பி.எஸ்.எப்., படையில் 9,550 வீரர்கள் சேர்ப்பு
- நம் நாட்டில் சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுத காவல் படையின்கீழ், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட ஏழு படைப் பிரிவுகள் உள்ளன.
- இதில் இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்தியா - வங்கதேசம் எல்லை பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் பி.எஸ்.எப்., படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- இவர்கள், எல்லை பகுதியில் அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகளை ஒடுக்குவது, போதைப் பொருள் கடத்தலை தடுப்பது ஆகிய பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
- பி.எஸ்.எப்., படையில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஏப்ரல் 13 வரையிலான மூன்றரை மாதங்களில், 9,550 பேர் இணைந்துள்ளனர். இதில், 1,700 பேர் பெண்கள். வரும் நாட்களில் பயிற்சி முடிக்கும் மேலும் சில வீரர் வீராங்கனையரும் படையில் இணைக்கப்பட உள்ளனர்.
இந்தியாவில் சிறு விவசாயிகள் வருமானம் 10% உயர்கிறது - உலக வங்கி அறிக்கை
- இந்தியாவில் வறுமை பற்றிய உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கையில், அதிக அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுடன் ஒப்பிடும் போது, சிறியளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ச்சியடைவதாக கூறியுள்ளனர்.
- அதிகளவு நிலம் வைத்துள்ளவர்களின் வருமானம் 2 சதவீதமே அதிகரிக்கிறதாம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது ஆனால் முன்பு நினைத்த அளவு இல்லை என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது.
- உலக வங்கியின் இந்த ஆய்வறிக்கையினை பொருளாதார வல்லுனர்கள் சுதிர்தா சின்ஹா ராய் மற்றும் ராய் வேன் டெர் வைட் எழுதியுள்ளனர்.
- இந்த ஆய்வறிக்கைகளின் நோக்கம் வளர்ச்சி குறித்த கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிப்பது மற்றும் ஆய்வு கண்டுபிடிப்புகளை விரைவாக பரப்புவது ஆகும்.
- கடந்த வாரம் வெளியான ஐ.எம்.எப்., அறிக்கை, இந்தியாவில் இலவச உணவு தானியத் திட்டம் 2020ல் தீவிர வறுமையை 0.86 சதவீதமாகக் கட்டுப்படுத்தியதாகக் கூறியது.
- 2011 முதல் 2019 வரை கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை முறையே 14.7 மற்றும் 7.9 சதவீதம் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவை விட கிராமப்புறங்களில் வறுமை அளவு அதிகம் குறைந்துள்ளது.
- கிராமப்புற வறுமை 2011ல் 26.3 சதவீதமாக இருந்தது. அது 2019ல் 11.6% ஆகக் குறைந்துள்ளது. அதே சமயத்தில் நகர்ப்புற வறுமை 14.2 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக குறைந்துள்ளது.2016ல் நகர்ப்புற வறுமை 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அது தற்செயலாக பணிமதிப்பிழப்புடன் ஒத்துப்போகிறது.
- கிராமப்புற வறுமை 2019ல் 10 அடிப்படை புள்ளிகள் உயர்ந்தன. அது தற்செயலாக பொருளாதார மந்தநிலையுடன் ஒத்துப்போகிறது. 2013 மற்றும் 2019ல் நடந்த இரண்டு கட்ட ஆய்வில் சிறியளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளின் ஆண்டு வருமானம் 10 சதவீதம் வளர்ந்துள்ளது.
- பெரியளவு நிலம் வைத்திருப்பவர்களின் வருமானம் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.