உலத்தமிழ் பீட விருது 2022
- வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை வழங்கும், உலத்தமிழ் பீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் செயல்படும், 60 தமிழ்ச் சங்கங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த பேரவை, உலகின் மிக முக்கிய தமிழ் அமைப்பாக கருதப்படுகிறது.
- இந்த அமைப்பின், 2021 - -2022ம் ஆண்டுக்கான விருது, ஈரோடு தமிழன்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலையில், அமெரிக்காவில் நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்ப் பேரவைக்கான கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டி, விருதை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
- இந்த விருதுடன் பட்டயங்கள் மற்றும் 12 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.அதேபோல, கனடாவின், டொரோண்டோ பல்கலை வழங்கும் மிக உயரிய விருதான நாவலர் விருதும், ஈரோடு தமிழன்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், பல்வேறு தமிழ் அமைப்புகள், அவரின் வாழ்நாள் சாதனைக்காக, இந்தாண்டு விருது பட்டியலில், ஈரோடு தமிழன்பனை சேர்த்துள்ளன.
- உலகத் தமிழ் அமைப்புகள் வழங்கும் உயரிய விருதுகள், கவிஞர் ஈரோடு தமிழன்பனை தேடி வருகின்றன.தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர் ஈரோடு தமிழன்பன்.
- இவர், மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், புதினம், சிறுவர் இலக்கியம் என, அனைத்து விதமான இலக்கிய பங்களிப்புகளையும் அளிப்பவர்.
- முன்னாள் பேராசிரியர், பொதிகை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர்; 50க்கும் மேற்பட்ட கவிதை நுால்களை எழுதியவர்.
- இவர் ஏற்கனவே, தமிழக அரசின், 'கலைமாமணி' விருது, மத்திய அரசு வழங்கும் 'சாகித்ய அகாடமி' விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
- சமீபத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும், கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை பெற்றார்.
யுவபுரஸ்கார் விருது 2022
- சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- 24 மொழிகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழி பிரிவில் 2021-ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதை எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் பெற உள்ளார்.
- இவர் எழுதிய நட்சத்திரவாசிகள் என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கான பதக்கமும் ரூ.50,000 பரிசுத் தொகையும் சாகித்ய அகாடமி சார்பில் வழங்கப்படும்.
- ராஜபாளையத்தை சேர்ந்த இவர், சென்னையில் மென்பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது நாவலின் களமும் ஐ.டி துறையைச் சார்ந்ததே. இது இவரின் முதல் நாவல்.
- இதற்கு முன்' டொரினோ' என்கிற சிறுகதை தொகுப்பு வெளியாகி இருந்தது. இணைய இதழ்களில் தொடர்ச்சியாக கதைகள் எழுதி வரும் கார்த்திக், 'ஒளிரும் பச்சை கண்கள்' என்கிற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டு உள்ளார்.
- 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பை அவர்களுக்கும், பாலபுரஸ்கார் விருது மு.முருகேஷ் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், யுவபுரஸ்காருக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
உலக விளையாட்டு தடகள வீரருக்கான விருது 2022
- இந்தியாவின் மூத்த ஹாக்கி கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜீஷ் திங்களன்று தனது 2021 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க உலக விளையாட்டு தடகள வீரருக்கான விருதை வென்றார், இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் ஆனார்.
- 2020 ஆம் ஆண்டில், இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் 2019 ஆம் ஆண்டில் தனது சிறந்த ஆட்டத்திற்காக இந்த மதிப்பு மிக்க உலகின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற முதல் இந்தியர் ஆனார். தற்போது இதே விருதை வென்று ஸ்ரீஜேஷ் சாதனை புரிந்த 2வது வீரர் ஆனார்.
- அக்டோபரில் நடந்த எஃப்ஐஎச் ஸ்டார்ஸ் விருதுகளில், 2021ஆம் ஆண்டின் சிறந்த கோல்கீப்பராக ஸ்ரீஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஓமன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சக தலைமைச் செயலாளர் டாக்டர் முகமது பின் நாசர் பின் அலி அல்-சாபி புதுதில்லியில் 2022 பிப்ரவரி 1 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.
- இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகளை அவர்கள் விவாதித்தனர்.
- புதுதில்லியில் 2022 ஜனவரி 31 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த 11-வது இந்தியா-ஓமன் கூட்டு ராணுவ ஒத்துழைப்பு குழு கூட்டம் பற்றி திரு ராஜ்நாத் சிங்கிடம் டாக்டர் முகமது பின் நாசர் விவரித்தார்.
- இந்த கூட்டுக் கூட்டத்திற்கு பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமாரும், ஓமன் பாதுகாப்பு அமைச்சக தலைமைச் செயலாளரும் தலைமை தாங்கினர். கூட்டுப் பயிற்சிகள், தொழில்துறை ஒத்துழைப்பு, செயல்பாட்டில் உள்ள பல்வேறு கட்டமைப்பு திட்டங்கள் உள்பட ராணுவங்களுக்கு இடையேயான செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து இருதரப்பினரும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்தனர்.
- இருதரப்பினருக்கும் வசதியான தேதியில் அடுத்த கூட்டுக் கூட்டத்தை ஓமனில் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
- முப்படைகளின் தளபதிகள், இந்திய பாதுகாப்பு தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோரையும் சந்தித்த தலைமைச் செயலாளர் தமது பயணத்தின் போது கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம், ராணுவ பயிற்சி அமைப்புகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ரந்த் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளார்.