Type Here to Get Search Results !

TNPSC 18th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

அமெரிக்காவில் கரோனா பரவலைத் தடுக்க இந்திய வம்சாவளி மருத்துவா் நியமனம்

  • கரோனா தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக ஆசிஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா். பிகாா் மாநிலத்தில் கடந்த 1970-ஆம் ஆண்டு பிறந்த ஆசிஷ் ஜாவின் குடும்பம் கடந்த 1979-ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயா்ந்தது. அதனைத் தொடா்ந்து கடந்த 1983-ஆம் ஆண்டு அவரது குடும்பம் அமெரிக்கா சென்றது.
  • ஹாா்வா்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்த அவா், பிரௌன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். அமெரிக்காவின் மருத்துவக் கொள்கைகளை வகுப்பதற்கு உதவும் முன்னணி நிபுணா்களில் ஒருவராக ஆசிஷ் ஜா அறியப்படுகிறாா்.
  • இதுவரை கரோனா தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஜெஃப்ரி ஸியென்ட்ஸுக்கு பதிலாக அந்தப் பொறுப்புக்கு ஆசிஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய பொருளாதாரம் பாதிப்பு - பன்னாட்டு நிதியம் கணிப்பு

  • போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியானது, இந்தியாவின் பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் உயர்வானது, வர்த்தக அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. இது பணவீக்கம் உயரவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கவும் காரணமாக அமையும்.
  • இருப்பினும், இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிப்பு, நடப்பு கணக்கில் ஏற்படும் தாக்கத்தை ஈடுகட்டும் என எதிர்பார்க்கலாம். 
  • அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனப் பொருளாதாரங்கள் மீதான போரின் எதிர்மறையான தாக்கம், இந்தியாவின் ஏற்றுமதிக்கான தேவையைக் குறைக்கலாம்.
  • அதே சமயம், வினியோக தடைகள் இந்தியாவின் இறக்குமதியை பாதிக்கலாம். சுருக்கமாக சொல்வதென்றால், இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, நிச்சயமற்ற நிலை இருப்பதாக கருதுகிறேன்.
  • சீனாவை பொறுத்தவரை, போரால் அதன் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், ஒப்பீட்டளவில் சிறிதாக இருக்கும்.
மாத்ருபூமியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
  • மாத்ருபூமியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி  இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
  • செய்தித்தாளின் பயணத்தில் முன்னிலை வகிக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் பிரதமர் புகழாரம் சூட்டினார். 
  • “மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாத்ருபூமி இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காகப் பிறந்தது” என்று அவர் கூறினார். 
  • காலனி ஆட்சிக்கு எதிராக நமது நாட்டின் மக்களை ஒற்றுமைப்படுத்த இந்தியா முழுவதும் செய்தித்தாள்களையும், பருவ இதழ்களையும் தொடங்கிய புகழ்மிக்க பாரம்பரியத்தில் பதிப்புகளை அவர் முன்வைத்தார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel