Type Here to Get Search Results !

TNPSC 12th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இலங்கை பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க

  • இலங்கையில் நிலவி வந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். அதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.
  • இதையடுத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்

இந்திய ராணுவத்துக்கு மேலும் 12 சுவாதி ரேடார்கள் - பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தயாரிப்பு

  • கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவம், அமெரிக்காவின் அதிநவீன ரேடார்களை பயன்படுத்தியது. 
  • இந்திய ராணுவம், பிரிட்டிஷ் தயாரிப்பு ரேடார்கள் உதவியுடன் போரை நடத்தியது. ஆனால் எதிரியின் ஆயுதங்கள் எந்த இடத்தில் உள்ளன என்பதை கண்டறிவதில் இந்திய ராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.
  • இதை கருத்தில் கொண்டு எதிரிகளின் ஆயுதங்களை கண்டறியும் அதிநவீன ரேடாரை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியது. சுவாதி என்று பெயரிடப்பட்ட இந்த ரேடாரை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது.
  • கடந்த 2007-ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் சுவாதி ரேடார் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டில் ராணுவத்தில் இந்த ரேடார் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
  • சுவாதி ரேடார் மூலம் 50 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் எதிரி நாடுகளின் பீரங்கி, ராக்கெட்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை துல்லியமாக கண்டறிய முடியும். தற்போது ரூ.1,000 கோடி மதிப்பில் புதிதாக 12 சுவாதி ரேடார்களை வாங்க ராணுவம் முடிவு செய்துள்ளது. இவை சீன எல்லையில் நிறுவப்பட உள்ளன.

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்

  • தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. முன்னதாக பாங்காக்கில் நடந்த உபெர் கோப்பையில் தாய்லாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து பெண்கள் அணி. 
  • இந்நிலையில், இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி 43 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தாமஸ் கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்கு மலேசியாவை 3-2 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றுள்ளது.
  • இதனால் தாமஸ் கோப்பையில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் உறுதியாகியுள்ளது. 1979-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போட்டியில் இந்திய அணி பதக்கம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்
  • இந்திய தலைமை தேர்தல் ஆணையராக தற்போது இருந்து வரும் சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வரும் 14-ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக தற்போது மூத்த தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். வரும் 15-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • தற்போது 62 வயதாகும் ராஜீவ் குமார், 1984-ம் ஆண்டின் ஜார்க்கண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 
  • 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசின் நிதித் துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியத் தலை வராக நியமிக்கப்பட்டார். 
  • 2020 ஆகஸ்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இப்போது மூத்த தேர்தல் ஆணையர் என்பதால் பணி மூப்பு அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்புகள் தொடர்பாக உலகளாவிய காணொலி மாநாட்டு 
  • கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலகளாவிய காணொலி மாநாட்டை நடத்தி வருகிறார். கடந்தாண்டு செப்டம்பரில் அவர் முதல் மாநாட்டை நடத்தினார். 
  • இதைத் தொடர்ந்து, 2வது மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று காணொலியில் உரையாற்றினர்.
காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டி
  • பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் தீக்ஷா தாகா் தங்கம் வென்றாா்.
  • இறுதிச்சுற்றில் அவா் அமெரிக்க வீராங்கனை அஷ்லின் கிரேஸை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். 2017-ஆம் ஆண்டு இப்போட்டியில் வெள்ளி வென்றிருந்த தீக்ஷா, தற்போது டெஃப்லிம்பிக்ஸ் கோல்ஃபில் 2 பதக்கம் வென்ற ஒரே போட்டியாளா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.
  • ஜொலினுக்கு 2: பாட்மின்டனில் மகளிா் ஒற்றையரில் ஜொலின் ஜெயரட்சகன் 21-17, 21-18 என்ற கேம்களில் ஆஸ்திரியாவின் நியுடோல்ட்டை வீழ்த்தி தங்கம் வென்றாா். 
  • கலப்பு இரட்டையா் இறுதிச்சுற்றிலும் ஜொலின்/அபினவ் சா்மா இணைந்து, மலேசிய இணையை வீழ்த்தி முதலிடம் பிடித்தனா். ஆடவா் ஒற்றையரில் அபினவ் சா்மா லிதுவேனியாவின் ரெஸ்னிகாஸை தோற்கடித்து வெண்கலம் வென்றாா்.
  • இப்போட்டியில் இதுவரை இந்தியா 7 தங்கம், 1 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றுள்ளது.
காது கேளாதோருக்கான ஒலிம்பிக்கில் மூன்று தங்கப் பதக்கம் வென்று அசத்தல்
  • மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஜெய ரட்சகன் என்பவரது மகள் ஜெர்லின் அணிகா (17). மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர், இறகுப்பந்து போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
  • இந்நிலையில், பிரேசிலில் நடைபெற்று வரும் 24-வது செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இறகுப்பந்து பிரிவில் பங்கேற்றார். 
  • அதில், ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் கே. நியூடோல்ட்டை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெர்லின் அணிகா-அபினவ் சர்மா ஜோடி மலேசியாவின் பூன்-டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றுள்ளது. மேலும் குழு இறகுப்பந்து போட்டியிலும் பங்கேற்று தங்கம் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
  • ஒலியைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பாயக்கூடியது பிரமோஸ் ஏவுகணை. இந்த ஏவுகணையை தரை, விமானம், கப்பல் அல்லது நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்த முடியும். 
  • இந்த ஏவுகணைக்கு 290 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறனுள்ள நிலையில், அந்தத் தூரம் சுமாா் 350 கி.மீ-ஆக நீட்டிக்கப்பட்டு வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. 
  • இந்திய விமானப் படை, கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம், பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பரிசோதனையில் ஈடுபட்டன.
  • இந்தப் பரிசோதனையின்போது ஏவுகணையின் மேம்பட்ட வடிவம், முதல்முறையாக சுகோய் எஸ்யூ-30எம்கேஐ போா் விமானத்தில் இருந்து வங்கக் கடல் பகுதியில் இருந்த இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது. 
  • அப்போது அந்த ஏவுகணை இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த சோதனையின் மூலம், நிலம் அல்லது கடற்பகுதியில் மிக நீண்ட தொலைவில் உள்ள இலக்கை எஸ்யூ-30 எம்கேஐ விமானம் வாயிலாக துல்லியமாகத் தாக்கும் திறனை இந்திய விமானப் படை பெற்றுள்ளது. 
  • எஸ்யூ-30எம்கேஐ விமானத்தின் உயா்ந்த செயல் திறன், பிரமோஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட திறன் ஆகியவற்றால் எதிா்காலத்தில் போா்க்களங்களில் இந்திய விமானப் படை ஆதிக்கம் செலுத்த முடியும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிஇஎம் அடிப்படையிலான இந்தியாவின் பெரிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்திற்கு கெயில் அனுமதி
  • தேசிய ஹைட்ரஜன் இயக்கத்திற்கு ஏற்ப, இந்தியாவில் மிகப் பெரிய புரோட்டான் பரிமாற்ற சவ்வூடு மின்னாற்பகுப்பு ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு கெயில் இந்தியா நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. 
  • இந்தத் திட்டம் மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள கெயில் நிறுவனத்தின் விஜய்பூர்  வளாகத்தில் நிறுவப்படும். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையில் செயல்படும்.
  • நாள் ஒன்றுக்கு 4.3 மெட்ரிக் டன் ஹைட்ரஜனை தயாரிக்கும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் ஹைட்ரஜன், 99.999 சதவீதம் தூய்மையானதாக இருக்கும். இத்திட்டத்தை 2023 நவம்பர் மாதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுளளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel