Type Here to Get Search Results !

TNPSC 18th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டி - நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்

 • டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 800 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் வேதாந்த், பந்தய தூரத்தை 8:17.28 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். 
 • நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும். கடந்த சனிக்கிழமை நடந்த 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
 • வேதாந்த், கடந்த ஆண்டு நடந்த லத்வியா ஓபனில் வெண்கலப் பதக்கமும், அதே ஆண்டில் நடந்த ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் 4 வெள்ளி, 3 வெண்கலபதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.

சிறந்த திருநங்கை விருது வழங்கி சிறப்பித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 • 'சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில் 2022-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு வழங்கினார்.
டிட்கோ-அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம் தமிழகத்தில் ரூ.141 கோடி முதலீட்டில் விமான இயந்திர ஆராய்ச்சி மையம்
 • தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) அமெரிக்காவில் விமான இயந்திரம் தயாரிக்கும் ஜிஇ ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து ₹141 கோடி முதலீட்டில், விமான இயந்திர தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 
 • இந்த தொகையை டிட்கோ, ஜிஇ ஏவியேஷன் நிறுவனங்கள் 2 கட்டங்களாக முதலீடு செய்ய உள்ளன. விமான எந்திரங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்களில் தொழில்நுட்ப மேம்பாடு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்
இலங்கையில் அமைச்சரவை விரிவாக்கம் புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்பு
 • பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்பதற்காக சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எப்) ரூ.30 ஆயிரம் கோடி நிதிஉதவி பெற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. 
 • இதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. இந்நிலையில் புதிதாக 17 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். 
 • அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 • விமலவீர திசாநாயக-வனத்துறை, மோகன், பிரியதர்ஷ்ன டி சில்வா - குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 • தற்போது ராஜபக்சே குடும்பத்தில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே மட்டுமே பதவி வகிக்கின்றனர். விரைவில் இவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் பதவி நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மாலத்தீவுகள் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து
 • இந்தியா, மாலத்தீவு நாடுகள் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காக இந்திய மானிய உதவித் திட்டத்தின் கீழ் ஏப்.,18 ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
 • இதில் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாகித் மற்றும் இந்திய உயர் ஆணையர் முனு மஹாவர்(ஐ கமிஷனர்) உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ஏறக்குறைய 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
2013-14-ம் ஆண்டில் இருந்து நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 291% வளர்ச்சி அடைந்துள்ளது
 • கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 1,177 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி  2021-22-ம் நிதியாண்டில் 4600 மில்லியன் அமெரிக்க டாலராக 291% அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 
 • வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளிவிவர இயக்குநரகத்தின் தரவுகளின்படி, இந்தியா உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.
 • சர்க்கரை ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 2021-22-ம் ஆண்டில் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக சரக்கு கட்டணங்கள், கொள்கலன் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள்  மற்றும் COVID19 தொற்று பாதிப்பு காரணமாக  ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 14.55%
 • மார்ச் 2021-ல் 7.89% ஆக இருந்த வருடாந்திர பணவீக்கம் மார்ச் 2022-ல் 14.55% (தற்காலிகமாக) ஆக உள்ளது. இந்த பணவீக்க அதிகரிப்புக்கு, ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகளால் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தாது எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் விலை அதிகரித்ததே காரணமாகும்.
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் பாண்டே நியமனம்
 • இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக, ராணுவத்தின் துணைத் தளபதி லெஃப்டினண்ட் ஜென்ரல் திரு. மனோஜ் சி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏப்ரல் 30, 2022 மதியம் முதல் தலைமைத் தளபதியாக இருப்பார். 
 • திரு. மனோஜ் சி பாண்டே 1982 டிசம்பர் 24 ஆம் தேதி ராணுவத்தின் பொறியாளர் பிரிவில் இணைந்தார். தனது 39 வருட பணி அனுபவத்தில், பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். 
 • மேலும், அந்தமான் நிகோபார் தீவுகள் ராணுவக் கமாண்டர் ஆகவும், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு பிராந்திய ராணுவத் தலைமையகத்தின் தலைமைக் கமாண்டர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel