Type Here to Get Search Results !

TNPSC 29th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

அமெரிக்காவின் பெடெக்ஸ் சிஇஓ-வாக இந்தியர் நியமனம்

  • அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அளவில் பிரபலமான சரக்கு போக்குவரத்து நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ராஜ்சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் தனது பணிக்காலத்தை பெடெக்ஸில்தான் தொடங்கினார். டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஐஐடிமும்பையில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர்.

20,000 பசுமை வீடுகள் கட்ட ரூ.299 கோடி நிதி விடுவிப்பு - தமிழக அரசு அரசாணை

  • "2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் முதலமைச்சரின் பசுமை இல்லத் திட்டத்தின் (CMGHS) கீழ் டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், எனவே, 2021-22 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தை (CMGHS) செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.299 கோடியை அரசு அனுமதித்து விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்நிலையில்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரின் முன்மொழிவை விரிவாக ஆய்வு செய்த பிறகு, 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் (CMGHS) கீழ் ரூ.299 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது

தமிழக அமைச்சரவையில் முதல் மாற்றம்

  • தமிழகத்தில் கடந்த 2021-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை மே.7-ம் தேதிபொறுப்பேற்றது. 
  • இந்நிலையில் 10 மாதங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் முதல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அமைச்சரவையில் குறிப்பிட்ட இரு அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. 
  • முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்து, தேசிய போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன சட்டத்துறையானது, எஸ்.எஸ்.சிவசங்கருக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோல், பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையானது சிவசங்கருக்கு பதில் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்படுகிறது
இந்தோ - பசிபிக் திட்டத்திற்கு ரூ.16,500 கோடி ஒதுக்கீடு
  • இந்தோ - பசிபிக் பிராந்திய பாதுகாப்புக்கும், அப்பகுதியில் சீனாவின் சவாலை சமாளிக்கவும், அமெரிக்கா 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பார்லி.,யில் பட்ஜெட் ஒதுக்கீடு பற்றிய அறிக்கையை தாக்கல் செய்தார்.
  • வரும் 2023ம் ஆண்டில், ராணுவத்திற்கு 58 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இந்தோ - பசிபிக் கடல் பிராந்திய பாதுகாப்பு திட்டங்களுக்காக செலவிடப்படும். 
  • அப்பகுதியில் சீனாவின் சவால்களை எதிர்கொள்ளும் பணிகளுக்காக கூடுதலாக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அமெரிக்கா நீண்ட கால நட்பு நாடுகளுடன் இணைந்து, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது என்றார்.
  • சர்வதேச கப்பல் போக்குவரத்தில், இந்தோ - பசிபிக் கடற்பிராந்தியம், முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் இருக்கும் தென் சீனக் கடல் முழுதும், தனக்கே சொந்தம் என சீனாவும் இதில் தங்களுக்கும் பங்கு உள்ளதாக தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியட்னாம் நாடுகளும் கூறுகின்றன. 
  • தென் சீனக் கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு ராணுவ தளம் அமைப்பதில், சீனா ஈடுபட்டு வருகிறது. இதற்காகத் தான், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை ஏற்படுத்த, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து, 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.
மதுரை காமராஜ் பல்கலை புதிய துணை வேந்தர் குமார்
  • மதுரை காமராஜ் பல்கலை துணை வேந்தராக, பேராசிரியர் குமாரை நியமனம் செய்து, கவர்னர் ரவி உத்தரவிட்டார். இதற்கான ஆணையை அவரிடம் வழங்கினார்.மூன்று ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார்.
  • புதிய துணை வேந்தர் குமார், அண்ணா பல்கலையில் இயற்பியல் புலத்தின் படிக வளர்ச்சி எனப்படும், 'கிரிஸ்டல் குரோத்' துறை தலைவராகப் பணியாற்றி வந்தார். பல்கலைகளில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளை வலுப்படுத்தும் திட்ட அதிகாரியாக உள்ளார். 
3 தீவுகளில் மின் திட்டங்களை அமைப்பது உட்பட இந்தியா இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தியா தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறது. இதற்கிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை ஜெய்சங்கர் தனித்தனியாக சந்தித்து பேசினார். 
  • இதைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் உடனான சந்திப்பில், இந்தியா, இலங்கை இடையேயான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • இந்தியாவில் ஆதார் அட்டை போல், இலங்கையில் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மானியத்தை வழங்குவதாகவும், யாழ்ப்பாணத்திற்கு அப்பால் 3 தீவுகளில் நவீன மின் திட்டங்களை செயல்படுத்தவும், மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்தவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
  • ஆபரேஷன்கள் ரத்து இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 
  • இத்தகவல் கவலை அளிப்பதாக தெரிவித்த வளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு மருந்துகள் அளிப்பது உள்ளிட்ட எந்தெந்த வழிகளில் உதவ முடியும் என்பதை இலங்கை அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி இலங்கைக்கான இந்திய தூதருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அஸ்ஸாம் - மேகாலயாவின் 50 ஆண்டு எல்லைப் பிரச்சனையை தீர்க்கும் வரலாற்று ஒப்பந்தம்
  • மேகாலயாவுக்கும், அண்டை மாநிலமான அசாமிற்கும் இடையே கடந்த 1972ஆம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களை மேகாலயா அரசு உரிமை கோரியது. எனினும் அதற்கு அசாம் மாநில அரசு ஏற்க மறுத்தது.
  • இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு மாநில அமைச்சர்கள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டு எல்லையை வரையறுக்கும் பணிகள் நடைபெற்றன. 
  • இதற்கான வரைவு தீர்மானம் ஒன்றை இரு மாநில முதலமைச்சர்களும் கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்தனர். அதன் மீது ஆய்வு மற்றும் பரிசீலனை நடைபெற்றது.
  • இந்த நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ட்ராட் சங்மா இருவரும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிரச்னைக்கு தீர்வு காண ஒப்புதல் தெரிவித்து, அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். 
  • அதன்படி, இரு மாநிலங்களுக்கு இடையே 884 புள்ளி 9 கிலோ மீட்டர் தொலைவிலான எல்லையில் இருக்கும் 12 இடங்களில், 6 பகுதிகளில் பிரச்னைக்கு தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது.
  • இவ்விவகாரத்தில் உள்ள 36.79 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியில் அசாமிற்கு 18.51 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும், மேகாலயாவுக்கு 18.28 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும் பிரித்து எடுத்துக் கொள்ளப்படும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel