TNPSC 27th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

அமிர்தாஞ்சன் நிறுவனத்துக்கு 'டெக்னோ 2022' விருது

 • அமிர்தாஞ்சன் ஹெல்த் கேர் நிறுவனம் 128 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும். இந்நிறுவனம் கரோனா பாதிப்பு காலகட்டத்தில் சிறந்த செயல்திறன் மற்றும் நீடித்த முன்னேற்றத்துடன் செயல்பட்டதால் அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்பால் (AIMO) சிறந்த கார்ப்பரேட் நிறுவனத்துக்கான 'டெக்னோ 2022' விருது வழங்கப்பட்டுள்ளது.
 • இந்த விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க அமிர்தாஞ்சன் ஹெல்த் கேர் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.சம்பு பிரசாத் பெற்றுக்கொண்டார். 

கரீப் பருவத்திற்கான உர மானியம் 60,939 கோடி - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

 • பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. ஒன்றிய உரத் துறை பரிந்துரைப்படி, கரீப் பருவத்தில் (2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் ரூ.60,939 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 • கடந்த நிதியாண்டில் ரூ.57,150 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கான மானியம் ரூ.2,501 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 • எனவே, விவசாயிகள் டிஏபி உரத்தை மூட்டை ஒன்று ரூ.1,350 என்ற விலையில் தொடர்ந்து வாங்கலாம். கடந்த 2020-21ல் இந்த மானியம் ரூ.512 வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,501 ஆக அதிகரித்துள்ளது. 
 • உலக சந்தையில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அந்த சுமையை விவசாயிகள் மீது சுமத்தாமல் இருக்க ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

மனிதாபிமான வெளியேற்றம் - ஐ.நா தலைவர், புடின் பேச்சில் ஒப்பந்தம்

 • போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார்.
 • அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். நேற்று அதிபர் புடினை சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை அப்பட்டமான மீறல். 
 • மரியுபோலில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்று புடினிடம் அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டார். 
 • இதையடுத்து, அங்குள்ள பொதுமக்களை மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்ற புடின், அன்டோனியோ குட்டெரெசிடம் ஒப்புக்கொண்டார்.

போலந்து, பல்கேரியாவுக்கு எரிவாயு நிறுத்தம் - ரஷியா அதிரடி

 • எங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் எரிவாயுவுக்கான தொகையை ரூபிளில் செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
 • எனினும், அவ்வாறு தொகை செலுத்தாத போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் புதன்கிழமை முதல் நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே பெற்ற எரிவாயுவுக்கான தொகையை அந்த நாடுகள் ரூபிளில் செலுத்தாதவரை இந்தத் தடை தொடரும்.
 • மற்ற நாடுகளுக்காக குழாய் மூலம் அனுப்பப்படும் எரிவாயுவை போலந்தும் பல்கேரியாவும் அனுமதி பெறாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது. 
 • அவ்வாறு அவை எடுத்துக்கொண்டால், எந்த அளவுக்கு எடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு மற்ற நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் குறைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 • இந்த நிலையில், ரஷிய எரிவாயுவை பெரிதும் சாா்ந்துள்ள போலந்து மற்றும் பல்கேரியாவுக்கு அந்த எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக தற்போது கேஸ்ா்போம் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட ஆறு முக்கிய விவகாரங்கள் குறித்த ரைசினா சர்வதேச மாநாடு
 • தலைநகர் டெல்லியில் ரைசினா சர்வதேச மாநாடு நடைபெற்றது. பருவநிலை மாற்றம் உக்ரைன் போர் உள்ளிட்ட ஆறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
 • இந்தாண்டு இந்தியா தலைமை வகிக்க இந்த மாநாட்டில் போலந்து உள்ளிட்ட 90 நாடுகளை சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 • மாநாட்டின் இறுதி நாளில் உக்ரைன் போர் போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக சில ஐரோப்பிய நாடுகள் சுட்டிக் காட்டியதோடு, உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டுமென்ற ரீதியில் பேசின. 
 • இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், " கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும்.
 • அந்நாட்டு மக்கள் என்ன பாடுபட்டனர் என்பதை நாம் யாரும் மறக்கவில்லை. அதைப் போலத்தான் தற்போதைய உக்ரைன் நிலையும் இருக்கிறது. 
 • இது ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு அறைகூவலாக கூட இருக்கலாம். ஆசியாவில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்ட போது ஐரோப்பிய நாடுகள் எங்கே போயிருந்தன?
 • உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. போரை நிறுத்திவிட்டு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம். 
 • உக்ரைனில் நடந்து வரும்போரை உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகளைதான் நாம் காண வேண்டும். போரை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும்.
 • உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுக்கவைக்க மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்தியா இருபக்கமும் சாரா நிலையை எடுத்தது.
சாலையோர வியாபாரிகளுக்கு 8,100 கோடி ரூபாய் வரை கடன் அளிக்க ஒப்புதல் - மத்திய அரசு
 • பிணை இல்லாத குறைந்த வட்டியிலான கடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரித்தல் மற்றும் சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முழுமையான சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 • இத்திட்டத்தின் மூலம், சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் பிணையில்லா கடன்கள் வழங்கப்படுகின்றன. 5,000 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது 8,100 கோடி ரூபாய் கடன் தொகையாக அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 
 • இதன்மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு அவர்களின் வணிகத்தை மேலும் விரிவுபடுத்தவும், அவர்களை தன்னிறைவு அடைபவராகவும் மாற்றுவதற்கான மூலதனத்தை வழங்குகிறது. 
 • விற்பனையாளர்களுக்கு கேஷ்பேக் உட்பட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான பட்ஜெட் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் 1.2 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் சுயசார்பு நிதித் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 
 • கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 31.9 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டு, அவற்றில் 29.6 லட்சம் பேருக்கு கடனாக 2,931 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 
 • 2-வது கடனைப் பொருத்தவரை, 2.3 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டு, 1.9 லட்சம் பேருக்கு 385 கோடி ரூபாய் கடன் தொகையாக வழங்கப்பட்டுள்ளன. 
 • பயனாளிகளான சாலையோர வியாபாரிகள் 13.5 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு 10 கோடி ரூபாய் கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது. வட்டி மானியமாக 51 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியை அமைப்பதற்கான திருந்திய மதிப்பீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியை அமைப்பதற்கான திருந்திய மதிப்பீடான ரூ.1,435 கோடியிலிருந்து ரூ.2,255 கோடியை பங்கு முதலீடாக வழங்கி அந்த வங்கியின் கட்டுப்பாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 • கட்டுப்பாட்டுத் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, இந்த வங்கியின் எதிர்கால மூலதனமாக ரூ.500 கோடி வரை வழங்கவும் அமைச்சரவை கொள்கை ரீதியான அனுமதி அளித்துள்ளது. 
லித்துவேனியாவில் இந்திய தூதரகத்தை திறக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
 • 2022-ல் லித்துவேனியாவில் இந்திய தூதரகத்தை திறக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 • இந்த முடிவு அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற நமது தேசிய முன்னுரிமையை தொடர்வதற்கான முன்னோக்கிய நடவடிக்கையாகும். 
 • இந்தியாவின் தூதரக உறவுகள் விரிவுப்படுத்தப்படுவது இந்திய நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதற்கும், பொருள்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் உதவும். இந்த தூதரகம் லித்துவேனியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு நன்கு உதவிசெய்யும் அவர்களின் நலன்களை பாதுகாக்கும்.
மாற்றுத்திறனாளிகள் துறையில் இந்தியா - சிலி நாடுகளிடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்
 • மாற்றுத்திறனாளிகள் துறையில் இந்தியா - சிலி நாடுகளிடையே  ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
 • மாற்றுத்திறனாளிகள் துறையில் பரஸ்பரம் இருநாடுகளிடையேயான  புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா - சிலி இடையே  மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். இது இந்தியா மற்றும் சிலி இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
 • மாற்றுத்திறனாளிகள் துறையில் குறிப்பாக பின்வரும் துறைகளில் ஒத்துழைக்க விரும்புவதை வெளிப்படுத்தும் ஒரு கூட்டு ஒப்பந்தம் இவ்விரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது:
 • மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளை வகுத்து சேவைகளைவழங்குதல் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
 • தகவல் மற்றும் அறிவு பரிமாற்றம்.
 • உதவி சாதன தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு.
 • மாற்றுத்திறனாளிகள் துறையில் பரஸ்பர ஆர்வமுள்ள திட்டங்களின் வளர்ச்சி.
 • இயலாமை  குறித்து முன்கூட்டியே கண்டறிந்து  அதனை தடுப்பது.
 • நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற நிர்வாக ஊழியர்களின் கருத்துப் பரிமாற்றம்.
 • இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட தேவையான நிதியுதவியைப் பெற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. 
 • அத்தகைய நடவடிக்கைகளுக்கான செலவுகள் நிதி மற்றும் வளங்களின் கையிருப்பிற்கு  உட்பட்டு நடவடிக்கைகளின் அடிப்படையில் இரு தரப்பிலும் பரஸ்பரம் தீர்மானிக்கப்படும். 
 • கூட்டு நடவடிக்கைகளுக்கான சர்வதேச பயணம் / தங்குமிடத்திற்கான செலவை வருகை தரும் நாடு ஏற்றுக்கொள்ளும், அதே வேளையில் கூட்டத்தை நடத்துவதற்கான செலவு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்  நாடு  ஏற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • இந்தியா - சிலி நாடுகளிடையேயான உறவுகள் பல்வேறு விவகாரங்களில் பொதுவான பார்வையின் அடிப்படையில் நட்பு ரீதியில் அமைந்துள்ளது.  2019-20-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக  ரீதியிலான உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக்  குறிக்கிறது.
இடதுசாரி அதிதீவிரவாதம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்குரிய இடங்களில் 2ஜி செல்பேசி சேவைகளை 4ஜி ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
 • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, இடதுசாரி அதிதீவிரவாதம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்குரிய இடங்களில் 2ஜி செல்பேசி சேவைகளை 4ஜி ஆக உயர்த்த அனைத்து சேவை பொறுப்பு  நிதியத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 • முதல்கட்டத்தில் 2,343 இடங்களை மேம்படுத்த (வரிகள் மற்றும் தீர்வைகள் நீங்கலாக) ரூ.1,884.59 கோடி செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
 • இந்த இடங்களை பிஎஸ்என்எல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதன் சொந்த செலவில் பராமரிக்கும். இந்த இடங்கள் பிஎஸ்என்எல்-க்கு சொந்தமாக இருப்பதால் இந்தப் பணி பிஎஸ்என்எல்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
 • இடதுசாரி அதிதீவிரவாதம் உள்ள பகுதிகளில் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கான ஐந்தாண்டு ஒப்பந்தக்காலத்திற்கு பின் ரூ.541.80 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 • இதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த தேதியில் இருந்து அல்லது 4ஜி சேவைகள் தொடங்கியதில் இருந்து 12 மாதங்கள் வரை இந்த நீடிப்பு இருக்கும்.
540 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள க்வார் புனல்மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
 • ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ.4526.12 கோடி முதலீட்டில் 540 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள க்வார் புனல்மின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
 • தேசிய புனல் மின் கழகம், ஜம்மு காஷ்மீர் மாநில மின் உற்பத்தி மேம்பாட்டு கழகமும், செனாப் பள்ளத்தாக்கு மின் உற்பத்தி திட்டத்திற்கான தனியார் நிறுவனமும் இணைந்து இதனை அமலாக்கும். 
 • இதில் 51 சதவீதம் தனியார் பங்களிப்பாகவும், 49 சதவீதம் அரசு கழகங்களின் பங்காகவும் இருக்கும். இந்த மின் திட்டம் ஆண்டுக்கு 1975.54 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.
 • இந்தத் திட்டத்திற்கு அடிப்படை கட்டமைப்பு செலவுக்காக மத்திய அரசு ரூ.69.80 கோடி மானியமாக வழங்குகிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உதவியாக ரூ.655.08 கோடி மானியமாக வழங்கப்படும். இந்த மின் திட்டம் 54 மாதக்காலத்தில் செயல்படத்தொடங்கும்.

0 Comments