Type Here to Get Search Results !

TNPSC 13th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உக்ரைனுக்கு மேலும் ரூ. 6,000 கோடியில் ராணுவ உதவி - ஜோ பைடன்

  • உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அருகிலுள்ள மரியபோல் நகரை முற்றுகையிட்டு கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.
  • இந்நிலையில், உக்ரைன் ராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள் அனைத்து தீரப்போவதாக அதிபர் வொலோதிமீா் கூறியதை தொடர்ந்து, கூடுதலாக ரூ. 6,000 கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி முழுமையாக ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

  • பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி மத்திய அரசால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • தமிழ்நாடு சட்டபேரவையில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டபேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 14-ம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

தேசிய கிராம சுயராஜ்ய திட்டம் 2026 வரை தொடர ஒப்புதல்

  • டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது. தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தை, 2026 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • மேம்பட்ட வாழ்வாதாரத்துடன், சுகாதாரமான, குழந்தைகளுக்கு ஏற்ற சூழ்நிலை அடங்கிய கிராமங்களை உருவாக்க, இத்திட்டம் வழி செய்கிறது. 
  • கிராமங்களில் குடிநீர் வசதி, பசுமை, தன்னிறைவான உள்கட்டமைப்பு, சமூக பாதுகாப்பு, வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவற்றை ஏற்படுத்தவும் இத்திட்டம் உதவும். இத்திட்டத்தின் மொத்த நிதிச் செலவு 5,911 கோடி ரூபாய். 
  • இதில் மத்திய அரசின் பங்கு 3,700 கோடி ரூபாய்; மாநில அரசுகளின் பங்கு 2,211 கோடி ரூபாய். நாடு முழுதும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 லட்சம் பிரதிநிதிகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள், இத்திட்டத்தின் நேரடிப் பயனாளராக இருப்பர்.

சென்னை ஐஐடி - இந்திய விமானப் படை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்திய விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கானபல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்திய விமானப்படை மற்றும் ஐஐடி சென்னை ஆகியவை மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • இந்திய விமானப்படையின் தலைமை பராமரிப்பு தள தலைமை பொறியியல் அதிகாரி (சிஸ்டம்ஸ்) ஏர் கமோடோர் எஸ் பஹுஜா மற்றும் சென்னை ஐஐடி ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறைத் தலைவர் பேராசிரியர் எச் எஸ் என் மூர்த்தி ஆகியோர் தில்லி துக்ளகாபாத் விமானப்படை நிலையத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கோழி வளர்ப்பில் தமிழ்நாடு முதலிடம்! - கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

  • தமிழக சட்டப்பேரவையில் இன்று கால்நடை, வேளாண்மை, பால்வளம் உள்ளிட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்து வருகின்றன. அந்தவகையில், கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.
  • அதில், தேசிய அளவில் தமிழ்நாடு கோழியின எண்ணிக்கையில் முதலிடத்திலும், செம்மறியாட்டின் எண்ணிக்கையில் நான்காவது இடத்திலும், வெள்ளாட்டின எண்ணிக்கையில் 7வது இடத்திலும், பசுவின எண்ணிக்கையில் 13வது இடத்திலும், எருமையின எண்ணிக்கையில் 14வது இடத்திலும் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கப்பகுதி சட்டம் 1957-ன் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பயன்படுத்துவதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்ட அல்லது நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்கு நடைமுறை சாத்தியமற்ற நிலங்களை பயன்படுத்தும் நோக்கிலும், முதலீடுகளை அதிகரித்து நிலக்கரித் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், நிலக்கரி சுரங்கப்பகுதி சட்டம் 1957-ன் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பயன்படுத்துவதற்கான கொள்கைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இந்த கொள்கை, சுரங்கம் தோண்டப்படாத நிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், நிலக்கரி மற்றும் எரிசக்தித் திட்டங்கள் தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்கவும் வகை செய்யும்.
  • நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள பகுதிகளை வில்லங்கங்களிலிருந்து விடுவிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. 
செபி மற்றும் கனடாவின் மணிடோபா செக்யூரிட்டீஸ் ஆணையத்திற்கிடையேயான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, கனடாவின் மணிடோபா செக்யூரிட்டி ஆணையம் இடையேயான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பத்திரங்கள் ஒழுங்குமுறைகளில் எல்லை தாண்டிய ஒத்துழைப்புக்கு முறையான அடிப்படையை புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடுவதோடு, பரஸ்பர உதவியை எளிதாக்கி, மேற்பார்வை செயல்பாடுகளின் திறமையான செயல்பாட்டிற்கு பங்களித்து, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த உதவுவதோடு சட்டங்களை திறம்பட செயல்படுத்த உதவுகிறது. 
  • பத்திர சந்தைகளை நிர்வகிக்கும் விதிமுறைகளிலும் இது உதவுகிறது. செபி உடன் பதிவு செய்வதற்கு மணிடோபாவை சேர்ந்த முதலீட்டாளர்களை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தகுதியுடையதாக்கும்.
  • கனடாவின் மணிடோபா மாகாணத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள், செபியில் வெளிநாட்டு சமபங்கு முதலீட்டாளராக பதிவு செய்ய விரும்புகின்றன. இந்த ஒப்பந்தம் அதற்கு வழிவகுக்கும்.
பரவலாக்கப்பட்ட வீட்டு உபயோக கழிவுநீர் மேலாண்மையில், இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பரவலாக்கப்பட்ட வீட்டு உபயோக கழிவுநீர் மேலாண்மையில் ஒத்துழைப்பது தொடர்பாக, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளத் துறை, ஜப்பான் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த  மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும்.  ஒத்துழைப்பு தொடர்பான விரிவான நடவடிக்கைகளை இந்த குழு உருவாக்குவதுடன், அதன் முன்னேற்றத்தையும் கண்காணிக்கும். 
  • பரவலாக்கப்பட்ட வீட்டு உபயோக கழிவுநீர் மேலாண்மை மற்றும் ஜோகாசோ (Johkasou) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை திறம்பட பயன்படுத்த, ஜப்பான் உடனான இந்த ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  
  • குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீரை, ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், சுத்திகரித்து நன்னீராக  பயன்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும்.  மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கழிவுநீரை சுத்திகரிக்கும் பணிக்கான மேம்பட்ட திட்டமிடலை மேற்கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel