TAMIL
- உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை வளர்ந்து வரும் வேகமான காலத்தில் காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day) அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) தினமாக கொண்டாட பரிந்துரைத்தது.
- அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது.
- இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு பரிந்துரைத்தது. அதன் படி இந்நாளில்
- கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது
- கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம் (Monument), தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது
- இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது
- பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது
- புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள்(Stamps), போன்றவற்றை அச்சிடுவது
- பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது
- பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது
- 1983 ஆம் ஆண்டு முதல், நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் பற்றிய சர்வதேச கவுன்சில் ஒரு கருப்பொருளை அமைத்துள்ளது, இது நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. 2022 உலக பாரம்பரிய தினத்தின் தீம் "மரபு மற்றும் காலநிலை"
- April 18 has been declared World Heritage Day to preserve the growing variety of heritage glories of every country, region and every race in the world at a fast paced age.
History
- A conference in Tunisia in 1982 recommended that April 18 be celebrated as International Day for Monuments and Sites.
- It was recognized by UNESCO the following year. This is what later became World Heritage Day. It is celebrated with the aim of creating awareness among the people about their socio-cultural heritage.
- It also inspires people to protect and care for places of traditional pride.
- The conference suggested what could be done on this day. According to it today
- Setting up and describing building glories in exhibitions
- Allowing people to visit this one day memorial, monument, sites for free
- Informing people about this day through the media
- Conducting discussions in public places
- Printing of books, stamps, etc.
- Giving special gifts to those who have preserved the heritage
- Conducting programs among school students and youth
- Since 1983, the International Council on Monuments and Sites has set a theme that focuses on events. The theme of World Heritage Day 2022 is "Heritage and Climate"