உக்ரைன் போரால் உலக பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 2.8% குறையும் - உலக வர்த்தக அமைப்பு
- உக்ரைன் போரால் உலக பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 2.8 குறையும் என்று உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ளது.
- இந்த ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி 4.1% ஆக இருக்கும் என்று உக்ரைன் போருக்கு முன்பு கணிக்கப்பட்டது. போருக்கு பிறகு உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 1.3% குறைத்து மதிப்பிட்டுள்ளது உலக வர்த்தக அமைப்பு.
'சமபந்தி போஜனம்' இனி 'சமத்துவ விருந்து' என்று அழைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
- சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வன் என்னை சந்தித்து, ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடைபெற்று வந்த 'சமபந்தி போஜனம்' என்பதை பெயர் மாற்ற வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இனிமேல் 'சமத்துவ விருந்து' என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது டோர்னியர் விமானத்தை திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா கொடியசைத்து இயக்கிவைத்தார்
- இந்தியாவில் போயிங், ஏர்பஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விமானங்களைக் கொண்டுதான் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை கொண்டு முதல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. 17 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக விமானமாக இதனை, இந்துஸ்தான் ஏரோநேடிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- டோர்னியர் ரக விமானங்களை பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே பயன்படுத்தி வரும் நிலையில், முதன்முறையாக இந்த விமானத்தின் வாயிலாக பயணிகள் சேவை தொடங்கியுள்ளது.
- அசாமின் திப்ரூகர் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தின் பசிகட் இடையே இந்த விமானத்தின் சேவையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.
- அசாம் மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்களுக்கு இடையே அல்லையன்ஸ் ஏர் நிறுவனம் இந்த விமானத்தை ஏப்ரல் 18 -ம் தேதி முதல் தினசரி சேவையாக இயக்க உள்ளது.
ரெய்காவிக் பிரக்ஞானந்தாவின் சாம்பியன்
- கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக அளவிலான 'ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்' இணைய வழி சதுரங்கப்போட்டியில் பங்கேற்று, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்தார்.
- ரெய்காவிக் 2022ஆம் ஆண்டின் ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்
ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடர் - வெண்கலம் வென்றது இந்தியா
- தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. டி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி ஜெர்மனி, மலேசியா, வேல்ஸ் அணிகளை வென்று முதல் இடம் பிடித்தது.
- காலிறுதியில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் நெதர்லாந்திடம் போராடி தோற்றது. மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியிடம் இங்கிலாந்து தோற்றது.
- வெண்கலப் பதக்கத்துக்காக இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. 18வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மில்லி ஜிக்லியோ கோல் அடித்தார்.
- இந்தியாவின் மும்தாஜ் கான் 21வது நிமிடத்திலும், 47வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடிக்க, இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டது.
நாட்டிலுள்ள சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் மாநாடான 'அமிர்த சங்கமத்தை' மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புது தில்லியில் தொடங்கி வைத்தார்
- நாட்டிலுள்ள சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் மாநாடான 'அமிர்த சங்கமத்தை' மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
- மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.