உலகிலேயே முதல் முறையாக இலக்கை அழிக்க லேசர் ஆயுதம் - இஸ்ரேல் சோதனை வெற்றி
- உலகிலேயே முதல் முறையாக ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற பல வகையான வான்வழி பொருட்களை இடைமறித்து அழிக்க கூடிய புதிய லேசர் ஏவுகணை-தற்காப்பு அமைப்பு 'இரும்பு கற்றை'(அயர்ன் பீமை) இஸ்ரேல் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- இது லேசரைப் பயன்படுத்தி உள்வரும் யுஏவிகள், ராக்கெட்டுகள் மற்றும் மோட்டார்களை செலவில் சுட்டு வீழ்த்த உதவும். ஒரு ஷாட்டுக்கு 3.50 டாலர் மட்டுமே செலவு ஆகும்.
சுகாதாரத் துறை மூலம் காசநோய் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு
- இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
- அதன்படி, 2025-ம்ஆண்டுக்குள் காசநோயை முழுவதும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் தேசிய காசநோய்ஒழிப்புத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சை, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றால் காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் உயர்ந்துவருகிறது.
- இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில் 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையிலும், மீதமுள்ளவர்கள் தொடர் சிகிச்சைகளிலும் குணமடைகின்றனர். மேலும், சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
- இந்நிலையில், தேசிய நல்வாழ்வுக் குழுமத் திட்ட இயக்குநரின் பரிந்துரை அடிப்படையில் இவை அனைத்தும் பொதுசுகாதாரத் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
- இதன்மூலம் மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட செயலாக்கம் மற்றும் அதுசார்ந்த முக்கிய முடிவுகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் கோதுமை வாங்க எகிப்து முடிவு
- கோதுமையை அதிகம் சாகுபடி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளான ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போா் நடைபெறுவதால் சா்வதேச சந்தையில் கோதுமை வரத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- இவ்விரு நாடுகளிடம் இருந்து எகிப்து அரசு அதிக அளவில் கோதுமை இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது அந்நாட்டுக்கு உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, இந்தியாவை கோதுமை விநியோகம் செய்யும் நாடாக எகிப்து அரசு அங்கீகரித்துள்ளது.
- இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பிகாா், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கோதுமை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 10.75 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து வங்கதேசம், யேமன், ஆப்கானிஸ்தான், கத்தாா், இந்தோனேசியா ஆகிய அண்டை நாடுகள் கோதுமை இறக்குமதி செய்கின்றன.
புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு மாவட்ட 'பசுமை சாம்பியன்' அங்கீகாரம் - மத்திய அரசு வழங்கியது
- புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் தலைமையில், கடந்த 4 ஆண்டுகளாக 'பசுமை வளாகம்' என்ற திட்டத்தின் கீழ் பல நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த முன்னோடி முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி மன்றம், உயர்கல்வித்துறை, கல்வி அமைச்சகம், இந்திய அரசு, 2021-22 ம் ஆண்டிற்கான 'மாவட்ட பசுமை சாம்பியன்' விருது வழங்கி புதுவை பல்கலைக்கழகத்தை அங்கீகரித்துள்ளது.
- சிறந்த பசுமையாக்க நடைமுறைகள் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை, நீர்மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் பசுமை மேலாண்மை ஆகியவற்றுடன் இணங்கி நிற்கும் நிலையான நடவடிக்கைகள் மூலம் ஸ்வச்தா செயல் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் இந்த விளையாட்டுகள் நீக்கம்
- ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.