Type Here to Get Search Results !

TNPSC 8th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பில் கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தொடர்பாக கேரளா, தமிழகம் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. 
  • கடந்த 2005-ம் ஆண்டில் அணை கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு ஆய்வு செய்து, அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்தது. மேலும், அணை பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த குழுவின் செயல்பாட்டுக்கு கேரள அரசு தடையாக உள்ளது.
  • இந்தச் சூழலில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீர் தேக்கி வைக்கும் அளவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இரு மாநிலங்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
  • இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. 
  • இந்த வழக்கில் தமிழக, கேரள அரசுகள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. வழக்கு விசாரணையின்போது முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு குழுவை மாற்ற வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
  • இதைத் தொடர்ந்து நீதிபதி கான்வில்கர் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. 
  • முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவில் மத்திய நீர் ஆணையத்தை சேர்ந்த பிரதிநிதி மற்றும் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதி இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. 
  • கண்காணிப்புக் குழுவை மேலும் வலுப்படுத்த தமிழகம், கேரளாவில் இருந்து கூடுதலாக தலா ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அடுத்த 2 வாரங்களில் இரு மாநில அரசுகளும் கூடுதல் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.
  • கண்காணிப்புக் குழுவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் குழு தனது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும். அணையின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும்.
  • இந்தக் குழுவின் உத்தரவுகளை இரு மாநில தலைமைச் செயலாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதற்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆவர். கண்காணிப்புக் குழுவுக்கு இரு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அணையின் பராமரிப்புப் பணிகளை குறித்த காலத்தில் மேற்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்புச் சட்டத்துக்கு கடந்த 2021 டிசம்பர் 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அணைகளின் பராமரிப்பு, செயல்பாடு தொடர்பான அனைத்து அம்சங்களும் புதிய சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • புதிய சட்டத்தின்படி தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழு தொடர்ந்து செயல்படலாம். 

செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் 8ம் தேதி நடந்தது. இதில், மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைப்புகள், செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்துள்ளன. எனவே, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பொது வினியோக திட்டம், உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக, மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை, ஆண்டுக்குள் மூன்று கட்டமாக வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதற்கு 4270 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. 
  • 9 சக்திகள் அடக்கம்நாடு முழுதும், பலர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். இவர்கள் ரத்தசோகை, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 
  • இந்நிலையில், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. இதற்காக, அரிசி மாவில், இரும்பு சத்து, போலிக் அமிலம், 'வைட்டமின் - பி௧2' உள்ளிட்ட ஒன்பது ஊட்டச் சத்துக்கள் சேர்க்கப்பட்டு, இயந்திரங்கள் உதவியுடன் அரிசி வடிவில், செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும். பின், 100 அரிசிக்கு, ஒரு செறிவூட்டப்பட்ட அரிசி என்ற வீதத்தில் சேர்க்கப்படும்.

'அனிமேஷன்' துறையை ஊக்குவிக்க பணிக்குழு அமைத்தது மத்திய அரசு

  • அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ்' துறைகளில், 2025க்குள் 5 சதவீத சர்வதேச சந்தை மதிப்பை கைப்பற்றும் திறன் நம் நாட்டுக்கு உள்ளது. இதன் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
  • ஆண்டுதோறும் 1.60 லட்சம் வேலை வாயப்புகளை உருவாக்க கூடிய இத்துறை, ஆண்டுக்கு 25 - 30 சதவீத வளர்ச்சி அடைய உள்ளது.
  • தேசிய கொள்கை எனவே, இத்துறையை ஊக்குவிக்கவும், இது தொடர்பான உயர் கல்விக்கான தேசிய பாட திட்ட கட்டமைப்பை பரிந்துரைக்கவும் பணிக்குழு உருவாக்கப்பட்டுஉள்ளது. 
  • இத்துறையில் அதிக எண்ணிக்கையிலான இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்க்க இப்பணிக்குழு ஈடுபடும். இந்த குழுவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலர் தலைமை வகிப்பார். 
  • இதில், மத்திய திறன் மேம்பாட்டுத்துறை, உயர்கல்வித்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை செயலர்கள் இடம் பெறுவர்.
  • இந்த பணிக்குழு தங்கள் முதல் செயல் திட்ட அறிக்கையை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும். இத்துறை தொடர்பான தேசிய கொள்கை வகுக்கும் பொறுப்பையும் இக்குழு ஏற்கும்.

இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

  • நீண்ட தூரம் சென்று எதிரி ஏவுகணையை விண்ணிலேயே இடை மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. எனப்படும், பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. 
  • இந்த ஏவுகணை, ஒடிசா சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஆய்வு மையத்தில் ஏப். 08 வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியத்திற்கும் மங்கோலியாவின் நிதி ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் இடையே கையெழுத்திட உத்தேசித்திருக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி, தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியத்திற்கும் மங்கோலியாவின் நிதி ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் (எஃப்ஆர்சி) இடையே கையெழுத்திட உத்தேசித்திருக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • பங்குகள் ஆணையங்களின் பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான சர்வதேச அமைப்பின் இணை கையெழுத்தாளராக செபி போன்று எஃப்ஆர்சி-யும் உள்ளது.  
  • இருப்பினும் இந்த அமைப்பு தொழி்ல்நுட்ப உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்பில்லை. தற்போதைய உத்தேச இருதரப்பு  பரிந்துணர்வு ஒப்பந்தம்  பங்குச் சந்தைகள் தொடர்பான  சட்டங்களை தீவிரவமாக அமல்படுத்துவதற்கு தேவையான தகவல்களை பகிர்வதற்கான பங்களிப்பை வலுப்படுத்தும். 
  • மேலும், தொழில்நுட்ப உதவித் திட்டத்தை உருவாக்கவும் உதவி செய்யும்.  மூலதனச் சந்தை, திறன் கட்டமைப்புச் செயல்பாடுகள், ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் போன்றவை தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்க  தொழில்நுட்ப உதவித்திட்டம்  பயன்படும்.
அடல் புத்தாக்க இயக்கத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடல் புத்தாக்க இயக்கத்தை (ஏஐஎம்) 2023 மார்ச் மாதம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 
  • நாட்டில் தொழில் முனைவு சூழல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அடல் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகிறது.
  • மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து ஏஐஎம் மேலும் அதிக பொறுப்புணர்வுடன் அனைவருக்குமான புத்தாக்க சூழலை உருவாக்க வழி ஏற்பட்டுள்ளது.
செயல்படாத நிலக்கரி சுரங்கங்களை அபராதம் இன்றி ஒப்படைக்க அரசு நிறுவனங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்
  • செயல்படாத சுரங்கங்களை அபராதமின்றி மற்றும் எந்த காரணத்தையும் குறிப்பிடாமல் ஒப்படைக்க மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்குவதற்கான நிலக்கரி அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு  ஒப்புதல் அளித்துள்ளது.
  • நிலக்கரி சுரங்கங்களை ஒப்படைக்க கொள்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத கால அவகாசம் அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
  • 2021 டிசம்பர் வரை அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 73 நிலக்கரி சுரங்கங்களில் 45 சுரங்கங்கள் செயல்படாமல் இருந்தன, மேலும் 19 நிலக்கரி சுரங்கங்களில் சுரங்கச் செயல்பாடுகள் தொடங்குவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஒதுக்கீட்டாளர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.
  • நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் நிலக்கரி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான நிலக்கரிச் சுரங்கங்கள், தொழில்நுட்பச் சிக்கல்களை நீக்கி, எல்லைகளை சரிசெய்த பிறகு விரைவாக மறுசுழற்சி செய்து, ஆர்வமுள்ள தரப்பினருக்கு வழங்கப்படலாம்.
  • இந்த நடவடிக்கை மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், முதலீடு அதிகரிக்கும். நாட்டின் பின்தங்கிய பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பங்களிக்கும். நாட்டில் நிலக்கரி இறக்குமதியை இது குறைக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel