Type Here to Get Search Results !

நாடுகளின் பத்திரிகை சுதந்திர தர வரிசை பட்டியல் / PRESS FREEDOM RANKINGS OF COUNTRIES

 

TAMIL
  • சர்வதேச பத்திரிகையாளர் தினமான மே 3 ஆம் தேதி, எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் என்ற ஊடக கண்காணிப்பு நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஊடக சுதந்திரங்களை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
  • அந்த வகையில், நேற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தர வரிசை பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது
  • அதில் நார்வே முதலிடத்திலும் டென்மார்க் 2 வது இடத்திலும், ஸ்வீடன் 3வது இடத்திலும் உள்ளன. ஈஸ்டோனியா 4 வது இடத்திலும் பின்லாந்து 5வது இடத்தையும் பிடித்து இருக்கின்றன. 
  • இந்த பட்டியலில் கடைசி இடத்தை வட கொரியா தக்க வைத்து இருக்கிறது. எரிட்ரியா 179 வது இடத்திலும், ஈரான் 178 வது இடத்திலும் துர்க்மேனிஸ்தான் 117 வது இடத்திலும் உள்ளன. 
  • மியான்மர் 176 வது இடத்தில் இருப்பதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டு இருக்கும் பத்திரிகை சுதந்திர தரவரிசையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
  • இந்த தர வரிசையில் வல்லரசு நாடுகளான பிரிட்டன் 24 வது இடத்திலும் பிரான்ஸ் 26 வது இடத்திலும் அமெரிக்கா 42 வது இடத்திலும் உள்ளன. 
  • உக்ரைன் மீதான போர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, இப்பட்டியலில் 155 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 180 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் சீனா 175 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
  • இப்பட்டியலில் இந்தியாவின் நிலையும் மோசமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு 142 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 150 வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 
  • கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் 133 வது இடத்தில் பின் தங்கி இருந்த இந்தியா அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் இந்த வரிசையில் 30 இடங்கள் முன்னேறி 76 வது இடத்தை அடைந்துள்ளது.
ENGLISH
  • On International Journalist Day, May 3, the media watchdog Unlimited Journalists publishes an annual list of countries with international media freedoms. In that regard, the company yesterday released a list of 180 countries' press freedom rankings for 2022
  • Norway tops the list, followed by Denmark and Sweden. Estonia is 4th and Finland is 5th. North Korea retains last place on the list. Eritrea is 179th, Iran 178th and Turkmenistan 117th.
  • Myanmar is ranked 176th in the Independent Journal of Journalism, a non-governmental organization
  • The superpowers are Britain at 24th, France at 26th and the United States at 42nd. Russia, which has been waging war on Ukraine, is ranked 155th on the list. China ranks 175th on the list of 180 countries.
  • India's position on the list is even worse. India, which was ranked 142nd last year, is now ranked 150th. India, which was ranked 133rd in the list in 2016, has seen a further decline in subsequent years. Nepal, India's neighbor, has moved up 30 places to 76th in the list.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel