Type Here to Get Search Results !

இ-பாஸ்போர்ட் / e - PASSPORT

 

TAMIL
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, இந்தியாவில் இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது இந்திய குடிமக்களின் பயண வசதியை மேம்படுத்தும் என்றும் அப்போது அறிவித்தார். அதிக பாதுகாப்பு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட சரிபார்ப்பு செயல்முறையை இ-பாஸ்போர்ட் வழங்கும் என்றும் கூறினார்.
  • டாக்குமென்ட் மற்றும் chip-ன் பண்புகள் சர்வதேச சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் (ICAO) டாக்குமென்ட் 9303-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. 
  • இ-பாஸ்போர்ட் பற்றி கூறி உள்ள அரசு அதிகாரிகள், இந்தியர்களுக்கான சர்வதேச பயண அனுபவம் இப்போது இ-பாஸ்போர்ட்களின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பானதாக மற்றும் வசதியாக இருக்கும். 
நன்மைகள்
  • இ-பாஸ்போர்ட் உள்ள பயணிகள் சில நொடிகளில் ஸ்கேன் செய்து விடுவதால், நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. 
  • இ-பாஸ்போர்ட் தனிநபர்களின் பயோமெட்ரிக் பதிவை கொண்டிருக்கும் என்பதால் டேட்டா திருட்டு மற்றும் டூப்ளிகேட் பாஸ்போர்ட் உள்ளிட்ட மோசடிகளை தடுக்கும். மேலும் பாஸ்போர்ட் டேட்டாக்களின் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும்.
  • புதிய இ-பாஸ்போர்ட்டுகளில் ஒரு சிப் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகளை பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் அணுகலாம். 
  • அறிக்கைகளின்படி தனிநபர்களின் அடையாளத்தைக் கண்டறிய இ-பாஸ்போர்ட், ரேடியோ-அதிர்வெண் அடையாளம் (RFID - radio-frequency identification) மற்றும் பயோமெட்ரிக்ஸை பயன்படுத்தும் என தெரிகிறது. 
  • பாஸ்போர்ட்டில் அறிமுகமாக உள்ள இந்த புதிய தொழில்நுட்பம் அனைத்து குடிமக்களுக்கும் சிறப்பான பயண அனுபவத்தை அளிக்கும். 
  • பயணிகளின் பெயர், முகவரி, ஐடி ப்ரூஃப் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை கொண்ட பாஸ்போர்ட்டில் சிப் பதிக்கப்பட்டிருக்கும். 
  • மாதிரி இ-பாஸ்போர்ட்டுகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்ப சூழல் அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு முடிந்தவுடன் முழு அளவிலான உற்பத்தி மற்றும் வெளியீடு தொடங்கும்
  • இ-பாஸ்போர்ட்டின் சிப் சேதப்படுத்தப்பட்டிருந்தால் கணினியால் அதை கண்டறிய முடியும். இ-பாஸ்போர்ட் பாதுகாப்பான பயோமெட்ரிக் தரவு மற்றும் இமிகிரேஷன் போஸ்ட்கள் மூலம் உலகளவில் சுமூக பயணத்திற்கு உதவும் என்று அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர். 
  • இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான தொழில்நுட்பப் பொறுப்புகளை தேசிய தகவல் மையத்திடம் (என்ஐசி) வெளியுறவு அமைச்சகம் ஒப்படைத்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ENGLISH
  • Union Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for 2022-23, she announced that the e-passport would soon be introduced in India, which would improve the travel facilities of Indian citizens. He also said that e-passport will provide more security and streamlined verification process.
  • The document and the properties of the chip are listed in the International Civil Aviation Organization (ICAO) Document 9303.
  • Government officials who were talking about e-passport said that the international travel experience for Indians will now be much safer and more convenient with the help of e-passports.
Benefits
  • Passengers with e-passports do not have to stand in line for long as they can be scanned in a matter of seconds.
  • The e-passport will contain the biometric record of the individuals so as to prevent data theft and fraud including duplicate passports. And ensure better security of passport data.
  • Newer e-passports will have a chip installed. All important information about travelers can be accessed by scanning.
  • According to reports, the e-passport will use radio-frequency identification (RFID) and biometrics to identify individuals.
  • Introduced in the passport, this new technology will provide a better travel experience for all citizens.
  • The chip is embedded in the passport containing personal information such as the passenger's name, address, ID proof and biometric details.
  • Sample e-passports are currently being tested and will begin production and release at full capacity once the technical environment and infrastructure are completed.
  • If the chip of the e-passport is damaged the computer can detect it. Government officials say the e-passport will facilitate social travel globally through secure biometric data and immigration posts.
  • According to the Central Government, the Ministry of External Affairs has handed over the technical responsibility for issuing e-passports to the National Information Center (NIC).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel