கேஐஓசிஎல் நிறுவனத்தில் நிலக்கரி உலைக்கு மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் அடிக்கல்
- பணம்பூர் மங்களூரில் உள்ள குத்ரேமுக் இரும்புத்தாது நிறுவனத்தில் (KIOCL), நிலக்கரி உலைக்கு மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் அடிக்கல் நாட்டினார். ரூ.836 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த உலை 24 மாதத்தில் கட்டி முடிக்கப்படும்.
ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை
- ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையில் ஒரு ஆணையத்தை ஒன்றிய அரசு நியமித்தது.
- இந்த ஆணையம் ஆய்வு நடத்தி ஒன்றிய அரசுக்கு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக பதில் அளிக்க மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
- இதையடுத்து கேரள அரசு சார்பில் பதில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:
- அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னருக்கு பல முக்கிய பொறுப்புகள் இருப்பதால் அவருக்கு பல்கலைக்கழக வேந்தர் பதவி அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கவர்னரை நியமிப்பதற்கு முன்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.
- கவர்னர் பதவியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதற்கு பொருத்தமான நபரை மட்டுமே நியமிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என்பது அந்தப் பதவிக்கு தடையாக இருக்கக்கூடாது.
- அரசியலமைப்பு சட்டத்தை மீறினாலோ, பல்கலைக்கழக வேந்தர் பதவி மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளில் தவறு செய்தாலோ கவர்னரை நீக்க மாநில சட்டசபைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
- கவர்னருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது குறித்து முறையாக நிர்ணயம் செய்ய வேண்டும். அனுமதிக்காக அரசு அனுப்பும் மசோதாக்கள் காலதாமதம் இல்லாமல் முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன.
- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி, இந்திய அணி சாதனை படைத்தது.
- இந்த வெற்றியின் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பதிவு செய்த 9-வது வெற்றி இதுவாகும். முன்னதாக ஒருநாள் தொடரையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.
- இந்நிலையில், ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
சர்வதேச மல்யுத்தத் தொடரில் இந்தியாவுக்கு 6 பதக்கம்
- பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச மல்யுத்தத் தொடரில் ஒரே நாளில் இந்திய அணி 6 பதக்கங்களை வென்று சாதனை புரிந்தது.ரவிக்குமார், கவுரவ் பலியான், தீபக் புனியா, பிங்கி, ரீத்திகா, ருபின் ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.
- 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தஹியா, ஆண்கள் 79 கிலோ கிராப்லர் பிரிவில் கவுரவ் பலியன் மற்றும் பெண்கள் 55 கிலோ மல்யுத்த வீராங்கனை பிங்கி ஆகியோர் அந்தந்த எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர், ரீத்திகா (பெண்கள் 72 கிலோ), தீபக் புனியா (ஆண்கள்) கிரீக்கோ ரோமன் பிரிவில் ரூபின் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
- 57 கிலோ பிரிவிலிருந்து 61 கிலோ பிரிவுக்கு மாறியதிலிருந்து, ஒலிம்பிக்கிற்குப் பிறகு தனது முதல் போட்டியில் பங்கேற்கும் ரவி தஹியா, போட்டியின் தொடக்கத்தில் தனது வழக்கமான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மற்றும் அரையிறுதியில் சக இந்தியரான பங்கஜை தோற்கடித்தார். இருப்பினும், ஒலிம்பிக் பதக்கம் வென்ற தஹியா, அல்பேனியாவின் ஜெலிம்கான் அபகரோவை எதிர்த்துப் போராடி இறுதிப் போட்டியில் 7-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனையடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- முன்னதாக அல்பேனிய வீரர் இந்தியாவின் ரவீந்தரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். பல்கேரியாவில் நடந்த இரண்டாவது நாளான இன்று இந்தியாவுக்கான மற்ற இறுதிப் போட்டியில், ஆசிய சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற கவுரவ் பலியன் பெலாரஸின் அலி ஷபானாவிடமும், பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் பிங்கி ருமேனியாவின் ஆண்ட்ரியா அனாவிடம் தோல்வியடைந்தனர்.
- வெண்கலத்துக்கான போட்டியில் ஆடவர் 92 கிலோ பிரிவில் தீபக் புனியா, பெண்கள் 72 கிலோ பிரிவில் ரீத்திகா, பெண்கள் 55 கிலோ கிரீக்கோ ரோமன் பிரிவில் இந்தியாவின் ருபின் வெண்கலம் வென்றனர்.
- இந்நிலையில் ஒரேநாளில் 3 வெண்கலம், 3 வெள்ளி வென்று 6 பதக்கங்களைக் கைப்பற்றி இந்திய அணி 10ம் இடத்தில் உள்ளது.