இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது இந்தியா
- இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.
- இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது.
- இதனை தொடர்ந்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி 16.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
- இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்கள் - சீனா சாதனை
- சீனா ஒரே ராக்கெட்டில் 22 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை செய்து உள்ளது. அது மட்டுமன்றி அனுப்பப்பட்ட அனைத்து 22 செயற்கைக்கோள்களும் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
- இந்த நிலையில் சீன விஞ்ஞானிகளுக்கு சீனாவின் பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் - நடால் சாம்பியன்
- மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் கேமரான் நோரியுடன் நேற்று மோதிய நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 4வது முறையாக மெக்சிகோ ஓபனில் கோப்பையை முத்தமிட்டார். முன்னதாக அவர் 2005, 2013, 2020ல் இங்கு சாம்பியனாகி இருந்தார்.
- நோரியுடனான பைனல் 1 மணி, 54 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. காயம் காரணமாக நீண்ட ஓய்வுக்குப் பிறகு 2022 சீசனில் களமிறங்கிய நடால், தொடர்ச்சியாக 3வது தொடரில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடால் தனது டென்னிஸ் வாழ்க்கையில் கைப்பற்றிய 91வது சாம்பியன் பட்டம் இது.
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 2தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனைகள்
- பல்கேரியாவின் சோபியாவில் நடந்த 73வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் தங்கம் வென்றார்கள்.
- 52 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் தங்கம் வென்ற நிலையில், 48 கிலோ எடைப் பிரிவில் நிது தங்கம் வென்றார்.
- முன்னாள் இளைஞர் உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற இத்தாலியின் எரிகா பிரிசியான்டாரோவை 5-0 என்ற கணக்கில் நிது வென்றார். ஜரீன், மூன்று முறை ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற உக்ரைனின் டெட்டியானா கோப்பை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
- ஹைதராபாத்தை சேர்ந்த ஜரீன், பல முறை தேசிய பதக்கம் வென்றவர், ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியலின் 2019 பதிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
- நிது, இரண்டு முறை இளைஞர் உலக சாம்பியன் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.