Type Here to Get Search Results !

அழிவின் அபாயத்தில் ஊர்வன உயிரினங்கள் - நேச்சர் இதழ் ஆய்வு / Reptile Risk Endangered - Nature Magazine Review

 

TAMIL

  • நேச்சர் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான உயிரினங்களின் விரிவான புதிய மதிப்பீட்டின் படி, உலகெங்கிலும் உள்ள ஊர்வன உயிர் இனங்களில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிந்து போகும் அபாயத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
  • ஆமைகள் மற்றும் முதலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை உட்பட சுமார் 21% ஊர்வன இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என்று சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. ஆமைகள், முதலைகள், பல்லிகள், பாம்புகள் மற்றும் டுவாடாரா உள்ளிட்ட 10,196 ஊர்வன இனங்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
  • தங்களது ஆழமான ஆய்விற்கு பிறகு ஊர்வன இனங்களில் ஐந்தில் ஒரு பங்கு - கலபகோஸ் ஆமைகள் முதல் இந்தோனேசிய தீவுகளின் கொமோடோ டிராகன் வரை, மேற்கு ஆப்பிரிக்காவின் காண்டாமிருக வைப்பர் முதல் இந்தியாவின் கரியல் (சொம்புமூக்கு முதலை) வரை அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். 
  • தங்களது இந்த ஆய்வில் ஊர்வனவற்றில் சுமார் 21% இனங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இவை அழிந்து கொண்டிருக்கும் அபாயத்தில் அல்லது இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன என்பதை கண்டறிந்து உள்ளோம்.
  • தவிர ஏற்கனவே அழிந்துவிட்ட 31 இனங்களையும் அடையாளம் கண்டுள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல்லுயிர் பெருக்கத்தின் பேரழிவு சரிவுகள் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றன. 
  • 40 சதவீதத்திற்கும் அதிகமான நிலநீர்வாழ் உயிரினங்கள், 25 சதவீத பாலூட்டிகள் மற்றும் 13 சதவீத பறவைகள் அழிவை சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். இருப்பதிலேயே முதலைகள் மற்றும் ஆமைகள் மிகவும் ஆபத்தில் உள்ள உயிரினங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
  • இவற்றில் முறையே 58 சதவீதம் மற்றும் 50 சதவீதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இறைச்சிக்காக மற்றும் மனிதர்கள் வாழுமிடங்களில் இருந்து அகற்றப்படுவதற்காக முதலைகள் கொல்லப்படும், அதே நேரத்தில் ஆமைகள் பாரம்பரிய மருத்துவ காரணங்களுக்காக குறி வைக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். 
  • வறண்ட வாழ்விடங்களில் வசிக்கும் சுமார் 14% உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, காடுகளை ஒட்டிய வாழ்விடங்களில் உள்ள ஊர்வன இனங்களில் சுமார் 27% அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
காலநிலை அச்சுறுத்தல்
  • ஆபத்தில் உள்ள மற்றொரு நன்கு அறியப்பட்ட பாம்பினம் ராஜநாகம். உலகின் மிகப்பெரிய விஷ பாம்பான ராஜநாகமும் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்து வருவது மிகவும் கவலைக்குரியது. 
  • விவசாயம், மரம் வெட்டுதல், காடுகளை அழித்தல், ஆக்கிரமிப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவை ஊர்வனவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது கண்டறியப்பட்டது.
  • இது தவிர உலகளாவிய காலநிலை மாற்றங்களும் சுமார் 10 சதவீத ஊர்வன இனங்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. ஒரு சில உயிரினங்களுக்கு அவசரகால பாதுகாப்பு தேவைப்படுவதன் அவசியத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. 
  • இந்த ஆய்வு பணி கிட்டத்தட்ட 1,000 விஞ்ஞானிகள் மற்றும் 52 இணை ஆசிரியர்களை உள்ளடக்கியது மற்றும் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
  • According to a comprehensive new estimate of thousands of species recently published in the journal Nature, about one-fifth of the world's reptile species are endangered.
  • A recent study found that about 21% of reptile species, including more than half of turtles and crocodiles, are endangered. The researchers studied 10,196 reptile species, including turtles, crocodiles, lizards, snakes and toadstools.
  • Researchers say one-fifth of the reptile species are in danger of extinction after their in-depth study - from galapagos turtles to the Indonesian islands' Komodo dragon, from West Africa's rhino viper to India's carnivore.
  • About 21% of the reptiles in their study are endangered. We find that these are in danger of extinction or in danger of extinction in a few more years. In addition, we have identified 31 species that are already extinct. The catastrophic decline of biodiversity around the world is seen as a threat to life on Earth.
  • Researchers have warned that more than 40 percent of aquatic life, 25 percent of mammals and 13 percent of birds will become extinct. Crocodiles and turtles have been identified as the most endangered species in existence.
  • Of these, 58 percent and 50 percent, respectively, are threatened. Researchers are concerned that crocodiles may be killed for meat and removed from human habitats, while turtles are being targeted for traditional medical reasons.
  • It has also been found that about 27% of the reptiles in the wild habitats are endangered, compared to about 14% of the species that live in arid habitats.
Climate threat
  • Another well-known snake kingdom in danger. It is also a matter of great concern that the world's largest venomous snake kingdom is declining in number. Agriculture, logging, deforestation, occupation and urban development have been found to be major threats to reptiles.
  • In addition, the study found that global climate change poses a direct threat to about 10 percent of reptile species. This study highlights the need for emergency care for a few species.
  • It is noteworthy that this research work involved nearly 1,000 scientists and 52 co-authors and was launched many years ago.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel