டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு முதல் முறை பெண் துணைவேந்தர் நியமனம்
- டெல்லியில் மத்திய பல்கலைக் கழகமாக அமைந்திருப்பது ஜேஎன்யூ. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக அறியப்படுகிறது.
- ஜேஎன்யூ புதிய துணை வேந்தராக முதல் முறையாக பெண் பேராசிரியர் முனைவர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் (59) நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் சாந்தியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று நியமித்தார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.
'இந்திரதனுஷ்' தடுப்பூசி திட்டம் - மன்சுக் மாண்டவியா துவக்கம்
- நம் நாட்டில், கடந்த 2014ம் ஆண்டு, இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு, காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தட்டம்மை, நிமோனியா போன்ற நோய்களுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணிகள் துவங்கின.
- இந்நிலையில், இந்திரதனுஷ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் நான்காம் கட்டத்தை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.
மராட்டிய ஓபன் டென்னிஸ் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் ரோகன் போபண்ணா சாம்பியன்
- பலேவாடி ஸ்டேடியத்தில் மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய நாட்டின் ஜான் பேட்ரிக் ஸ்மித் மற்றும் லூக் சாவில்லே ஆகியோரை எதிர்த்து விளையாடினர்.
- மேலும் ஒரு மணி நேரம் மற்றும் 45 நிமிடங்கள் இந்த இறுதிப்போட்டி நீடித்தது. அதில் இந்திய வீரர்கள் 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். இதன் மூலம் 21-வது சர்வதேச டென்னிஸ் பட்டத்தை போபண்ணா வென்றார்.
- இதற்கு முன்னதாக அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் போபண்ணா பட்டம் வென்ற நிலையில் தற்போது இரண்டாவது பட்டத்தையும் போபண்ணா கைப்பற்றியுள்ளார்.
- அதன் மூலம் இருவரும் ஏடிபி உலக தர வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதிலும் ராம்குமார் முதல் முறையாக 100 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். அவர் 14 இடங்கள் முன்னேறி 94வது இடத்தை பிடித்துள்ளார். ரோகன் 8 இடங்கள் முன்னேறி 35வது இடத்தில் உள்ளார்.
33வது ஆப்ரிக்க கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் - செனகல் சாம்பியன்
- ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான 33வது ஆப்ரிக்க கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி காம்ரூனில் நடந்தது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் யாவுண்டே நகரில் நடந்தது. அதில் எகிப்து-செனகல் நாடுகள் மோதின.
- செனகல் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று முதல்முறையாக ஆப்ரிக்க கோப்பையை முத்தமிட்டது. கூடவே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற செனகல் மக்களின் 60 ஆண்டு கனவும் நனவானது.
- இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து 2வது இடத்தையும், முன்னாள் சாம்பியன் காம்ரூன் 3வது இடத்தையும், புர்கினோ ஃபசோ 4வது இடத்தையும் பிடித்தன. தொடரில் 8 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்த காம்ரூன் வீரர் வின்சென்ட் அபுபக்கர் 'தங்க காலணி விருது' வென்றார்.
கேரளா மாநில அரசின் லோக் ஆயுக்தா சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
- லோக் ஆயுக்தா என்பது மாநில அளவில் அமைக்கப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையம். இது, அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை விசாரிக்கும் ஓர் ஆணையம்.
- இந்தப் புகார்கள் மீதான விசாரணையை நடத்த, ஆளுநர் ஒரு லோக் ஆயுக்தா மற்றும் இரண்டு உப லோக் ஆயுக்தாக்களை, முதல்வர் மற்றும் சபாநாயகரின் ஆலோசனையின் பேரில் நியமிப்பார். புகார் அளிக்கப்பட்ட ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், லோக் ஆயுக்தா ஆணையம் ஆளுநர் அல்லது முதல்வரிடம் குறிப்பிட்ட நபர் பணியில் இருக்கத் தகுதி அற்றவர் என அறிவிக்கும். இதை அரசும் ஏற்றுக்கொண்டு அவர்களை பணியிலிருந்து நீக்கும்.
- இந்த நிலையில், கேரள அரசு லோக் ஆயுக்தாவின் தீர்ப்பை ஏற்கவும் நிராகரிக்கவும், அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றினை முன்மொழிந்திருக்கிறது.
- இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்திருந்தது. தற்போது, இந்தச் சட்டம் அமல்படுத்த ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார்.
- சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 நடைபெற்று வருகின்றன. இதில் திங்கள்கிழமை ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவு 1500 மீ. பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றாா் நெதா்லாந்தின் ஐரீன்.
- 35 வயதான ஐரீன் தனிநபா் பிரிவில் 5 ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். மேலும் அவா் ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக்கில் 12 பதக்கங்களை கைப்பற்றியுள்ளாா்.
- மகளிா் பிகா் ஸ்கேட்டிங் பிரிவில் ரஷியாவின் 15 வயதே ஆன இளம் வீராங்கனை கமீலா வலீவா தங்கப் பதக்கத்தை வென்றாா். அவா் முதன்முறையாக குவாட்ரபுள் ஜம்ப் செய்து இச்சிறப்பை பெற்றாா்.
- ரஷிய மற்றும் ஐரோப்பிய சாம்பியனான கமீலா ஏற்கெனவே பல்வேறு உலக சாதனைகளையும் முறியடித்துள்ளாா். ப்ரீ ஸ்கேட்டில் 178.92 புள்ளிகளுடன் ரஷியா தங்கம் வென்றது. அமெரிக்கா, ஜப்பான் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன. ஏற்கெனவே 2014-இல் சோச்சியில் ரஷியா இதே பிரிவில் தங்கம் வென்றிருந்தது.
- ஸ்பீட் ஸ்கேட்டிங் மகளிா் 500 மீ பிரிவில் இத்தாலியின் அரியன்னா ஃபொன்டன்னா 42.48 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றாா்.
- ஏற்கெனவே கடந்த ஒலிம்பிக்கிலும் அரியன்னா தங்கம் வென்றிருந்தாா். டச்சு வீராங்கனை சூஸேன் வெள்ளியும், கனடாவின் கிம் பௌட்டின் வெண்கலமும் வென்றனா்.
- பதக்கப் பட்டியலில் ஸ்வீடன் 3 தங்கத்துடன் முதலிடத்திலும், ரஷியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலத்துடன் இரண்டாம் இடத்திலும், நெதா்லாந்து தலா 2 தங்கம், வெள்ளி, 1 வெண்கலத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.