சிங்கப்பூர் கண்காட்சியில் 'தேஜஸ்' போர் விமானம்
- தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், நாளை மறுநாள் முதல், 18ம் தேதி வரை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற உள்ளது. தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த, உலக நாடுகளுக்கு இது ஒரு சிறந்த தளமாக பார்க்கப்படுகிறது.
- இந்நிலையில் அந்த கண்காட்சியில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று தேஜஸ் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
- பார்வையாளர்களிடம் இதன் திறனை காட்டுவற்காக, இந்த போர் விமானங்கள் வானில் சாகசம் புரிய உள்ளன. இதற்காக, இந்திய விமானப் படையை சேர்ந்த, 44 வீரர்கள் சிங்கப்பூர் சென்றடைந்தனர்.
பெங்களூரு ஓபன் 2022
- பெங்களூரு கேஎஸ்எல்டிஏ மைதானத்தில் இரட்டையா் இறுதி ஆட்டத்தில் சாகேத்-ராம்குமாா் இணையை பிரெஞ்சு இணையான கிரெனியா்-முல்லா் எதிா்த்து ஆடியது. உள்ளூா் ரசிகா்கள் ஆதரவுடன் ஆடிய இந்திய இணை 6-3, 6-2 என்ற நோ செட்களில் வென்று பட்டத்தைக் கைப்பற்றியது.
- ஓற்றையா் பிரிவு அரையிறுதியில் தைபே வீரா் சுன் செங் 7-5, 6-4 என பிரான்ஸின் என்ஸோவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா். குரோஷியாவின் போா்னாவுடன் மோதுகிறாா் செங்.
நவம்பர் 7ம் தேதி தேசிய மாணவர் தினமாக கொண்டாடப்படவேண்டும் - குடியரசு தலைவர் விருப்பம்
- மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்படவே கிராமத்திற்கு இன்று (பிப்ரவரி 12, 2022) சென்ற குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் அஸ்தி கலசத்திற்கு பூஜை செய்து, பகவான் புத்தர், டாக்டர் அம்பேத்கர், திருமதி ரமாபாய் அம்பேத்கர் மற்றும் ராம்ஜி அம்பேத்கர் ஆகியோருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 1900-ம் ஆண்டு பாபாசாகேப் பள்ளியில் சேர்ந்த நவம்பர் 7-ம் தேதி மாணவர் தினமாக மகாராஷ்டிராவின் பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது என்றார். மகாராஷ்டிர அரசின் இந்த முயற்சியைப் பாராட்டிய அவர், பாபா சாகேப்புடன் தொடர்புடைய ஒவ்வொன்றும் கருணை மற்றும் சமத்துவச் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உணர நம்மை ஊக்குவிக்கிறது என்று கூறினார்.
- பாபா சாகேப் அம்பேத்கரின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் நவம்பர் 7-ம் தேதியை நாடு முழுவதும் மாணவர் தினமாக கொண்டாடுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றார் அவர்.
- அம்படவே கிராமத்திற்கு,உத்வேக மண் எனப் பொருள் படும் 'ஸ்பூர்த்தி-பூமி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், பாபாசாகேப் தனது வாழ்நாள் முழுவதும் முழு ஆற்றலுடன் பல்வேறு துறைகளில் பங்களித்ததால், அவரது மூதாதையர் கிராமத்தை 'ஸ்பூர்த்தி-பூமி' என்று அழைப்பது பொருத்தமானது என்று கூறினார்.
- 'ஸ்பூர்த்தி-பூமி' என்ற லட்சியத்தின்படி, பாபாசாகேப் எப்போதும் போற்றிக் கொண்டிருந்த நல்லிணக்கம், இரக்கம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமூக அமைப்பு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.