Type Here to Get Search Results !

தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பு குழந்தைத் திருமணங்கள் குறித்து ஆய்வு / REPORT OF CHILD MARRIAGE BY NFHMO

 

TAMIL

  • தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பு குழந்தைத் திருமணங்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக பெண்களுக்கு 18-ம், ஆண்களுக்கு 21-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 18 முதல் 29 வயது வரையுடைய பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பேருக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. 
  • இதேபோல், 21 முதல் 29 வயது வரையுடைய ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 15 சதவிகித பேருக்கு 21 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெற்றுள்ளது.
  • இதில், பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்த மாநிலங்களில் மேற்குவங்கம் 42 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 
  • பீகார் (42%), திரிபுரா (39%, ஜார்க்கண்ட் (35%), ஆந்திரப்பிரதேசம் (33%), அஸ்ஸாம் (32%), தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ (28%), தெலுங்கானா (27%), மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் (25%) ஆகியவை இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • அதுபோல், குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே ஆண்களுக்கு திருமணம் நடைபெறும் மாநிலங்களில் 25 சதவிகிதத்துடன் பீகார் முதலிடத்தில் உள்ளது. 
  • குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் 24 சதவிகிதத்துடனும், ஜார்க்கண்ட் 22 சதவிகிதத்துடனும், அருணாச்சலப்பிரதேசம் 21 சதவிகிதத்துடனும், மேற்கு வங்கம் 20 சதவிகிதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • இதில், குறைந்தபட்சமாக லட்சத்தீவு, சண்டீகரில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான ஆண்களுக்கு திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது. 
  • கேரளத்தில் 1 சதவிகித ஆண்களுக்கும், தமிழ்நாடு, கர்நாடகா, நாகலாந்து ஆகிய மாநிலங்கள் 4 சதவிகித ஆண்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது. 
  • 11 சதவிகித திருமணங்கள் ரத்த சொந்தங்களில் நடைபெறுவதும், இது கேரளம் தவிர்த்து தென் மாநிலங்களில் பொதுவான நிகழ்வாக காணப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ENGLISH
  • The National Family Health Monitoring Organization has conducted a study on child marriages. While the minimum age for marriage was set at 18 for women and 21 for men, a study of women between the ages of 18 and 29 found that 25 percent had child marriages.
  • Similarly, in a study of men aged 21 to 29, 15 per cent were married before the age of 21. Of these, West Bengal tops the list of states with 42 per cent child marriages for women.
  • Bihar (42%), Tripura (39%, Jharkhand (35%), Andhra Pradesh (33%), Assam (32%), Dadra and Nagar Haveli and Daman and Diu (28%), Telangana (27%), Madhya Pradesh, Rajasthan States (25%) are next in line on this issue.
  • Similarly, Bihar tops the list with 25 per cent of the states where men get married before reaching the minimum age of marriage.
  • Gujarat, Rajasthan, Madhya Pradesh are next with 24 per cent, Jharkhand with 22 per cent, Arunachal Pradesh with 21 per cent and West Bengal with 20 per cent.
  • Of these, at least in Lakshadweep, less than 1 per cent of men in Chandigarh get married before reaching the age of marriage.
  • In Kerala 1 per cent of men and in Tamil Nadu, Karnataka and Nagaland 4 per cent of men get married before reaching the minimum age of marriage.
  • The study revealed that 11 per cent of marriages take place between blood relatives and this is a common occurrence in the southern states except Kerala.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel