Type Here to Get Search Results !

TNPSC 18th FEBRUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலகின் சிறந்த 30 சுற்றுலா தலங்களில் கேரள கிராமம்

  • அமெரிக்கா மற்றும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் பிரபல பயண இதழான காண்டே நாஸ்ட் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
  • இதன்மூலம் உலகின் சிறந்த 30 சுற்றுலாத் தலங்கள் பட்டியலில், அமெரிக்கா, இலங்கை,கத்தார், சிங்கப்பூர், ஜப்பான்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களோடு அய்மனம் கிராமும் இடம்பெற்றுள்ளது. இந்த கிராம மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
  • இந்த கிராமத்தில் வலசை வரும் பல நாட்டுப் பறவைகளை பார்வையிடுதல், நீண்டு விரியும் வயல்களின் வரப்புகளில் நடைபோடுதல், தேங்காய் அதிகம் விளையும் இங்கு தேங்காயின் உப தயாரிப்புப் பொருட்களை ருசிப்பது, படகு சவாரி, கதகளி, தற்காப்புப் பயிற்சியான களரிக்கலை ஆகியவற்றைப் பார்வையிடலாம். இந்த கிராமத்தை ஒட்டியே வேம்பநாடு ஏரியின் பொழிமுகப் பகுதியும் அமைந்துள்ளது.

இந்தியா-ஐக்கிய அமீரகம் இடையே ஒப்பந்தம்: 100 பில்லியன் டாலருக்கு வர்த்தகம்

  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை அடுத்து அடுத்த 5 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் இரு நாடுகளுக்கிடையே விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது
  • இதன் காரணமாக இந்தியாவில் தொழில் வளர்ச்சி பெருகும் என்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இதனால் பொருளாதார ஏற்றம் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவராக எஸ்.பிரபாகரன் மீண்டும் தேர்வு

  • அகில இந்திய பார்கவுன்சில் தலைவராக மனன் குமார் மிஸ்ரா பதவி வகித்து வருகிறார். இந்த பதவிகளுக்கான காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 6ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. 
  • இதையடுத்து, அகில இந்திய பார்கவுன்சில் தலைவராக மனன் குமார் மிஸ்ரா, துணை தலைவராக மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். 

மாநிலங்கள் இடையிலான பிரச்னைகளை தீர்க்கும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமலுக்கு வந்தது - ஒன்றிய அரசு அறிவிப்பு

  • நாடு முழுவதும் அணைகளை பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்குமான தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது
  • இச்சட்டத்தின்படி, மாநில அளவிலான அணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணைகளின் உரிமையாளர்களாக உள்ள மாநில அரசுகளுடன் இணைந்து, இந்த அணை பாதுகாப்பு ஆணையம் சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
  • இதன்படி, தற்போது தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை ஒன்றிய அரசு நிறுவி உள்ளதாக ஜல் சக்தி அமைச்சகம் நேற்று அரசிதழ் வெளியிட்டது. 
  • இந்த ஆணையம் ஒன்றிய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் 22 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழுவை கொண்டிருக்கும். 
  • தலைநகர் டெல்லியில் இருந்து இயக்கும் இந்த ஆணையத்தின் கீழ் 4 பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படும். மாநிலங்களால் அமைக்கப்படும் மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயும் அல்லது குறிப்பிட்ட அணையின் உரிமையாளராக இருக்கும் மாநில அரசுடன் மற்ற மாநிலத்திற்கு உள்ள பிரச்னையையும் தீர்த்து வைப்பதே இந்த ஆணையத்தின் முக்கிய செயல்பாடாகும்.

பாகிஸ்தானின் உயரிய விருது

  • பாகிஸ்தான் நாட்டிற்கு முதன்முறையாக வருகை தந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸுக்கு, அந்நாட்டின் இரண்டாவது உயரிய விருதான குடிமகன் விருது வழங்கப்பட்டது
  • போலியோ ஒழிப்பிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, பாகிஸ்தானின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' என்ற இந்த விருதை பில் கேட்ஸ்க்கு அந்த நாட்டின் அதிபர் ஆரிஃப் அல்வி வழங்கினார்.

தமிழகத்திற்கு தொழிற்துறை 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி ஒதுக்கீடு

  • ஐஐடி மேம்பாட்டிற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தொழிற்துறை 4.0 திட்டத்திற்காக அரசு ஐடிஐகளை தொழில் நுட்ப மையங்களாக மாற்றுவதற்கு ஏற்க ரூ.2,2001 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • மேலும், புதிய உபகரணங்கள், தொழில் நுட்பக் கருவிகள் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.

தானே- திவா இடையே புதிதாக 2 ரயில் பாதை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • எக்ஸ்பிரஸ் ரயில், நீண்ட தூர ரயில்களால் மின்சார ரயில்களை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை சரிசெய்யும் வகையில் தானே-திவா இடையே ரூ.620 கோடி செலவில் கூடுதலாக 2 வழிப்பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. 
  • இந்த திட்டத்தில் 1.4 கி.மீ. நீள ரயில்வே மேம்பாலம், 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில் பாதைகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை வெற்றிகர சோதனை

  • ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டு திட்டத்தில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, அதிவேகத்தில் மிக துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது. 
  • மேலும் எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை சுமார் 400 கிமீ பயணம் செய்து தாக்கும் தன்மை கொண்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிஜே -10 திட்டத்தின் கீழ் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இந்த ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல், கப்பல் அல்லது விமானத்தில் இருந்தும் ஏவலாம். இந்நிலையில் இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. 
  • முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருளைக் கொண்டு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel