Type Here to Get Search Results !

TNPSC 2nd MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரஷியா, பெலாரஸில் அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது உலக வங்கி

  • ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து கடந்த 7 நாள்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியப் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்து வருகின்றனர். ரஷியாவுக்கு உதவி வருவதால் பெலாரஸ் நாட்டிற்குள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
  • இந்நிலையில், ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளில் செயல்படுத்தி வரும் உலக வங்கிகளில் திட்டங்களை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச் சபையில் ரஷியாவுக்கு எதிரான தீா்மானம் - 3வது முறையாக இந்தியா புறக்கணிப்பு

  • பொதுச் சபையில் ரஷியாவுக்கு எதிராக புதன்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
  • உக்ரைன் மீதான ரஷிய தாக்குலுக்கு நேட்டோ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபையும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
  • இதையடுத்து, இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவெடுக்கப்பட்டது. அதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்து, நடுநிலை வகித்தது.
  • இந்தச் சூழலில், 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் புதன்கிழமை மீண்டும் ஒரு தீா்மானம் கொண்டுவரப்பட்டது. 
  • இந்தத் தீா்மானத்தின் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்து நடுநிலை வகித்தது. இந்தத் தீா்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 5 உறுப்பு நாடுகள் தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்ததோடு, 35 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. 
  • பெரும்பான்மைக்கு 3-இல் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்ற அடிப்படையில், 141 நாடுகளின் ஆதரவோடு இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர்கள், மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு மரியாதை செலுத்த மீன்வளத்துறை அமைச்சகத்தின் ‘சாகர் பரிக்ரமா’ என்ற கடல் சுற்றுப் பயண நிகழ்ச்சி குஜராத்தில் தொடக்கம்
  • சுதந்திர போராட்ட வீரர்கள், மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக,  மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்படும்  ‘சாகர் பரிக்ரமா’ என்ற கடல் சுற்றுப் பயண நிகழ்ச்சி குஜராத்தில் மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது.
  • இந்திய பெருங்கடல் பகுதி கடலோர மாநிலங்களின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு முக்கியமானதாக உள்ளது.  நாட்டின் கடலோர பகுதி 8,118 கி.மீ தூரத்துக்கு உள்ளது. இதில் 9 கடல்சார் மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் அடங்கியுள்ளது. இது லட்சக்கணக்கான மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கிறது. 
  • கடலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு நமது சுதந்திர போராட்ட வீரர்கள், மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும்  கடல் சுற்றுப் பயண நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  
  • இதன் முதல் பயணம் குஜராத்திலிருந்து மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த 2 நாள் நிகழ்ச்சியின் போது, கடலோர மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடல் சுற்றுப் பயண நிகழ்ச்சி கொண்டாடப்படும். 
  • குஜராத், டையூ, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான், நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளில் மீனவர்களின் பிரச்சினைகளை அறிய அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 19-வது ராணுவ ஒத்துழைப்பு கூட்டம் 
  • இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (எம்சிஜி) 19-வது பதிப்புக் கூட்டம்  மார்ச் 01-02, 2022ல்  உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில்  நடைபெற்றது.
  • இந்தக் கூட்டத்திற்கு இந்தியத் தரப்பில் இருந்து சிஐஎஸ்சி தலைவர் ஏர் மார்ஷல் பி. ஆர். கிருஷ்ணா மற்றும் அமெரிக்க தரப்பில் இருந்து அமெரிக்க இந்தோ-பசிஃபிக் கமாண்ட் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீபன் டி ஸ்க்லெங்கா தலைமை தாங்கினர். 
  • இரு தரப்புக்கும் இடையே நிலவிவரும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், தற்போதுள்ள ஒத்துழைப்பு நடைமுறையின் கீழ் புதிய முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
  • இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக் குழு என்பது தலைமையகம், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அமெரிக்க இந்தோ-பசிஃபிக் பிரிவு ஆகியவற்றுக்கு இடையேயான யுத்தி சார்ந்த மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் மூலம் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel