Type Here to Get Search Results !

TNPSC 26th FEBRUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம் - ரூ.5 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு அனுமதி

 • மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் நூறுவிதமான பவளப் பாறைகள், 200 வகையான கடல் தாவரங்கள், சங்குகள், கடல் ஆமை, கடற்குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பாலூட்டி இனங்களைச் சேர்ந்த கடல் பசு, டால்பின் இப்பகுதியில் காணப்படுகின்றன.
 • மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் முன்பு அதிக எண்ணிக்கையில் கடல் பசுக்கள் இருந்தன. தற்போது அவை வெகுவாக குறைந்துவிட்டன. இந்திய வனவிலங்கு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தகவலில் இந்திய கடல் பகுதிகளில் 200 கடல் பசுக்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்நிலையில், தமிழகத்தில் அழிந்துவரும் கடல் பசு இனங்கள் மற்றும் அதன் கடல் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் ரூ.5 கோடியில் கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசின் வனத் துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது.
 • கடல் பசுவை மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கின்றனர். கடல் பசு வெண் சாம்பல் நிறத்தில் இருக்கும். அதிகபட்சம் 4 மீட்டர் நீளம், ஆயிரம் கிலோ எடை வரை இருக்கும். 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது.
 • கடலில் 30 அடி ஆழம் வரை சென்று கடற்புற்களை மேயக்கூடிய கடல் பசுக்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கடலின் மேல் மட்டத்துக்கு வந்து மூச்செடுக்கும். கடல் பசுவின் கர்ப்பக் காலம் ஓராண்டு ஆகும். பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியைத்தான் ஈனும்.
 • கடல் பசுவின் இறைச்சி மருத்துவ குணமுள்ளது என்பதால், அதை அதிக அளவில் வேட்டையாடி வருகின்றனர். மேலும், அதன் தோலில் இருந்து விலை உயர்ந்த ஆடைகளும், எலும்பில் இருந்து மருத்துவப் பொருட்களும், கொழுப்பில் இருந்து தைலங்களும் தயாரிக்கப்படுகின்றன.
ஐந்தாண்டுகளுக்கு ரூ 1,600 கோடியில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்
 • தேசிய சுகாதார ஆணையம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் எனப்படும் சுகாதார காப்பீட்டு திட்டத்தை சோதனை அடிப்படையில், புதுச்சேரி, லடாக், சண்டிகர் உள்ளிட்ட ஆறு யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து, இதை நாடு முழுதும் விரிவுபடுத்த, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
 • இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்  என்ற மத்தியத் துறைத் திட்டத்தை ரூ 1,600 கோடி மதிப்பீட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய அளவில் செயல்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக தேசிய சுகாதார ஆணையம் இருக்கும்.
 • ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்  திட்டத்தின் கீழ், தங்கள் ஆபா (ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்) எண்களை மக்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அவர்களின் டிஜிட்டல் சுகாதாரப்  பதிவுகளை அதனுடன் இணைக்கவும் முடியும். 
 • சுகாதாரச்  சேவை வழங்குநர்களால் மருத்துவ அடிப்படை  முடிவுகள் எடுக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இது உதவும். தொலைமருத்துவம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலமும், சுகாதாரச் சேவைகளை நாடு முழுவதும் எளிதில் பெரும்  வசதியைச்   செயல்படுத்துவதன் மூலமும் தரமான சுகாதாரப் பாதுகாப்பிற்கான சமமான அணுகலை இந்தப்  பணி மேம்படுத்தும்.
350 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா
 • உக்ரைன்-ரஷ்யா மோதல் அதிகரித்து வருவதையடுத்து பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத சப்ளை மற்றும் நிதி உதவி வழங்கி வருகின்றன. 
 • இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா சார்பாக உக்ரைன் நாட்டுக்கு 350 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவ போர் கருவிகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார். 
 • மேலும் அமெரிக்காவில் செயல்படும் ரஷ்ய வங்கிகள், தொழில் ஸ்தாபனங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆபரேஷன் கங்கா
 • உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. 
 • உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயட்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது.
 • உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 219 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானத்தில் ருமேனியாவில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு "ஆபரேஷன் கங்கா" என மத்திய அரசு சார்பில் பெயர் வைத்துள்ளது.
LIC IPO அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் கொள்கைத் திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
 • லைஃப் இன்சூரன்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா (Life Insurance Corp of India) காப்பீட்டு நிறுவனத்தில் 20% வரை அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் கொள்கைத் திருத்தத்திற்கு இந்திய அமைச்சரவை 2022, பிப்ரவரி 26, சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது
 • சிறப்பு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் எல்ஐசியில் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படாது, அதே நேரத்தில் மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் 74% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
துறை சார்ந்த ஏலங்களுக்குப் பதிலாக பொதுவான மின்-ஏல சாளரத்தின் மூலம் நிலக்கரி நிறுவனங்கள் நிலக்கரியை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல்
 • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கீழ்க்கண்டவற்றுக்கு ஒப்புதல் அளித்தது
 • கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) / சிங்கரேணி கோலியரீஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) ஆகியவற்றின் மின்-ஏல சாளரத்தின் மூலம் நிலக்கரி நிறுவனங்களால் இணைக்கப்படாத அனைத்து நிலக்கரியையும் வழங்குதல். மின் துறை மற்றும் வணிகர்கள் உட்பட ஒழுங்குபடுத்தப்படாத துறைக்கு இந்த மின்-ஏலம் சேவையாற்றும்.
 • நிலக்கரி இணைப்புத் தேவைகளை சிஐஎல் மற்றும் எஸ்சிசிஎல் நிறுவனங்கள் பூர்த்தி செய்வதை பொறுத்து இது அமையும். மின்சாரம் மற்றும் மின்சாரம் அல்லாத நுகர்வோருக்கான தற்போதைய இணைப்புகளை இது பாதிக்காது.
 • ஒற்றை மின்-ஏல சாளரத்தின் மூலம் வழங்கப்படும் நிலக்கரி ரயில் மூலம் எடுத்து செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். இருப்பினும், நிலக்கரி நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணங்கள் அல்லது தள்ளுபடிகள் எதுவும் செலுத்தாமல், நுகர்வோர் தங்கள் விருப்பத்தைப் பொறுத்து, சாலை முறை/பிற முறைகள் மூலமும் நிலக்கரியை எடுத்து செல்லலாம்.
 • சிஐஎல்/எஸ்சிசிஎல் மூலம் நீண்ட கால நிலக்கரி ஒதுக்கீடு, நிலக்கரி நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும் விலையில், தற்போதுள்ள நிலக்கரி இணைப்புகளுக்கான விநியோகங்களை பாதிக்காமல், சொந்த எரிவாயு ஆலைகளுக்கு அனுமதிக்கப்படும். இருப்பினும், மின் துறைக்கான நிலக்கரியின் அறிவிக்கப்பட்ட விலையில் வரிகள், ராயல்டி போன்றவை நிலக்கரி நிறுவனங்களால் செலுத்தப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel