Type Here to Get Search Results !

TNPSC 19th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்

  • ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 13 நாடுகளில் இருந்து 183 வீரர்கள் பங்கேற்ற செஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. 
  • இதில் தொடக்கம் முதலே தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் முன்னிலை வகித்தார். 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், ஒன்றில் கூட குகேஷ் தோல்வியடைவில்லை. 
  • 7 வெற்றி, இரண்டு டிரா என மொத்தம் 8 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்தார். மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா மூன்றாவது இடம் பிடித்தார். 

டில்லி தலைமை செயலராக நரேஷ் குமார் தேர்வு

  • டில்லி தலைமை செயலராக நரேஷ்குமார் நியமிக்கப்பட்டார். டில்லி தலைமை செயலராக இருந்த விஜய் தேவ், பணி நிறைவு பெற்றதையடுத்து புதிய தலைமை செயலரை தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.
  • இதையடுத்து அருணாச்சல பிரதேச மாநில தலைமை செயலரும், 1987 ஐ.ஏ.எஸ்., கேடருமான நரேஷ் குமார் , டில்லி தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது.

குஜராத்தில் உலக சுகாதார பாரம்பரிய மருத்துவ மையம் - பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

  • குஜராத்தின் ஜாம்நகரில் ரூ.250 கோடி செலவில் 35 ஏக்கர் பரப்பளவில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையத்துக்கான பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • இந்த விழாவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வங்கதேசம், பூடான், நேபாளத்தின் பிரதமர்கள் மற்றும் மாலத்தீவு அதிபர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக விழாவில் உரையாற்றினர்.
  • உலகின் முதல் ஆயுர்வேத பல்கலைக்கழகம் ஜாம்நகரில் தொடங்கப்பட்டது. இந்த நகரில் ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் செயல்படுகிறது. இங்கு உலக பாரம்பரிய மருத்துவ மையத்தின் இடைக்கால அலுவலகம் செயல்படும்.

2022 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சியை குறைத்த சர்வதேச நிதியம்

  • நடப்பு 2022 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி "மிகவும் வலுவானதாக" 8.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இது சீனாவின் 4.4 சதவீத வளர்ச்சியை விட இரண்டு மடங்கு வேகம் ஆகும். 
  • இதன் மூலம் உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறி உள்ளது. 2021இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது. 
  • 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் எனச் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

விப்ரோ இந்தியாவின் புதிய தலைவராக சத்யா ஈஸ்வரன் நியமனம்

  • முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் இந்திய பிரிவின் புதிய தலைவராக சத்யா ஈஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • மகாராஷ்டிராவைச் சேர்ந்த சத்யா மும்பை பல்கலைக்கழகத்தில் எல்க்டாரனிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்று, நிதி பிரிவில் எம்பிஏ முடித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் சன்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகம் பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
  • கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தில் பிஸ்னஸ் கன்சல்டிங், தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் தலைவராக சத்யா இருந்துள்ளார். இவர் மென்பெருள் சேவை, கிளவுட் தொழில்நுட்பம், டிஜிட்டல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

வேளாண்மை- கரீஃப் இயக்கம் – 2022 குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய வேளாண் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

  • கரீஃப் இயக்கம் 2022-23 க்கான வேளாண்மை குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் புதுதில்லியில்  தொடங்கி வைத்தார்.  
  • பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, முக்கியமான இடுபொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வது ஆகியவற்றுடன் மாநில அரசுகளுடன் கலந்து பேசி முந்தைய பயிர் பருவங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து கரீஃப் பருவத்திற்கு பயிர் வாரியான இலக்குகளை ஆய்வு செய்வது இந்த கருத்தரங்கின் நோக்கமாகும். 
  • 2022-23 ஆம் ஆண்டுக்கான மொத்த உணவு தானிய உற்பத்திக்கு 3,280 லட்சம் டன் இலக்கினையும், பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 295.5 மற்றும் 413.4 லட்சம் டன்களாக இந்த கருத்தரங்கில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
ஸ்மார்ட் நகரங்கள், ஸ்மார்ட் நகரமயமாக்கல்'
  • "ஸ்மார்ட் சிட்டிகள், ஸ்மார்ட் நகரமயமாக்கல்" நிகழ்வின் 2-ம் நாள், நகர்ப்புறத் துறை சார்ந்த ஐந்து கருப்பொருள் பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சுவாரசியமான அமர்வுகளுடன் தொடங்கியது. பொது இடங்கள், டிஜிட்டல் ஆளுகை, பருவநிலை ஸ்மார்ட் நகரங்கள், புத்தாக்கம் மற்றும் ஸ்மார்ட் நிதி வசதி ஆகியவை அவை ஆகும்.
  • 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் 'விடுதலையின் அமிர்தப் பெருவிழா’-வின் ஒரு பகுதியாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் குஜராத்தின் சூரத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு 18.4.2022 அன்று பிரமாண்டமாக தொடங்கியது.
  • திட்டமிடப்பட்ட பராமரிப்புக்கான தொழில் நுட்பப் பயன்பாடு, சொத்து வரி மேம்பாடு, சுத்தமான காற்று, நீர் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கான செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் உள்ள நகரங்களுக்கான தீர்வுகள் குறித்து ஆர்வத்தை அமர்வில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் வெளிப்படுத்தினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel