Type Here to Get Search Results !

TNPSC 14th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பள்ளிகளில் தொழில்நுட்ப தர மேம்பாட்டுக்காக காக்னிசன்ட் நிறுவனத்துடன் கல்வித் துறை ஒப்பந்தம்

  • அரசுப் பள்ளிகளில் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொழில்நுட்பக் கற்றல் வளங்களை பள்ளிகளில் எளிய வகையில் உருவாக்கவும், தொழில்நுட்ப மற்றும் கணினிமயமான பள்ளிகளில் ஆசிரியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், தமிழக பள்ளிக்கல்வித் துறை, காக்னிசன்ட் நிறுவனம் இணைந்து, பள்ளிகளில் தொழில்நுட்பத் தர மேம்பாட்டுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. 
  • முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், கணினிமயக் கற்றல் மேம்பாட்டு திட்டத்தின் அறிவுசார் பங்குதாரராக காக்னிசன்ட் நிறுவனம் செயல்படும்.
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது
  • பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரையிலிருந்த அமீரக வீரர் அரவிந்த் மற்றும் நேபாள வீரர் தீபேந்திரா சிங் ஆகியோரை முந்தியுள்ளார் ஷ்ரேயஸ். 
  • கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 80 மற்றும் 25 ரன்களை எடுத்திருந்தார். அதோடு இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 57*, 74* மற்றும் 73* என தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை விளாசியிருந்தார். அதன் மூலம் இந்த விருதை வென்றுள்ளார்.
  • மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் அமெலியா கெர் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையை 'ஒயிட் வாஷ்' செய்த இந்தியா

  • பெங்களூருவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
  • அதே போல பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அஷ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ஷ்ரேயஸ் ஐயர் வென்றிருந்தார். தொடர் நாயகன் விருதை இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் வென்றிருந்தார்.

அஸ்வின் 442 - டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய சாதனை

  • பெங்களூரு டெஸ்டில் அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினை (439 விக்கெட்கள்) பின்னுக்குதள்ளி அந்த இடத்தை கைப்பற்றினார்.
  • இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 442 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அருகே குரோம்பேட்டையில் ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையம் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

  • சென்னை அருகே குரோம்பேட்டையில் புதிதாக ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் தொடங்க விழா நேற்று நடைபெற்றது. 
  • இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, புற்றுநோய் மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அந்த மையத்தை முதல்வர் பார்வையிட்டார்.

'ஏர் இந்தியா' தலைவராக சந்திரசேகரன் தேர்வு

  • கடந்த ஆண்டு அக்டோபரில், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தில், டாடா குழுமம் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஏர் இந்தியாவை, டாடா சன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.
  • இந்நிலையில், தற்போது டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் சந்திர சேகரன், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ரூ.5000 கோடியில் தரமணியில் உலகளாவிய வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

  • டிஎல்எஃப் டௌன்டவுன் தரமணியில் 'ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்'ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 
  • டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பூங்காவானது 6.8 மில்லியன் சதுரஅடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. 
  • 5000 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல்திட்டத்தில், டிஎல்எஃப் நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும்.

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி

  • ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 18-21 மற்றும் 15-21 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து வீரர் Kunlavut Vitidsarn-வசம் தோல்வியை தழுவியுள்ளார்.
  • இறுதி போட்டியில் காலின் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்ஷயா சென்னுக்கு பின்னடைவு ஏற்பட்டது. 
  • இறுதி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ள லக்ஷயா சென்னுக்கு 6,840 அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு இன்னிங்ஸில் 880 ரன்கள் - ரஞ்சி கோப்பையில் சாதனை

  • ஒவ்வொரு வருடமும் இந்திய மாநிலங்களுக்கு இடையே ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான ரஞ்சிக்கோப்பை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 
  • இதில் நாகலாந்து மற்றும் ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஜார்க்கண்ட் அணி 203.4 ஓவர்களில் 3வது நாளில் 880 ரன்களை குவித்து, எதிரணியை மலைக்க வைத்தது. 
  • இதில் விராட் சிங் 107, விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா 266, ஷாபாஸ் நதீம் 177 ரன்கள் எடுத்து சாதனை படைத்தனர். ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே 4வது அதிகபட்ச ஸ்கோராக இந்த ஸ்கோர் பதிவாகியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் ரிஷப் பண்ட்

  • பெங்களூருவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இலங்கை 109 ரன்களுக்கு சுருண்டது. இந்நிலையில் 2வது நாளான இன்று இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.
  • ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற கபில்தேவின் 40 ஆண்டுகால் சாதனையை பண்ட் முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

ஆசிய ஹேண்ட்பால் - இந்தியா 'சாம்பியன்'

  • கஜகஸ்தானில், பெண்களுக்கான ஆசிய ஜூனியர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடந்தது. இதில் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தாய்லாந்து, இந்தியா, ஈரான் என, ஐந்து அணிகள் பங்கேற்றன. 
  • ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு ராபின்' முறையில் மோதியது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 32-31 என்ற கணக்கில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் 37-42 என, ஈரானிடம் தோல்வியடைந்த இந்தியா, 29-21 என கஜகஸ்தானை வீழ்த்தி எழுச்சி கண்டது.
  • நான்காவது, கடைசி போட்டியில் அசத்திய இந்தியா 41-18 என, தாய்லாந்தை வீழ்த்தியது. முடிவில், நான்கு போட்டியில் 3 வெற்றி, ஒரு தோல்வி என, 6 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்த இந்திய அணி, முதன்முறையாக ஆசிய கோப்பை வென்றது. 
  • தவிர, வரும் ஜூன் 22-ஜூலை 3ல் சுலோவேனியாவில் நடக்கவுள்ள 23வது உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 
  • இரண்டாவது இடம் பிடித்த ஈரானும் (6 புள்ளி), உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

ஆசிய யூத் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 5 தங்கம்

  • ஜோர்டானில், ஆசிய யூத் மற்றும் ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான யூத் 50 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் தமன்னா, உஸ்பெகிஸ்தானின் ரோபியான்கோன் பக்தியோரோவா மோதினர். 
  • அபாரமாக ஆடிய தமன்னா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.பெண்களுக்கான யூத் 48 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் நிவேதிதா கார்கி 3-2 என, உஸ்பெகிஸ்தானின் சைடகோன் ரக்மோனோவாவை தோற்கடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். 
  • மற்ற எடைப்பிரிவு பைனலில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஷஹீன் (60 கி.கி.,), ரவினா (63 கி.கி.,), முஸ்கன் (75 கி.கி.,) தங்கம் வென்றனர். மற்ற இந்திய வீராங்கனைகளான பிரியங்கா (66 கி.கி.,), கீர்த்தி (+81 கி.கி.,) பைனலில் தோல்வியடைந்து வெள்ளி வென்றனர்.
  • ஜூனியர் பிரிவில் இந்தியாவின் கிரிஷ் பால் (46 கி.கி.,), யஷ்வர்தன் சிங் (60 கி.கி.,) தங்கம் வென்றனர். ரவி சைனி (48 கி.கி.,), ரிஷாப் சிங் (60 கி.கி.,) வெள்ளி வென்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel