Type Here to Get Search Results !

உதய் திட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஏற்பட்ட பாதிப்பு / IMPACT OF UDAY PROECT ON TAMILNADU ELECTRICITY BOARD

 

TAMIL

  • 31 மார்ச் 2020 அன்றுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை - உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜ்னா (உதய்) திட்டத்தின் முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல் திறன் மீதான செயலாக்கத் தணிக்கை அறிக்கை - தமிழ்நாடு அரசு - அறிக்கை எண் 7- 2021. சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாள்: 10.05.2022.
அறிமுகம்
  • மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் பகிர்மான நிறுவனங்களின் (டிஸ்காம்) நிதி மேம்பாட்டை முன்னேற்றும் நோக்கத்துடன், உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜ்னா (உதய்) என்ற திட்டத்தை இந்திய அரசின் மின் அமைச்சகம், நவம்பர் 2015ல் அறிவித்தது. 
  • டிஸ்காம்களின் நிதிநிலையில் முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டுத் திறன் மேம்படுத்துதல் மூலம் அனைவருக்கும் வாங்கக்கூடிய விலையில், 24x7 மின்சாரம் கிடைக்கச் செய்ய தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வழி வகை செய்யும் படி இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 
  • இத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி, நிதி மற்றும் செயல்பாட்டு மைல்கற்களை அடைவதற்கான அந்தந்த தரப்பினரின் பொறுப்புகளைக் குறிப்பிட்டு, இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜேட்கோ) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 2017-ல் கையெழுத்தானது.
  • உத்தேச இலக்குகளான டிஸ்காம்களின் நிதி நிலை முன்னேற்றம் மற்றும் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி செயல்பாட்டுத் திறன்களை செயல்படுத்துவதன் மூலம் இலக்கு வைக்கப்பட்ட செயல்பாட்டு மேம்பாட்டை டான்ஜேட்கோ அடைந்த பயனை மதிப்பீடு செய்ய இந்த செயலாக்கத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிதி மேலாண்மை
  • 75 விழுக்காட்டு கடனை எடுத்துக் கொள்ள வேண்டிய இலக்குக்கு மாறாக, 34.38 விழுக்காட்டை மட்டுமே எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்புக் கொண்டது. 
  • இந்த பற்றாக்குறை காரணமாக, டான்ஜெட்கோ ₹30,502 கோடி அளவிற்கு கடன் சுமையைத் தொடர்ந்தது, இதன் விளைவாக டான்ஜெட்கோவிற்கு ₹9,150.60 கோடி கூடுதல் வட்டிச் சுமை ஏற்பட்டது.
  • மீதமுள்ள 25 விழுக்காடு கடனை அதாவது ₹7,605 கோடியைப் பொறுத்தவரை, டான்ஜெட்கோ, மாநில அரசின் உத்தரவாதத்துடன் கூடிய குறைந்த வட்டி கொண்ட கடன் பத்திரங்களாக வெளியிட வேண்டியிருந்தது. 
  • டான்ஜெட்கோவின் இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இதன் விளைவாக, அதிக வட்டி விகிதம் கொண்ட கடன்களைத் தொடர்ந்ததால், டான்ஜெட்கோவிற்கு ₹1,003.86 கோடி கூடுதல் வட்டிச் சுமை ஏற்பட்டது.
  • தமிழ்நாடு அரசின் பகுதி அளவு மட்டும் கடன் ஏற்பு, 25 விழுக்காடு கடனை பத்திரங்களாக மாற்றத் தவறியமை, மின் உற்பத்தித் திட்டத்திற்கான மூலதனக் கடன் வகைகளில் 87.05 விழுக்காடு உயர்வு, செயல்பாட்டு மூலதன கடன் வகைகளில் 189.88 விழுக்காடு உயர்வு போன்ற காரணங்களால் டான்ஜெட்கோவின் நிலுவைக் கடன்கள் 2019-20 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ₹81,312 கோடியிலிருந்து (செப்டம்பர் 2015) ₹1,23,895.68 கோடியாக அதிகரித்தது.
  • டான்ஜெட்கோ வங்கிகள்/நிதி நிறுவனங்களுக்கு (FIs) ₹503.28 கோடி அளவிற்கு காலங்கடந்த/அபராத வட்டியை செலுத்தியது.
நடைமுறைப்படுத்துதல்
  • இத்திட்டத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டிற்குள் சராசரி விநியோக செலவு (ACS) மற்றும் சராசரி வருவாய் (ARR) ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். 
  • இவ்விடைவெளி குறைவதற்கு பதிலாக, 2015-16-ல், ஒரு யூனிட்டிற்கு ₹0.60 ஆக இருந்த இடைவெளி 2019-20-ல் ஒரு யூனிட்டுக்கு ₹1.07 ஆக அதிகரித்தது. 
  • இதன் காரணமாக 2015-20 காலகட்டத்தில் மொத்த பற்றாக்குறை ₹42,484.70 கோடியாக இருந்தது.
  • ஜூன் 2012 மற்றும் செப்டம்பர் 2012-க்குள் அனைத்து குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்தும் பணியை முடிக்குமாறு டான்ஜெட்கோவிற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உத்தரவிட்டது. 
  • எனினும், டான்ஜெட்கோ, மீட்டர் பொருத்தும் பணியை முடிக்கவில்லை. ஆனால் மேற்கூறிய நுகர்வோர்களுக்கான மானியம் முறையே இணைப்புகளின் எண்ணிக்கை மற்றும் HP அடிப்படையில் பெறப்பட்டது, இதனால், ₹1,541.49 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
  • மாநில மின் பளு அனுப்பும் மையத்தால் (SLDC) மின் கொள்முதல் திட்டமிடுவதில் தகுதி அடிப்படையில் முன்னுரிமை என்ற கோட்பாட்டின்படி மின்சாரம் கொள்முதல் (MOD) நடைமுறை சரிவர பின்பற்றப்படவில்லை. 
  • இதன் விளைவாக, டான்ஜெட்கோ அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் ₹28.45 கோடி, கூடுதல் செலவினமாக அமைந்தது.
  • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற விலையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியமயால் டான்ஜெட்கோவிற்கு ₹149.02 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டது.
  • டான்ஜெட்கோ ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு (AT&C) 2.24 முதல் 3.41 விழுக்காடு வரை குறைவாக கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக மத்திய மின்சார அதிகார ஆணையம் (CEA) அறிவித்த கணக்கீட்டு முறையின் படி இழந்த எரிசக்தியின் மதிப்பு ₹6,547.25 கோடியாகும்.
பரிந்துரைகள்
  • தமிழ்நாடு அரசு மற்றும் டான்ஜெட்கோ வட்டிச் செலவைக் குறைப்பதற்காக கடன்களை ஆய்வு செய்து மறுசீரமைக்கலாம் என்றும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TNERC) கட்டண மனுக்களை குறிப்பிட்ட காலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய மின்சார அதிகார ஆணையத்தால் (CEA) பரிந்துரைக்கப்பட்ட முறைமையின் படி ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்புகளை துல்லியமாக கணக்கிடலாம் என்றும் தணிக்கை பரிந்துரைக்கிறது.
  • டான்ஜெட்கோ, மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புக் குறைப்பை இலக்காகக் கொண்டு, Feeders-களை பிரிக்க செயல் திட்டத்தை வகுக்கலாம்.
ENGLISH
  • Report of the Head of Audit and Audit of India for the year ended 31 March 2020 - Progress Audit Report on Performance of Tamil Nadu Power Generation and Distribution Corporation during and before the Ujwal Discom Assurance Yojna (Uday) Scheme - Government of Tamil Nadu - Report No. 7- 2021. In the Legislative Assembly Date of submission: 10.05.2022.
Introduction
  • In November 2015, the Ministry of Power, Government of India announced the Ujjwal Discom Assurance Yojna (Uday), a scheme aimed at promoting the financial development of state-owned power distribution companies (DISCOMs).
  • The project aims to improve the financial position of DISCOMs and to make the necessary reforms to make 24x7 electricity available at affordable prices to all.
  • A tripartite Memorandum of Understanding (MoU) was signed in January 2017 between the Government of India, the Government of Tamil Nadu and the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (TNZTCO), outlining the respective parties' responsibilities in achieving financial and operational milestones as defined in the plan.
  • This process audit was conducted to assess the benefit achieved by TANZDCO in improving the financial position of the proposed targets DISCOMs and implementing the operational capabilities as stated in the Tripartite Memorandum of Understanding (MoU).
Financial management
  • The Government of Tamil Nadu has agreed to take only 34.38 per cent, contrary to the target of 75 per cent.
  • Due to this shortfall, Donjetco continued to incur a debt burden of ₹ 30,502 crore, resulting in an additional interest burden of ₹ 9,150.60 crore on Donjetco.
  • For the remaining 25 per cent of the debt, 7,605 crore, Donjetco had to issue low-interest bonds with state guarantees.
  • The Government of Tamil Nadu did not accept Donjetko's request. As a result, Donjetco incurred an additional interest burden of ₹ 1,003.86 crore as it continued to borrow at higher interest rates.
  • Due to the Government of Tamil Nadu's partial debt acceptance, failure to convert 25 per cent into debt securities, 87.05 per cent increase in capital borrowings for power generation project and 189.88 per cent increase in working capital loans, Donjetco's outstanding loans from ₹ 81,312 crore for the five years from 2019-20 (September 2015) 23 1,23,895.68 crore.
  • Donjetco paid overdue / penalty interest of ₹ 503.28 crore to banks / financial institutions (FIs).
Implementation
  • According to the plan, the gap between average distribution cost (ACS) and average revenue (ARR) should be brought to zero by 2018-19.
  • Instead of reducing this gap, the gap increased from ₹ 0.60 per unit in 2015-16 to ₹ 1.07 per unit in 2019-20. As a result, the total deficit during 2015-20 was 42,484.70 crore.
  • The Tamil Nadu Electricity Regulatory Commission (TNERC) has ordered Donjetco to complete the work of fitting meters to all cottage and agricultural consumer electricity connections between June 2012 and September 2012.
  • Donjetko, however, did not complete the meter fitting work. But the subsidy for the aforementioned consumers was obtained on the basis of the number of connections and HP respectively, resulting in a revenue loss of ₹ 1,541.49 crore.
  • The Electricity Procurement (MOD) procedure has not been properly followed as per the principle of merit based priority in planning power procurement by the State Electricity Transmission Center (SLDC).
  • As a result, Donjetco's purchase of electricity at a higher cost resulted in an additional cost of ₹ 28.45 crore.
  • Failure to renew the power purchase agreement at ₹ 3.50 per unit approved by the Tamil Nadu Electricity Regulatory Authority resulted in an additional cost of ₹ 149.02 crore to Donjetco.
  • Donjetco reported an overall technical and business loss (AT&C) of 2.24 to 3.41 percent lower. As a result, the value of lost energy is estimated at ₹ 6,547.25 crore, according to the Central Electricity Authority (CEA).
Suggestions
  • Audit that the Government of Tamil Nadu and Donjetco may inspect and restructure the debts to reduce the interest cost and that the tariff petitions should be submitted to the Tamil Nadu Electricity Regulatory Commission (TNERC) within a specified period and accurately calculate the overall technical and commercial (AT&C) losses as per the system recommended by the Central Electricity Authority (CEA).
  • Donjetco may devise an action plan to separate feeders, aiming to reduce total technical and business losses.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel