியமைப்புகள் எச்சரித்தன.
  • இதையடுத்து, நேற்று அதிபருக்கான தேர்தல் நடந்தது. தலைநகர் மொகாடிஷுவில் உள்ள ஹலனே விமான பணிமனையில் ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது. 
  • இதில் சோமாலியா பார்லி.,யின் மேல்சபை மற்றும் கீழ் சபையை சேர்ந்த, 328 பேர் ஓட்டு போட்டனர். இதில், ஹசன் ஷேக் முகமது அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 
இந்திய - நேபாள நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
  • பிரதமர் மோடியின் நேபாள பயணத்தின்போது இரு நாடுகள் இடையே மேலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக நேபாளத்திற்குச் சென்றார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விவரம்:
  • புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்தசமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  • இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து சிஎன்ஏஎஸ் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  • இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து காத்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  • சென்னை இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், இந்தியா - காத்மாண்டு பல்கலைக்கழகம்,நேபாளம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  • இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம், சென்னை, இந்தியா - காத்மாண்டு பல்கலைக்கழகம், நேபாளம் இடையே ஒப்பந்தத்திற்கான விருப்ப கடிதம் (முதுநிலை அளவில் கூட்டு பட்டப்படிப்பு திட்டத்திற்காக).
  • அருண் 4 ப்ராஜெக்ட் என்பதன் அமலாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக எஸ்ஜேவிஎன் லிமிடெட் மற்றும் நேபாள மின்சார ஆணையத்திற்கும் இடையே ஒப்பந்தம்.
  • அதே போல, நேபாளத்தின் லும்பினியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையம் மற்றும் தியான மண்டபத்தில் நடைபெற்ற 2566 வது புத்த பூர்ணிமா விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 
  • லும்பினியில் உள்ள லும்பினி மடாலய மண்டலத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தை கட்டமைப்பதற்கான பூமி பூஜையை நேபாள பிரதமர்ஷேர் பகதூர் தூபாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார்.
  • மார்ச் 2022 இல் சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கும் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளைக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளை, சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கு ஒதுக்கியுள்ள இடத்தில், புதுடெல்லியின் சர்வதேச புத்த கூட்டமைப்பால் இந்த மையம் அமைக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel