ரூ.3,887 கோடியில் 15 போர் ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ரூ.3,887 கோடி செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 15 இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், விமானப்படைக்கு 10 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காக ரூ.377 கோடி ஒதுக்கவும் அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
- மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கிறது.
5வது பிம்ஸ்டெக் மாநாடு
- வங்கக்கடல் பகுதியில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், தாய்லாந்து மியான்மர் ஆகிய நாடுகள் இணைந்து பிம்ஸ்டெக் என்ற பெயரில் கூட்டமைப்பை கடந்த 1997-ம் ஆண்டு ஏற்படுத்தின.
- இந்நிலையில் வங்காள விரிகுடா கடல்பகுதி நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் மாநாட்டை இலங்கை நடத்துகிறது. இந்த மாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் காணொலி முறையில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார்.
- ரஷ்யா- உக்ரைன் இடையேயான பிரச்சினையை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் இவ்வாறு கூறினார். மேலும், பிம்ஸ்டெக்கின் நிர்வாக தேவைகளுக்காக இந்தியா 7.5 கோடி ரூபாயை வழங்கும் என்றும் பிரதமர் மோடி அப்போது அறிவித்தார்.
சார்டர்ட் அக்கவுன்டன்ட் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
- சார்டர்ட் அக்கவுன்டன்ட் சட்டம் 1949, காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட் சட்டம் 1959 மற்றும் நிறுவன செயலர் சட்டம் 1980 ஆகிய மூன்றிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாவை நிறுவன விவகாரத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
- இதில் ஐசிஏஐ அமைப்பின் ஒழுங்குமுறை கமிட்டியில் ஐந்து உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்றும் அவர்களில் மூன்று பேர் பட்டய தணிக்கையாளர் அல்லாத உறுப்பினர்கள் இடம்பெறுவர் என திருத்தம் செய்யப்பட்டதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததோடு இதை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என வலியுறுத்தினர்.
- ஒழுங்குமுறை குழுவின் தலைவராக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலர் தலைவராக இருப்பார் என்ற விதி மாற்றத்துக்கு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் ரூ.3,613 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்
- முதல்வர் ரங்கசாமி, 2022-23ம் நிதி ஆண்டிற்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாத அத்தியாவசிய செலவினங்களுக்காக 3 ஆயிரத்து 613 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கான இடைக்கால் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனை சபாநாயகர் செல்வம், குரல் ஓட்டெடுப்பு நடத்தி, சபையின் ஒப்புதலை பெற்றார்.
சென்னை சென்ட்ரலில் மத்திய சதுக்கம் திறந்து வைத்த முதல்வர்
- சென்னை சென்ட்ரல் பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் உலகத் தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டமான மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் ரூ 34.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுப்படுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
- அழகுப்படுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் நிறைந்த வெளிப்பகுதி, நடந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் மேம்படுத்தப்பட்டு மரங்கள், புல்வெளி மற்றும் அழகிய தாவரங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வுக்கு மத்திய அமைச்சர்வை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அகவிலைப்படி உயர்வு மூலம் 47.68 லட்சம் அம்னத்திய அரஸ்ய் ஊழியர்கள், 68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலனடைவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி 35 உயர்வு மூலம் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மார்ச் 30 தொடங்கி வைத்தார்.
- தமிழக மக்களின் சுகாதார தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இத்திட்டத்தின் ஒர் அம்சமாக, சுகாதார கொள்கை வகுப்பதில் குடிமக்களின் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சுகாதாரப் பேரவை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- இப்பேரவையை தொடங்கி வைக்க தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வருகை புரிந்த போது, தமிழக முதல்வர், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவையை தொடங்கி வைத்தார்.
- உலக வங்கியின் உதவியுடன் “சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்” திட்டத்திற்கு 808 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ. 6,062.45 கோடி வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த புதிய திட்டம் 2022-23-ம் நிதியாண்டில் தொடங்கும்.
- திட்டத்திற்கான மொத்த செலவு ரூ 6,062.45 கோடி அல்லது 808 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் ரூ 3750 கோடி அல்லது 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக வங்கியின் கடனாக பெறப்பட்டு, மீதமுள்ள ரூ 2312.45 கோடி அல்லது 308 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய அரசால் நிதியளிக்கப்படும்.
- வரிவிதிப்பு அதிகாரிகளுக்கு இறுதி மெகா சான்றிதழ்கள் சமர்ப்பிப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள 10 தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்ட மெகா திட்டங்களுக்கான கால அளவை (36 மாதங்கள்) நீடிக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தக் கால நீடிப்பு சம்பந்தப்பட்ட அமைப்புகள் எதிர்காலத்தில் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளில் போட்டியிடவும், கொள்கை விதிமுறைகளின்படி வரிவிலக்குப் பெறவும் ஏதுவாக இருக்கும்.
- இந்தக் கால நீடிப்பில் மின்சார நிறுவனத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் (புதுப்பிக்கவல்ல எரிசக்தி, சேமிப்பு மற்றும் மரபு சார்ந்த மின்சாரம்) புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் இந்திய சூரிய எரிசக்திக் கழகம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்புடன் வரவேற்கப்படும். இந்த மெகா திட்டங்கள் இத்தகைய திட்டங்கள் இது போன்ற ஒப்பந்தப் புள்ளிகளில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தக் கால அவகாசத்தில் தற்போதைய மின்சார சந்தைகள் அடிப்படையில் போட்டி முறையில் பயன்பாட்டாளர்களுக்கு பயன்களை உறுதி செய்யும் வகையில் மாற்றுத் திட்டத்தை மின்சார அமைச்சகமும் உருவாக்கும்.