Type Here to Get Search Results !

TNPSC 23rd APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலகப் பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்பின் 3 விருதுகளுக்கு தமிழக அரசு தேர்வு

  • சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ஐசிஐடி) ஒவ்வோர் ஆண்டும் உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு விருதுகளை அறிவிக்கிறது.
  • இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும்வடிகால் குழுமம், ஒவ்வோர் ஆண்டும்இந்திய மாநிலங்களில் இருந்து, தகுதியான முன்மொழிவுகளை ஐசிஐடி அமைப்புக்கு பரிந்துரைக்கிறது.
  • இதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக நீர்வளத் துறை சார்பில்கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய 6 நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உலகப் பாரம்பரிய கட்டமைப்புகளாக அறிவிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
  • இதன் தொடர்ச்சியாக, உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி, காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு நாட்டுக்கும் 4 விருதுகள் சர்வதேச அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு 4 விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகம் 3 விருதுகள் பெறுவது குறிப்பிடத்தக்கது.
  • கல்லணை: வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லணை கி.பி. 2-ம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான அணையாகும். இது உலகின் 4-வது பழமையான நீர்மாற்று அமைப்பு அல்லது நீர் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பாகும். இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான கட்டமைப்பாகும்.
  • வீராணம் நீர்த்தேக்கம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் நீர்த்தேக்கம் 9-ம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது.
  • காளிங்கராயன் அணைக்கட்டு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைக்கட்டு 740 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு பகுதி மன்னரான காளிங்கராயக் கவுண்டரால் கட்டப்பட்ட பழமையான அணையாகும். இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான கட்டமைப்பாகும். தமிழகத்துக்கான 3 விருதுகளும் வரும் நவம்பர் 7-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
  • நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் பராமரித்தல் மற்றும் நீர்சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச அமைப்பால் இத்தகு விருது வழங்கப்படுவது மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
  • இதேபோல, 2022-ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகம் சார்பில் மேலும் 10-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான முன்மொழிவு அனுப்பப்பட உள்ளது.

தேசிய கம்யூ., பிரதிநிதியாக சீன அதிபர் ஜிங்பிங் தேர்வு

  • கடந்த, 2012ல் சீன அதிபராக பொறுப்பேற்ற ஜிங்பிங், 2017ல் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தாண்டு இறுதியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு நடக்க உள்ளது. 
  • இம்மாநாட்டு பிரதிநிதி தேர்விற்கு ஜிங்பிங்கை சீன கம்யூனிஸ்ட் மத்திய குழு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து மாகாண வாரியாக பிரதிநிதி தேர்வு நடந்து பெரும்பான்மை ஆதரவை பெறுவோர் கட்சித் தலைவராகி பின், அதிபராக தேர்வு செய்யப்படுவார். 
  • இதன்படி குவாங்ஸி மாகாணத்தில் நேற்று நடந்த பிராந்திய கம்யூ., கட்சி மாநாட்டில், 20வது தேசிய காங்., மாநாட்டு பிரதிநிதியாக, ஜிங்பிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2022
  • மங்கோலிய நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை வென்று குவித்துள்ளனர்.
  • கடந்த 1979 முதல் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் என மூன்று பிரிவுகளில் நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு எடை பிரிவுகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 
  • முக்கியமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெள்ளி வென்ற ரவி தாஹியா மற்றும் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவும் பதக்கம் வென்றுள்ளனர். 19 நாடுகளை சேர்ந்த 250 வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.
  • 57 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ரவி தாஹியா. 
  • 65 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் வெள்ளி வென்றார் பஜ்ரங் புனியா. 70 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார் நவீன். அர்ஜுன், சச்சின், ஹர்ப்ரீத், சுனில் குமார் ஆகியோர் கிரேக்க - ரோமன் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளனர்.
  • மகளிர் பிரிவில் அன்ஷு மாலிக் மற்றும் ராதிகா ஆகியோர் வெள்ளி வென்றார். சுஷ்மா, சரிதா, மனிஷா ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் நடைபெற்ற 105-வது வளர்ச்சிக்குழுவின் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்றார்
  • மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் நடைபெற்ற 105-வது வளர்ச்சிக்குழுவின் தொடக்கக் கூட்டத்தில்  பங்கேற்றார். 
  • டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் வளர்ச்சி, உக்ரைன் போரினால் உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து உலக வங்கிக்குழுவின் கருத்து உள்ளிட்டவை தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
  • அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர், நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விரைவடைந்து வருவதாகவும், மற்ற பெரிய பொருளாதார நாடுகளைவிட  அதிகரித்து வருவதாகவும் கூறினார்.  
  • கொவிட் தொற்று பாதிப்பை சிறந்த முறையில் இந்தியா எதிர்கொண்டதாகவும் இதுவரை 1.85 பில்லியன் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
என்எம்டிசி-க்கு மக்கள் தொடர்பு விருது 2022
  • தேசிய கனிமவள கழகம் என்எம்டிசி, இந்திய மக்கள் தொடர்பு சொசைட்டி வழங்கும்  2022-ம் ஆண்டுக்கான மக்கள் தொடர்பு விருதை தட்டிச்சென்றுள்ளது. நான்கு பிரிவுகளில் இது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • பெருநிறுவன வலைதளம், சிறப்பான ஆண்டு அறிக்கை, நியூஸ் லெட்டர் வடிவமைப்பு, சிஎஸ்ஆர் கார்பரேட் வீடியோ ஆகியவற்றுக்காக தேசிய கனிமவள கழகம் இந்த விருதைப் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel