Type Here to Get Search Results !

TNPSC 10th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலகின் மிக பெரிய பேனாவை உருவாக்கி இந்தியர் கின்னஸ் சாதனை

  • ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா. இவர் தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
  • அதன் எடை 37.23 கிலோ ஆகும். 5.5 மீட்டர் நீளம் கொண்டது. இதற்கு முன்பு 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த மிக பெரிய பேனாவின் சாதனையை இந்த பேனா முறியடித்து உள்ளது. இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டு உள்ளது.

துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்குவது உட்பட 20 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழகஅரசுக்கே வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிமுகம் செய்தார். 
  • பின்னர், 1976 -1998 காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வழக்கிழந்த 91 சட்டங்களை நீக்குவதற்கான நீக்கறவு மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். 
  • ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிநியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் பெரியகருப்பன் அறிமுகம் செய்தார்.
  • மேலும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதா, தமிழக அரசுக்கான நிதி ஒதுக்க மசோதாக்களை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார். அனைத்து மசோதாக்களும் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
  • இதில், தமிழக நிதி ஒதுக்கம் தொடர்பாக 3 மசோதா, சம்பளம் வழங்கல் தொடர்பாக 1 மசோதா, நகராட்சி சட்டங்கள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் திருத்தம், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான மசோதாக்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருத்த சட்ட மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
  • தமிழ்நாடு வேளாண்மை, தமிழ் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்கப்பட்டன.
  • இதுதவிர, தமிழ்நாடு நீக்கறவு சட்ட மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதா, தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி ,தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாடு திருத்த சட்ட மசோதாக்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய திருத்தம், தமிழ்நாடு மதுவிலக்குதொடர்பான குற்றவாளிகள், கணினிவழி குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நில அபகரிப்பாளர்கள், காணொலி திருடர்களின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுத்தல் திருத்த சட்ட மசோதா என மொத்தம் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கினார் குடியரசு தலைவர்

  • டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உட்பட 14 பேருக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கங்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கிய நபர்களுக்கான பாதுகாப்பு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • இந்த விருது வழங்கும் விழாவில், மரணத்திற்கு பிந்தைய 6 பேர் உட்பட 13 பேருக்கு, சவுரிய சக்ரா விருதுகளை பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியான குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். 
  • பணிக்காலத்தில் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் வீர தீரத்துடன் சிறப்பான பணியை வெளிப்படுத்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
  • இது தவிர, தற்போதைய ராணுவ தளபதியான ஜெனரல் மனோஜ் பாண்டே உட்பட 14 பேருக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கங்களையும், 4 பேருக்கு உத்தம் யுத் சேவா பதக்கங்களையும், 24 பேருக்கு அதி விஷிஸ்ட் சேவா பதக்கங்களையும் குடியரசுத்தலைவர் இந்த விழாவில் வழங்கினார்.

மின்னணு முறையில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு

  • 2021ல் நடைபெற வேண்டிய நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தாண்டு நடத்த திட்டமிட்டுள்ளனர். துல்லியமான மற்றும் செலவு குறைந்த முறையில் நடத்துவதற்காக இதனை 50% மின்னணு முறையில் மாற்ற உள்ளனர்.
  • ஒரு நாட்டின் கொள்கை உருவாக்கம் மற்றும் திட்ட செயலாக்கத்திற்கு மக்கள் தொகையின் பல்வேறு வகை தகவல்கள் மிகவும் அவசியம். 
  • சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளது. 1872ல் இந்தியாவின் முதல் கணக்கெடுப்பு நடந்தது. 1881ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியானது.
  • அதிலிருந்து தவறாமல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தன. தற்போது நம்மிடம் 2011 மக்கள் தொகை விவரங்களே உள்ளன. 
  • 2021ல் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். கோவிட் 2ம் அலையால் அது தள்ளிப்போனது.விரைவில் 16வது கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
  • அதனை மின்னணு மற்றும் பேப்பர் என கலப்பு முறையில் நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த விழாவிற்கான சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு சட்டமன்ற அரங்கில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதனை, சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார்.
  • இந்த சிறப்பு மலரில் கடந்த 1922-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டபேரவையின் முக்கிய நிகழ்வுகள் குறித்த சிறப்பு படங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
  • மேலும், கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா குறித்த நிகழ்வுகளின் படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த சிறப்பு மலர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அசாம் அரசு செய்தித்தாள் முதல் பதிப்பினை வெளியிட்டார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா

  • அசாமில் அரசு செய்தித்தாளின் முதல் பதிப்பினை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டு உள்ளார். 'அசோம் பர்தா' என்ற பெயரில் அந்த செய்தித்தாளானது அரசின் கொள்கைகள் மற்றும் அவற்றின் அமலாக்கம் ஆகியவற்றோடு மக்களை ஒன்றாக இணைந்து செல்ல செய்யும்.
  • அசாம், ஆங்கிலம், இந்தி மற்றும் வங்காளம் ஆகிய 4 மொழிகளில் இந்த செய்தித்தாள் அச்சிடப்படும். மேலும், இந்த செய்தித்தாளை பல்வேறு மரபுசார்ந்த மற்றும் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி பரவலாக வெளியிடப்பட்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் 'மாஜி' சர்வாதிகாரி மகன் வெற்றி

  • தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இதையடுத்து ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் ஜூனியர் மார்க்கோஸ், மூன்று கோடிக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட துணை அதிபர் லெனி ரோப்ரெடோ, 1.45 கோடி ஓட்டுகள் பெற்றுள்ளார். 
ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாதலை தடுக்கும் (UNCCD) மாநாட்டின் பதினைந்தாவது அமர்வில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்
  • கோட் டி’ஐவரியில் நடைபெற்ற பாலைவனமாதலை தடுக்கும் ஐ.நா சபையின் (UNCCD) மாநாட்டின் பதினைந்தாவது அமர்வில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.
  • வறட்சி, நில சீரமைப்பு, நில உரிமைகள், பாலின சமத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற அதுசார்ந்த  விஷயங்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.  நிலவளத்தில் கவனம் செலுத்தும் வகையில், நிலச்சீரமைப்பு மற்றும் 
  • வறட்சி விரிதிறனுக்கான நீடித்த தீர்வுகளை  இந்த மாநாடு அடையாளம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel