ஆந்திரா அமைச்சரவை மாற்றம்
- ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்ற பின்னர், அப்போது ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
- ஆனால், வெறும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இந்த அமைச்சர்கள் பதவி வகிப்பர் என்றும், அதன் பின்னர் புதியவர்களுக்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
- தற்போது கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நெருங்குவதால், புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் தீர்மானித்தார்.
- அதன்படி, அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதில், கவுதம் ரெட்டி சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
- இதனால் 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகனிடம் சமர்ப்பித்தனர்.
- அதன்படி, தற்போது பழைய அமைச்சர்கள் பட்டியலில் இருந்து 10 பேரும், புதிதாக 15 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- பழைய அமைச்சர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ஜெயராம், அம்பாட்டி ராம்பாபு, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா ஆகியோ ருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.
- புதிய அமைச்சர்களில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர்.கே. ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் முதன்முறை ஆந்திர அமைச்சரவையில் இடம் பெறுகிறார்.
இரட்டையர் ஸ்குவாஷ் தீபிகா அசத்தல்
- ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா முதல் முறையாக 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
- கிரிக்கெட் நட்சத்திரம் தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பாலிகல் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்தும், கலப்பு இரட்டையர் பிரிவில் சவுரவ் கோஷலுடன் இணைந்தும் 2 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி அசத்தினார்.
- சுமார் 4 ஆண்டுகள் ஸ்குவாஷ் விளையாட்டில் இருந்து விலகியிருந்ததுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான தீபிகா, மீண்டும் களமிறங்கி தங்கப் பதக்கங்களை முத்தமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.