Type Here to Get Search Results !

TNPSC 28th FEBRUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரஷ்யாவின் போருக்கு எதிராக ஐநாவின் அவசர பொது சபை கூட்டம்
 • ரஷ்யாவின் போருக்கு எதிராக ஐநாவின் இந்த அவசர பொது சபை கூட்டம் கூட்டப்பட்டது. உலக வரலாற்றில் 11வது முறையாக இப்படி அவசர ஐநா பொதுச்சபை கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
 • ஐநாவின் 77 வருட வரலாற்றில் இப்படி ரஷ்யா - உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரண்டாவது முறை அவசர கூட்டம் நடக்கிறது. இதற்கு முன் கிரிமியா விவகாரத்தில் இப்படி அவசர கூட்டம் நடைபெற்றது. 
 • நடந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டடேனியோ குட்ரேஸ் ரஷ்யா மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். உக்ரைனில் நடக்கும் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச விதிகளை ரஷ்யா மதிக்க வேண்டும்.
 • ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகளின் பொருளாதாரம் ஏற்கனவே மோசமாக உள்ளது. போதும். இதற்கு மேல் மக்கள் பலியாக வேண்டாம். இதற்கு மேல் உலக நாடுகள் பாதிக்க வேண்டாம். வீரர்கள் உடனே தங்கள் எல்லைக்கு செல்ல வேண்டும். 
 • தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுகுறிப்பிட்டார். 193 நாடுகள் உள்ள ஐநா பொது சபையில் இனி வரும் நாட்களில் வரிசையாக ஒவ்வொரு நாடுகளும் பேசும்.
 • அதன்பின் புதன் கிழமை ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக வாக்கெடுப்பு நடக்கும். அதில் பெரும்பாலும் 100க்கும் அதிகமான நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
செபி தலைவராக மாதாபி நியமனம்
 • இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த அஜய் தியாகியின் 5 ஆண்டு கால பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. 
 • செபி தலைவராக 3 ஆண்டு காலத்துக்கு அவர் 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். அதன் பிறகு, ஆகஸ்ட் 2020 வரை 6 மாதங்கள் பதவி நீட்டிப்பு பெற்றார். பின்னர், 18 மாதங்கள் அவரது பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
 • இதையடுத்து, அதன் புதிய தலைவராக மாதாபி பூரியை நியமித்து ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. செபிக்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். இவரது நியமனத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 
 • இவர் செபியில் உள்ள பல்வேறு கமிட்டிகளின் தலைவராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார். கடைசியாக, பத்திரங்கள் சந்தையின் தரவு அணுகல் மற்றும் தனியுரிமை தொடர்பான ஆலோசனை கமிட்டியின் தலைவராக பணி புரிந்தார். 
உக்ரைன்-ரஷியா பேச்சுவாா்த்தை
 • உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலைத் தொடங்கியது. ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகள், போா் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதுடன் ரஷிய தரைப் படையும் உக்ரைனுக்குள் ஊடுருவியது. இந்நிலையில், உக்ரைனுடன் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
 • அதன்படி, பெலாரஸ் எல்லையில் பேச்சுவாா்த்தை தொடங்கியது. உக்ரைன் தரப்பில் அதன் பாதுகாப்பு அமைச்சா் தலைமையிலான குழுவும், ரஷிய தரப்பில் அதிபா் புதினின் ஆலோசகா் தலைமையிலான குழுவும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றன.
 • கூட்டத்தில், உக்ரைனிலிருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 5 மணி நேரப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான சில வாய்ப்புகள் தென்பட்டதாக ரஷிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியனில் சேர உக்ரைன் விண்ணப்பம்
 • 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் உக்ரைன் பிரதமா், அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவரும் கையொப்பமிட்டுள்ளனா்.
 • இந்த விண்ணப்பம் ஐரோப்பிய யூனியன் தலைமைகம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று அதிபா் வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி - பிரதமர் மோடி
 • பிரதமரின் கதி சக்தி திட்டம் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பிரதமரின் கதி சக்தி திட்டம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் எனக் கூறினார்.
 • தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும், அது விலை மலிவாக இருப்பதோடு, பேரழிவுகளை தாங்கும் வகையில் நீடித்து நிற்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 • ஒருங்கிணைந்த கூட்டாட்சியை வலுப்படுத்த ஏதுவாக மாநில அரசுகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், பன்முனை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகள் இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 • நெடுஞ்சாலைகள், கண்ணாடி ஒளியிழை குழாய் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்பட ஒவ்வொரு துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க அரசு முடிவு எடுத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
மத்திய அரசின் பசுமை எரிசக்தி நோக்கங்கள் மற்றும் கார்பன்-சமநிலைப் பொருளாதார முயற்சிகளை நனவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - சூரிய மின்சக்தி நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் கையெழுத்து
 • மத்திய அரசின் பசுமை எரிசக்தி நோக்கங்கள் மற்றும் கார்பன்-சமநிலைப்  பொருளாதார முயற்சிகளை நனவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சூரிய மின்சக்தி நிறுவனம்(எஸ்இசிஐ) , இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுனம் (எச்பிசிஎல்) ஆகியவை கடந்த 24ம் தேதி கையெழுத்திட்டன. 
 • நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்  திறன் மேம்பாடு மற்றும்  மின்சார வாகனப்  போக்குவரத்துக்கு வேகமாக மாறும் மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப, எச்பிசிஎல் நிறுவனம் இத்துறைகளை மேலும் பன்முகப்  படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்  திட்டங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
8 முக்கியத் தொழில்துறைகளின் இணைந்த வளர்ச்சிக் குறியீடு கடந்த ஜனவரியில் 3.7 சதவீதம் அதிகரிப்பு
 • எட்டு முக்கியத்  தொழிற்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக் குறியீடு  கடந்த ஜனவரியில் 144.4 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த 2021 ஜனவரி மாத பட்டியலுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி 3.7 சதவீதம்(தற்காலிகம்) அதிகரித்துள்ளது. 
 • நிலக்கரி, இயற்கை வாயு, சுத்திகரிப்புப்  பொருட்கள், ஸ்டீல், சிமென்ட் மற்றும் மின்சாரத்துறைத்  தொழில்களின் வளர்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில், கடந்தாண்டின் இதே காலத்தை விட அதிகரித்துள்ளது. 
 • 8 முக்கியத்  தொழிற் துறைகளின் கடந்த 2021ம் ஆண்டு  அக்டோபர் மாதத்தின் இறுதி வளர்ச்சி வீதம் 8.7 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. முக்கிய தொழிற்துறைகளின் வளர்ச்சி வீதம் கடந்த 2021-22ல் 11.6 சதவீதமாக இருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel