Type Here to Get Search Results !

TNPSC 16th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் வெள்ளி பதக்கம் வென்றார்

  • தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் மாதவன், இந்தியிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பான் இந்தியா நடிகராக (Pan india actor) திகழ்கிறார். 
  • இவரது மகன் வேதாந்த் மாதவன் நீச்சல் வீரராக திகழ்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்து வருகிறார்.
  • அந்தவகையில், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் (copenhagen) நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் மாதவன், 1500 மீட்டர் free பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியின் 200 மீட்டர் Fly பிரிவில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தங்கம் வென்றார்.

பாகிஸ்தான் பார்லி., சபாநாயகராக முன்னாள் பிரதமர் ராஜா பெர்வாயிஸ் அஷ்ரப் தேர்வு

  • பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான், பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
  • இதைத் தொடர்ந்து, எதிர்க் கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணியில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடத்த விரும்பாமல், அவருடைய கட்சியைச் சேர்ந்த ஆசாத் காசிர், சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். 
  • இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. தற்போது ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு, சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டது.
  • அக்கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜா பெர்வாயிஸ் அஷ்ரப் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் “உடான்“ திட்டம், தலைசிறந்த பொது நிர்வாகத்திற்கான பிரதமரின் விருதுக்கு தேர்வு
  • மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின், பிராந்திய இணைப்புக்கான முன்னோடித் திட்டமான உடான், 2020-ம் ஆண்டுக்கான பொது நிர்வாகப் பிரிவில் சிறந்த திட்டத்திற்கான பிரதமரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.   “மத்திய அரசின் புதுமைக் கண்டுபிடிப்பு(பொது)“  பிரிவின்கீழ் இந்த விருது வழங்கப்பட உள்ளது.  
  • மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தலைசிறந்த மற்றும் புதுமையான திட்டங்களை அங்கீகரித்து, பெருமைப்படுத்தும் விதமாக, மத்திய அரசு, இந்த விருதை ஏற்படுத்தியுள்ளது. 
  • இலக்குகளை எட்டி சாதனை படைப்பது மட்டுமின்றி,  நல்லாட்சி,  தரமிக்க சாதனைகள், தொலைதூர இணைப்பு போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்ட்டுள்ளது.  இந்த விருது, ஒரு சுழற்கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10லட்சம் ஊக்கத்தொகை ஆகியவற்றைக் கொண்டதாகம்.   
  • குடிமைப் பணியாளர் தினமான ஏப்ரல் 21-ந் தேதி, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில், இந்த விருது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு வழங்கப்படும்.   
  • உடான் திட்டத்தின்கீழ், 2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் 100 புதிய விமான நிலையங்களைக் கட்டவும், 2026-ம் ஆண்டிற்குள் 1,000 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு, பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel