Type Here to Get Search Results !

மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டம் / NATIONAL FISHERS SCHEME

 

TAMIL
  • மீனவர்களின் நலனுக்காக ‘நீலப் புரட்சி’, மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டம்  போன்றவற்றை மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அமல்படுத்தியது. 
  • நீலப் புரட்சி திட்டம், 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான  ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் மீன்வள மேலாண்மை திட்டம் ஆகும். இத்திட்டம் கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.
  • தற்போது  பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தை மீன்வளத்துறை அமல்படுத்தி வருகிறது. இது மீன்வளத்துறையில் நிலையான  மற்றும் பொறுப்பான மேம்பாடு மூலம் நீலப் புரட்சியை ஏற்படுத்தும் திட்டமாகும்.  
  • இத்திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு முதல் 2024- 2025ம் ஆண்டு வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
  • இதில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மீனவர்களுக்கு, மீன்பிடி தடைகாலத்தில் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டசத்து உதவி அளிக்கப்படுகின்றது.  இத்திட்டத்தின் கீழ் மீனவர் ஒருவருக்கு தலா ரூ.4,500 அளிக்கப்படுகிறது.
  • விபத்தில் சிக்கி மீனவர்கள் இறந்தாலோ, அல்லது நிரந்தர இயலாமை ஏற்பட்டாலோ ரூ.5 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. ஒரு பகுதியில் நிரந்தர இயலாமை ஏற்பட்டால் ரூ.2,50,000 வழங்கப்படும். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் ரூ.25,000 வழங்கப்படும்.
  • மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் பங்காக தற்போது  வரை ரூ.369.55 கோடி செலவிடப்பட்டுள்ளது
ENGLISH
  • The Central Ministry of Fisheries implemented the 'Blue Revolution' for the benefit of fishermen and the National Welfare Scheme for Fishermen. The Blue Revolution Plan is an integrated development and fisheries management plan from 2015 to 2020. The project ended in March last year.
  • Currently, the Fisheries Department is implementing the Prime Minister's Fisheries Plan. It is a project that will bring about the Blue Revolution through sustainable and responsible development in the fisheries sector.
  • Under this scheme, an unprecedented maximum investment of Rs. 20,050 crore is being made in all the States and Union Territories from 2020-21 to 2024-2025. This includes providing livelihood and nutrition assistance to socio-economically backward fishermen during the fishing ban. Under this scheme a fisherman is given Rs. 4,500 per head.
  • An insurance cover of Rs. 5 lakhs is provided in case of death or permanent disability of the fishermen involved in the accident. Rs 2,50,000 will be paid in case of permanent disability in an area. Rs 25,000 will be paid if the accident is treated at the hospital.
  • The Central Government has so far spent Rs. 369.55 crore to implement the National Welfare Scheme for Fishermen

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel