Type Here to Get Search Results !

TNPSC 20th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

75வது ஆண்டு ரஷ்யா - இந்தியா ராஜதந்திர உறவு

  • ரஷ்யா - இந்தியா ராஜதந்திர உறவு 75வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, ரஷ்ய தூதரகம் சார்பில் சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் வட்ட மேசை கல்ந்துரையாடல் நடைபெற்றது. 
  • இதில் தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதரக ஆலோசகர் ஒலெக் அவ்தீவ், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிளை செயலகத் தலைவர் வெங்கடாச்சலம் முருகன், இந்தோ - ரஷ்யன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனர் லட்சுமிநாராயணன், பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை சிவதாணு பிள்ளை, திராவிட கழக பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் வாக்‌ஷீர் சேர்ப்பு

  • கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் திட்டம் 75ன் கீழ் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை கடற்படையில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நான்காவது நீர்மூழ்கி கப்பல் கடந்த 2020ம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டு விட்டது. 
  • ஐந்தாவது நீர்மூழ்கி கப்பலின் சோதனைகள் கடந்த பிப்ரவரியில் தொடங்கின. இந்நிலையில், ஆறாவது கப்பலான ஐஎன்எஸ் வாக்‌ஷீர் கடற்படையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான மசகான் டாக் என்கிற கப்பல் தயாரிப்பு நிறுவனம், இந்த நீர்மூழ்கி கப்பலை கட்டமைத்துள்ளது.
  • பாதுகாப்பு துறை செயலர் அஜய்குமார் ஐஎன்எஸ் வாக்‌ஷீரை தொடங்கி வைத்து அறிமுகம் செய்து வைத்தார். இந்த கப்பல் ஒரு ஆண்டுக்கும் மேல் விரிவான மற்றும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, போரிடுவதற்கு ஏற்ப முழுமையான தகுதி வாய்ந்தது என்பது உறுதி செய்யப்படும். 
  • முதல் வக்‌ஷீர் நீர்மூழ்கி கப்பல் கடந்த 1974ம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. பின்னர் 1997ம் ஆண்டு கடற்படை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. வாக்‌ஷீர் அதன் முந்தைய ரகத்தின் சமீபத்திய நவீனமயமாகும்.

ஒரே நேரத்தில் இரு ஏவுகணைகளை ஏவி இந்தியா வெற்றிகரமாக சோதனை

  • ஒரே நேரத்தில் போர் விமானத்தில் இருந்தும், போர்க்கப்பலில் இருந்தும் இரு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவி ஒரே இலக்கை தாக்கி இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.
  • இந்திய விமானப்படையைச் சேர்ந்த சகோய் வகை விமானம் பறந்து கொண்டிருந்த போது அதிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டது.
  • இந்த ஏவுகணை கடலில் நின்றிருந்த பயன்பாடற்ற கப்பலை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை அறிவித்தது. இதே நேரத்தில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மற்றொரு பிரம்மோஸ் ஏவுகணையும் அந்த கப்பலை துல்லியமாக தாக்கியதாக இந்திய கப்பல்படை அறிவித்துள்ளது.
  • மணிக்கு 3000 கிமீ., வேகத்தில் பயணிக்கும் இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பது கடினம் என்று இந்திய விமானப்படை மற்றும் கப்பற்படை அறிவித்துள்ளன.
குஜராத்தின் டாஹோட் மற்றும் பஞ்ச்மஹாலில் ரூ.22000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்
  • டாஹோடில் பழங்குடி மக்கள் மகா சம்மேளன கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.22000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை  தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.  
  • ரூ.840 கோடி மதிப்பில் நர்மதா நதிப் படுகையில் கட்டப்பட்டுள்ள டாஹோட் மாவட்ட தெற்கு பிராந்திய குடிநீர் விநியோகத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.  
  • டாஹோட் பொலிவுறு நகரத்துக்கான ரூ.335 கோடி மதிப்புள்ள 5 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.  பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், பஞ்ச்மஹால் மற்றும் டாஹோட் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பில் பழங்குடி மக்களுக்கு 10,000 வீடுகள் வழங்கப்பட்டன.
  • டாஹோட் உற்பத்திப் பிரிவில் 9,000 குதிரைத் திறன் உள்ள  மின்சார எஞ்சின்கள் உற்பத்திக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  இந்த திட்டத்தின் செலவு ரூ.20,000 கோடியாகும்.    
  • இந்த திட்டத்தின்மூலம் 10,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  ரூ.550 கோடி மதிப்புள்ள மாநில அரசு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  
  • இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், திருமதி தர்ஷனா ஜர்தோஷ், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல், குஜராத் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காந்திநகரில் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • குஜராத் மாநிலம் காந்திநகர் மகாத்மா மந்திரில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உலகளவிலான ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். 
  • மொரீஷியஸ் பிரதமர் திரு.பிரவிந்த் குமார் ஜூக்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ்  கெப்ரியேசஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 
  • டாக்டர் மன்சுக் மாண்டவியா, திரு.சர்பானந்த சோனோவால், திரு.முஞ்சப்பாரா மகேந்திரபாய் ஆகிய மத்திய அமைச்சர்கள் குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திர பாய் பட்டேல் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். 
  • இந்த 3 நாள் உச்சி மாநாட்டில் 5 முழு அமர்வுகள், 8 வட்டமேஜை கூட்டங்கள், 6 பயிலரங்குகள், 2 கருத்தரங்குகள் ஆகியவை நடைபெறும். இதில் சுமார் 90 பிரபலமான பேச்சாளர்கள் பங்கேற்பார்கள். 
  • 100 கண்காட்சி நிறுவனங்கள் இடம்பெறும். முதலீட்டு ஆதாரத்தை கண்டறியவும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஸ்டார்ட் அப் சூழல், தொழில் நலன்களை மேம்படுத்தவும் இந்த உச்சிமாநாடு உதவும். தொழில் துறை முன்னணி நிறுவனங்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் ஆகியோரை ஒன்றுபடுத்தி எதிர்கால ஒத்துழைப்புக்கு இது உதவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel