கீழடி 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்தகட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலா துறை செயலர் பி.சந்திரமோகன், சிவகங்கையில் இருந்து காணொலி வாயிலாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இந்த நிதி ஆண்டில் ரூ.5 கோடியில் மேற்கண்ட 7 தொல்லியல் அகழாய்வுகள், 2 கள ஆய்வுகள், சங்ககால கொற்கை துறை முகத்தை அடையாளம் காணும் முன்களப் புல ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டின் 4வது பதிப்பு
- வெள்ளிக்கிழமை (2022, பிப்ரவரி 11) மெல்போர்னில் நடைபெற்ற குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டின் 4வது பதிப்பில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.
- எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், இந்தியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை (UNSCR) மீறியதாகக் வட கொரியாவை கண்டித்த இந்த மாநாடு, பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்காக அந்நாட்டை கண்டித்தனர்.
- இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை, மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்க வேண்டும்' என, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும், 'குவாட்' அமைப்பின் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரைஸ் பெய்ன் என குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
சென்னை விமான நிலையத்துக்கு சிறந்த சேவைக்காக சர்வதேச தி வாய்ஸ் ஆஃப் தி கஸ்டமர்' எனும் அங்கீகாரம்
- சென்னை விமான நிலையத்தில், பயணிகளின் பயண அனுபவத்தை விமான நிலைய அதிகாரிகள் அறிந்து வருகின்றனர். கரோனா தொற்று காலகட்டத்திலும், பயணிகளுக்கு சிறந்த சேவைகளை விமான நிலையம் வழங்கியது.
- இதனைக் கவுரவிக்கும் விதமாக, சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில், 'தி வாய்ஸ் ஆஃப் தி கஸ்டமர்' எனும் அங்கீகாரத்தை சென்னை விமான நிலையத்துக்கு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு இல்லத்தின், தலைமை கமிஷனராக அதுல்ய மிஸ்ரா நியமனம்
- தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்துள்ள அரசாணையில், 'டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின், தலைமை கமிஷனராக பதவி வகித்த, ஜக்மோகன் சிங் ராஜு விருப்ப ஓய்வு பெற்று விட்டார்.
- 'அந்த இடத்தில், தமிழக பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரும், கூடுதல் தலைமை செயலருமான அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்' எனக் கூறப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் 2வது முறையாக நியமனம்
- டாடா குழு நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவன தலைவராக கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த என்.சந்திசேகரன் (58) நியமிக்கப்பட்டார்.
- இவரது பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, 2வது முறையாக சந்திரசேகரனின் பதவிக்காலத்தை நீட்டித்து டாடா குழுமம் மீண்டும் நியமனம் செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது
- மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
- முதல் இரு போட்டிகளில் இந்திய அணி பெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3வது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
- இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. ஆட்டத்தின் இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 சேர்த்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 37.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
- மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய தர்பார் மண்டபத்தை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார் (பிப்ரவரி 11, 2022).
- இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மகாராஷ்டிரா ஆன்மீக பூமி என்பது போலவே, அநீதிக்கு எதிராக போராடும் வீரம் செறிந்த பூமியும் ஆகும்.
- மகாராஷ்டிரா என்பது இந்தியாவின் மாபெரும் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையமாகும். இந்த மாநிலம் திறமை மற்றும் இயற்கை அழகை கொண்டுள்ளது.
- இத்தகைய சிறப்புகள் காரணமாக நான் மட்டுமின்றி இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் மகாராஷ்டிராவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருகின்றனர்.
- ஜனதா தர்பார் மூலம் அரசு அதிகாரிகள் மக்களுடன் தொடர்பு கொள்ளும் நடைமுறை பிரபலமாகி வருகிறது. இந்த வகையில் புதிய கட்டமைப்பு கொண்ட இந்த தர்பார் மண்டபம் புதிய இந்தியாவின், புதிய மகாராஷ்டிராவின், நமது துடிப்புமிக்க ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
- 2019-20-ம் ஆண்டில் இந்தியாவில் வேளாண் ஏற்றுமதி ரூ.2,52,297 கோடியாக இருந்தது. இது நடப்பு விலைகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக்கிடையில் 2020-21-ல் வேளாண் ஏற்றுமதி 22.8 சதவீதம் அதிகரித்து ரூ.3,09,939 கோடியாக இருந்தது. இது ஜிடிபி-ல் 1.6 சதவீதம் ஆகும்.
- உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த அகாடமியை ரயில்வேயில் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில், தில்லி கிஷன்கஞ்சில் சுமார் ரூ. 30.76 கோடி மதிப்பில் இந்தப் பயிற்சி மையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- நாட்டிலேயே மிகப்பெரியதாக நவீன வசதிகளுடன் இந்த மல்யுத்தப் பயிற்சி மையம் இருக்கும். வரும் காலங்களில் பல வளரும் மல்யுத்த வீரர்கள் சாம்பியன் ஆவதற்கு இந்த அகாடமி வாய்ப்பளிக்கும்.
- இந்தியாவில் மல்யுத்தத்தை ஊக்குவிப்பதில் இந்திய ரயில்வே முக்கியப் பங்காற்றியுள்ளது. பெரும்பாலான பிரபல மல்யுத்த வீரர்கள் ரயில்வேயைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியா வென்ற பதக்கங்களில் பெரும்பாலானவை இந்திய ரயில்வேயில் இருந்துதான் { திரு சுஷில் (2008 & 2012), திருமதி சாக்ஷி மாலிக் (2016), திரு எஸ் ரவிக்குமார் மற்றும் திரு பஜ்ரங் (2020)} என்பது குறிப்பிடத்தக்கது.