Type Here to Get Search Results !

டார்வின் தினம் / DARWIN DAY

 

TAMIL

டார்வின் தினம் உருவானது எப்படி?
  • பிப்ரவரி 12, 1809ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி என்ற டவுனில் ராபர்ட் டார்வின், சுசானா டார்வின் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார் சார்லஸ் டார்வின். 
  • சிறுவயதிலேயே இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட சார்லஸ், பூச்சிகள், பறவைகள் மீது அதிக ஆர்வம் காட்டி வந்தார். இளம் பருவத்தில் ஆர்வம் இல்லாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்த டார்வின், அதன் பின்னர் தந்தையின் அறிவுரையின் படி கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் எனப்படும் natural 'theology' படித்தார்.
  • 22 வயதில் பட்டம் பெற்ற டார்வின், உடனடியாக தனது நண்பரும், கப்பல் கேப்டனுமான ராபர்ட் பிட்ஸ்ராய் என்பவருடன் இணைந்து பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 
  • அந்த பயணம் மூலம பல விலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகியனவற்றின் எலும்புகளை சேகரித்தார். அந்த ஆராய்ச்சியின் விளைவாகவே உயிரினங்களின் பரிமாண தத்துவத்தை டார்வினால் வெளிக்கொணர முடிந்தது.
  • இதனை மையமாக கொண்டு 1859ஆம் ஆண்டு 'இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்' (The Origin of Species by Natural Selection) என்ற உலகையே வியப்பில் ஆழ்த்திய புத்தகத்தை வெளியிட்டார். 
  • அதில் உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். "survival of the fittest" என பெயரிட்டார்.
  • ஊர்வன முதல் மனிதன் வரை எப்படி உருவானது என்பதை கண்டறிந்து, அறிவியல் பூர்வமாக விளக்கிய பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின் 1882ம் ஆண்டு காலமானார். 
  • அவரது மறைவிற்கு பிறகு பிப்ரவரி 12ம் தேதி, 1909 அன்று அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 'இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்' என்ற புத்தகத்தை டார்வின் வெளியிட்டதற்கான 50ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
  • 1997 முதல், நியூயார்க் நகர கல்லூரியின் பேராசிரியர் மாசிமோ பிக்லியூசி பிப்ரவரி 12 ஆம் தேதியை டார்வின் தினமாகக் கொண்டாடத் தொடங்கினார். 
  • 2015 ஆம் ஆண்டில், அமெரிக்க சட்டமியற்றுபவர் ஜிம் ஹைன்ஸ் ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார், அது பிப்ரவரி 12 ஆம் தேதியை டார்வின் தினமாக அறிவிக்க வழிவகுத்தது.
டார்வின் தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம்
  • சார்லஸ் டார்வினின் அறிவார்ந்த கொள்கைகளை மக்கள் பின்பற்ற ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் பிப்ரவரி 12ம் தேதி டார்வின் தினம் கொண்டாடப்படுகிறது. 
  • இது மக்களுக்கு விஞ்ஞான வழிமுறைகள் மூலம் உண்மையை ஆராய தூண்டுகோளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ENGLISH
    How did Darwin's Day originate?
    • Charles Darwin was born on February 12, 1809, in Roosevelt, England, the son of Robert Darwin and Susanna Darwin.
    • Charles, who was interested in nature from an early age, became more interested in insects and birds. Darwin attended medical school with no interest in adolescence, and then studied natural 'theology', also known as theology, at the University of Cambridge on the advice of his father.
    • Darwin, who graduated at the age of 22, immediately traveled extensively with his friend and ship captain Robert Pittsburgh. Through that journey he collected the bones of many animals, birds and reptiles. As a result of that research Darwin was able to uncover the dimensional theory of living things.
    • With this in mind, he published the world-famous book The Origin of Species by Natural Selection in 1859. In it will stand those who have merit and strength in the life struggle of living beings. Named the "survival of the fittest".
    • Charles Darwin, the father of evolution, died in 1882. After his death, February 12, 1909, marked the 50th anniversary of Darwin's publication of the book The Origin of Creatures in Nature at the American Museum of Natural History.
    • Since 1997, Massimo Biglyucci, a professor at New York City College, has been celebrating February 12 as Darwin's Day. In 2015, U.S. Legislator Jim Hines introduced a resolution that led to declaring February 12 as Darwin's Day.
    The Importance of Celebrating Darwin's Day
    • Darwin's Day is celebrated annually on February 12 with the aim of encouraging people to follow Charles Darwin's intellectual principles. It is hoped that this will inspire people to explore the truth through scientific means.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel