Type Here to Get Search Results !

TNPSC 21st APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஜி - 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாடு

  • அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஜி - 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாடு நடந்தது. 
  • இந்தோனேஷியா தலைமையில் நடந்த இம்மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:  ''பணவீக்க உயர்வு உள்ளிட்ட சவால்களை சமாளித்து பொருளாதார வளத்தை மேம்படுத்த, 'ஜி - 20' நாடுகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
  • சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கூறியதாவது, இந்தாண்டு இந்திய பொருளாதாரம், 8.2 சதவீதம் வளர்ச்சி காணும் என, சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. இது, சீனாவின், 4.4 சதவீத வளர்ச்சியை விட இரு மடங்கு அதிகம். சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதத்தில் இருந்து, 3.6 சதவீதமாக குறையும். உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா பெற்று வருவது பாராட்டுக்குரியது. 
12வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர்
  • மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 12வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 27 மாநிலங்கள் பங்கேற்று கலந்துகொண்ட இந்த போட்டியில், தமிழ்நாடு அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறியது.
  • இறுதிப்போட்டியில் ஹரியானா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1- 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. 
  • டை பிரேக்கர் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி ஹரியானா அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

சிவில் சர்வீஸ் தினத்தில் பிரதமர் பேச்சு

  • டெல்லியில் நேற்று 15-வது சிவில் சர்வீஸ் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் இடையே பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
  • இந்திய சுதந்திரத்தின் பொன் விழா, கடந்த 70 ஆண்டுகளை புகழ்வதாக மட்டும் இல்லை. கடந்த 70 முதல் 75 ஆண்டு காலத்தை, நாம் வழக்கமானதாக கடந்திருக்கலாம். 
  • ஆனால் அடுத்த 25 ஆண்டு காலம் வழக்கமானதாக இருக்க முடியாது. அந்த 25 ஆண்டுகளில் நாட்டின் ஒற்றுமையை நிலை நாட்டுவது சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு. 
  • இதில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. நாம் எந்த முடிவு எடுத்தாலும், அது கிராமங்கள் அளவில் கூட நாட்டின் ஒற்றுமைக்கு தடையாக இருக்க கூடாது.
  • தொழில் முனைவோரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. இந்தாண்டின் முதல் காலாண்டில், 14 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
  • கடந்த 8 ஆண்டுகளில், மிகப் பெரிய மாற்றங்கள் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவை நடத்தை மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
  • இந்நிகழ்ச்சியில், அரசின் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புதுமையான திட்டங்களை திறம்பட அமல்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்ட 16 அதிகாரிகளுக்கு பிரதமரின் விருதுகளை, மோடி வழங்கினார்.

ஒன்றிய அரசின் டிரோன் தயாரிக்கும் திட்டத்திற்கு அண்ணா பல்கலை தக்‌ஷா குழு தேர்வு

  • நாட்டில் டிரோன்கள் தயாரிப்பு மற்றும் வடிமைப்பில் முன்னணியில் உள்ள 5 நிறுவனங்களை ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது
  • அதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு, ஒன்றிய அரசின் ஊக்கத்தொகையை பெறவும், ஒன்றிய விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து தேவையின் அடிப்படையில் டிரோன்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • அதேபோல் சென்னையை சேர்ந்த ஜூப்பா ஜியோ நேவிகேஷன் டெக்னாலஜிஸ் என்கிற டிரோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel