Type Here to Get Search Results !

2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 2,000 நிறுவனங்களின் தரவரிசை / WORLD BEST 2000 INSTITUTIONS OF 2022

 

TAMIL
  • உலகளவில் நிகர சொத்துமதிப்பு மற்றும் வருவாயின் அடிப்படையில் கம்பெனிகளை ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி வருகிறது. 
  • அந்தவகையில், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 2,000 நிறுவனங்களின் தரவரிசையை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
  • அதில், இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 
  • இதேபோல், தனியார் துறை வங்கிகளான ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி ஆகியவை இந்திய நிறுவனங்களின் பட்டியலில் 3 மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளன.
  • அதேநேரத்தில் உலகளவில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டை விட, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி 53வது இடத்தை பெற்றுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 105வது இடத்திலும், எச்டிஎஃப்சி வங்கி 153வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கி 204வது இடத்திலும் உள்ளன.
  • இந்த பட்டியலில் உள்ள மற்ற டாப் 10 இந்திய நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான (ONGC) உலகளவில் 228வது இடத்திலும், இந்திய அளவில் 5வது இடத்திலும் உள்ளது.
  • இந்த பட்டியலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் (TCS) உலகளவில் 384 வது இடத்திலும், இந்திய அளவில் 8வது இடத்திலும் உள்ளது.
  • முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 90.7 அமெரிக்க பில்லியன் டாலர்களாக இருந்தது. இதன்மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 10வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் மார்ச் 2022 முதல் ஏப்ரல் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிய முதல் நிறுவனம் என்ற சிறப்பையும் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
ENGLISH
  • Forbes Global ranks 2000 companies annually in terms of net asset value and revenue worldwide. As such, Forbes has released a ranking of the top 2,000 companies in the world for 2022.
  • Among them, Reliance Industries has topped the list of largest companies in India. State Bank of India is in 2nd place. Similarly, private sector banks like ICICI and HDFC are ranked 3rd and 4th in the list of Indian companies.
  • At the same time, Reliance Industries is currently ranked 53rd globally, two places ahead of last year. State Bank of India is ranked 105th, HDFC Bank 153rd and ICICI Bank 204th.
  • Among the other top 10 Indian companies on the list, the state-owned Oil and Natural Gas Corporation (ONGC) is ranked 228th globally and 5th in India. Tata Consultancy Services Limited (TCS) is ranked 384th globally and 8th in India in this list.
  • Earlier this year, Ambani's net worth stood at $ 90.7 billion, according to Forbes' list of the world's richest people. This makes him the 10th richest person in the world.
  • Reliance also became the first company in India to earn US $ 100 billion between March 2022 and April 2022.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel