துபாய் 'எக்ஸ்போ 2000' இந்திய அரங்கு சாதனை
- ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த துபாயில், 'எக்ஸ்போ 2000' கண்காட்சி, 2021 அக்., 1ல் துவக்கப்பட்டது; அன்று இந்திய அரங்கை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் பியுஷ் கோயல் துவக்கி வைத்தார்.
- இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களில் துபாய் எக்ஸ்போ கண்காட்சியில், இந்திய அரங்கிற்கு வருகை தந்தோர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டிஉள்ளது.
- துபாய் எக்ஸ்போவின் இந்திய அரங்கில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் பன்முக கலாசார சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இந்திய அரங்கில் தற்போது 'ஆந்திரா வாரம்' கொண்டாடப்படுகிறது.
- அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் வாரங்கள் கொண்டாடப்பட உள்ளன. துபாய் எக்ஸ்போ மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
கென் - பெட்வா நதிகளை இணைக்க திட்டம் ஆணையம் அமைத்தது அரசு
- கென் - பெட்வா நதிகளை இணைக்க, 44 ஆயிரத்து 605 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கென் - பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்திற்காக, ஆணையம் ஒன்றை, மத்திய அரசு அமைத்துள்ளது.
- இந்த திட்டத்தின்கீழ் அணை கட்டுவது, நீர்மின் நிலையம் அமைப்பது, சுரங்கங்கள் மற்றும் நீர் வழிப் பாதைகளை கட்டமைப்பது போன்ற பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ள உள்ளது.
- இதற்காக, மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையிலான, 20 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
- இந்த திட்டத்தின்கீழ், 221 கி.மீ., நீள கால்வாயும், 2 கி.மீ., நீள சுரங்கப்பாதையும் கட்டமைக்கப்பட உள்ளன. இதற்காக, உ.பி., மற்றும் ம.பி.,யில் உள்ள, 27 லட்சம் ஏக்கர் பாசன நிலம் உபயோகிக்கப்பட உள்ளன.
- உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளை உள்ளடக்கியது, ஜி - 20 கூட்டமைப்பு.ஐரோப்பிய யூனியன் போக, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
- இந்த கூட்டமைப்பின் மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் அதன் உறுப்பு நாடுகளில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மாநாடு, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நடக்க உள்ளது. வ
- ரும் நவம்பர் வரை, இந்த கூட்டமைப்பின் தலைவராக இந்தோனேஷிய பிரதமர் ஜோகோ விடோடோ இருக்கஉள்ளார்.வரும் டிசம்பர் முதல், அடுத்த ஆண்டு நவம்பர் வரை, இந்த ஜி - 20 கூட்டமைப்பை, பிரதமர் நரேந்திர மோடி தலைவராக இருந்து வழிநடத்த உள்ளார்.
- அடுத்த ஆண்டிற்கான ஜி - 20 மாநாட்டை, இந்தியா தலைமையேற்று நடத்த உள்ளது. தலைநகர் டில்லியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான பணிகளை கவனிக்க, ஜி - 20 செயலகம் கட்டமைக்கப்பட உள்ளது. இதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.
- ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை 2022 டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30 வரை இந்தியா ஏற்கவுள்ளது. இது 2023-ல் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டுடன் நிறைவடையும்.
- பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு செயலக செயல்பாட்டுக்கு வழிகாட்டும். இந்த குழுவில் இடம்பெறும் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், ஜி-20 ஷெர்பா அமைப்பு (வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர்) ஆகியோர் இந்தியாவின் ஜி-20 தலைமைப் பொறுப்புக்கு ஒட்டுமொத்த வழிகாட்டுதலை வழங்குவார்கள்.
செயற்கைக்கோள் வாயிலான இணைய சேவை: ஜியோ-எஸ்இஎஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம்
- செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகளை நாடு முழுவதும் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஜியோ நிறுவனம் தயாராகியுள்ளது.
- இதற்காக, லக்ஸம்பா்க்கைச் சோந்த எஸ்இஎஸ் நிறுவனத்துடன் ஜியோ கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 51:49 என்ற விகிதாச்சராத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் பெரும்பான்மையான 51 சதவீத பங்கு ஜியோ நிறுவனத்திடமே இருக்கும்.
செமி கண்டக்டர் சிப்களை தயாரிக்க Foxconn - வேதாந்தா குழுமம் இடையில் ஒப்பந்தம்
- மத்திய அரசின் தொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்கிலான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தின் கீழ், அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா மற்றும் Hon Hai டெக்னாலஜி குழுமம் (Foxconn) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் செமி கண்டக்டர் சிப்களை தயாரிக்க உள்ளன.
- முன்னதாக, 2021 டிசம்பரில், அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ. 76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான PLI திட்டத்தை மத்திய அரசு அனுமதித்தது.
- உலக அளவிலான செமி கண்டகடர் சிப் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்தி வசதிகளுக்கான பெரிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
- வேதாந்தா குழுமம், வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் சில்லுகளை தயாரிப்பதற்காக $15 பில்லியன் முதலீடு செய்யும் நோக்கத்தை ஜனவரியில் பகிர்ந்து கொண்டது.
- வேதாந்தா குழுமம், வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் சிப்களை தயாரிப்பதற்காக 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய விருப்பம் உள்ளதாக ஜனவரியில் கூறியது.
- இரு நிறுவனங்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வேதாந்தா நிறுவனத்திடம் பெரும்பாலான பங்குகளை கொண்டிருக்கும். Foxconn அதை விட குறைவான அளவு பங்குகளை வைத்திருக்கும். வேதாந்தாவின் அகர்வால் கூட்டு நிறுவனத் தலைவராக இருப்பார்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டம்: 5 மாநிலங்களில் 60,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி
- ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தற்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 114.04 லட்சமாக உள்ளது. இவற்றில் 93.25 லட்சம் வீடுகளை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
- 54.78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இத்திட்டத்தில் மொத்த முதலீடு ரூ.7.52 லட்சம் கோடி. இதில் மத்திய அரசின் உதவி ரூ.1.87 லட்சம் கோடியாகும். இதில் ரூ.1.21 லட்சம் கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.