பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு
- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இல்லாமல் நடந்த வாக்கெடுப்பில் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
- இவர் சீனா மற்றும் அமெரிக்காவுடன் இணக்கமாக இருக்கக்கூடியவர் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்தவர்.
மத்திய பல்கலை.களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
- மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
- இதைத் தொடர்ந்து, தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வன உயிரின வாரியம் அமைப்பு - 28 உறுப்பினர்கள் நியமனம்
- தமிழகத்தில் உள்ள வன உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வன உயிரின வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
- இதன் துணைத் தலைவராக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரியத்தில் 3 எம்எல்ஏக்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 3 பேர், சுற்றுச்சூழல் சார்ந்த வல்லுநர்கள் 8 பேர், அரசுத் துறை அலுவலர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- அதன்படி, எம்எல்ஏக்கள் பிரிவில் கம்பம் தொகுதி எம்எல்ஏ என்.ராமகிருஷ்ணன். சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ டி.உதயசூரியன், பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரும், தொண்டு நிறுவனங்கள் பிரிவில் 'நீலகிரி கீ ஸ்டோன்' அறக்கட்டளையைச் சேர்ந்த பிரதிம் ராய், 'கோவை ஓசை' அமைப்பைச் சேர்ந்த கே.காளிதாசன், தேனி நலம் மருத்துவமனை மருத்துவர் சி.பி.ராஜ்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பூம்புகார் மாநில விருதுக்கு 'தஞ்சாவூர் நெட்டி' கைவினைக் கலைஞர் ஆர்.ராதா தேர்வு
- தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் கைவினைக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 'பூம்புகார் மாநில விருது' வழங்கி, ஊக்கப்படுத்தி வருகிறது.
- அதன்படி, 2021-22-ம் ஆண்டுக்கான பூம்புகார் மாநில விருதுக்காக 'தஞ்சாவூர் நெட்டி' கைவினைக் கலைஞரான தஞ்சாவூர் புதிய குடியிருப்பு வாரியத்தில் வசித்து வரும் ஆர்.ராதா(66) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2-வது முறையாக ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்று பாபர் அசாம் சாதனை
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பல பரபரப்பான பேட்டிங் ஆட்டங்களைத் தொடர்ந்து ஆஸம் ஆடவர் ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர் விருதை வென்றார்.பரபரப்பான டெஸ்ட் தொடரில் 390 ரன்கள் குவித்தது மற்றும், இரண்டாவது டெஸ்டில் 196 ரன்கள் எடுத்த அவரது சாதனை இன்னிங்ஸால் அவரது உச்ச பங்களிப்பு சிறப்பிக்கப்பட்டதோடு கராச்சியில் கடைசி நாளில் பாகிஸ்தான் ட்ரா செய்ய பெரும் பங்களிப்பு செய்தது.
- மேலும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் முடிசூட்டப்பட்ட பிறகு, இரண்டு முறை ICC ஆடவர் மாதத்திற்கான விருதை வென்ற முதல் வீரர் ஆனார் பாபர் ஆசம், முதலில் ஏப்ரல் 2021-ல் ஒருமுறை ஐசிசி மாத சிறந்த வீரர் விருதை வென்றார் பாபர்.
- அதே போல் மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஏழாவது ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றிப் பாதையில் பலமான பங்களிப்புகளைத் தொடர்ந்து ரேச்சல் ஹெய்ன்ஸ், ஐசிசியின் இந்த மாதத்தின் மகளிர் வீராங்கனை ஆனதைக் கொண்டாடுகிறார்.
- எட்டு போட்டிகளில் 61.28 சராசரியில் 429 விலைமதிப்பற்ற ரன்களை எடுத்தார் ரேச்சல் ஹெய்ன்ஸ்.
இந்திய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன தகவல் தொடர்பு மற்றும் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து முறை இன்ட்ரான்ஸ்- II திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது
- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்முயற்சியாக இந்திய நகரங்களுக்கான நவீன தகவல் தொடர்பு மற்றும் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து முறை தொடங்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஓட்டுநர் உதவி மற்றும் எச்சரிக்கை நடைமுறை (ஓடிஏடபுள்யுஎஸ்), பேருந்து சிக்னல் முன்னுரிமை நடைமுறை, சிஓஎஸ்எம்ஐசி ஆகிய மென்பொருள்களை கொண்டு இந்த போக்குவரத்து முறை தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த நடைமுறை நவீனமாக்கப்பட்ட கணினி மேம்பாட்டு மையம், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் (ஐஐடி) ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு தொழில்துறை கூட்டாளியாக மஹிந்திரா & மஹிந்திரா இருந்தது.
பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை ‘ஹெலினா’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
- பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை ‘ஹெலினா’, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டரிலிருந்து ஏப்ரல் 11, 2022 அன்று செலுத்தப்பட்டு, மிக உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
- இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை கூட்டாக மேற்கொண்டன.
- பயனாளர் சரிபார்ப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரிலிருந்து இந்த சோதனை நடத்தப்பட்டதுடன், அந்த ஏவுகணை அதன் பீரங்கி இலக்கை துல்லியமாக தாக்கியது. இந்த ஏவுகணை உலகிலேயே மிக நவீனமான பீரங்கி எதிர்ப்பு சாதனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.