இந்திய கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜத்துக்கு 'டைம்' வாழ்நாள் சாதனையாளர் விருது
- உலகம் முழுவதும் உள்ள கணித அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஒன்று கூடி விவாதிப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'டைம்' (TIME -Technology and Innovation in Math Education) என்ற சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.
- இந்த மாநாட்டில் கணித கல்வியில் சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு 'நளினி பாலா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படும்.
- அதன்படி 10-வது டைம் மாநாடு கரோனா பரவலால் கடந்த டிசம்பர் மாதம் இணையவழியில் நடைபெற்றது. இதில் புதுமையான கற்பித்தல் முறைகள், தொழில்நுட்பங்களுடன் கணிதத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதன் ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
- மேலும், இந்த மாநாட்டில் கணித பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துக்கு 'நளினி பாலா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதேபோல், அறிவியல் பரப்புரை பணிக்காக 2020-ம் ஆண்டு இவருக்கு இந்திரா காந்தி விருது தரப்பட்டது.
வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய இ-வாடகை செயலி தொடக்கம்
- நெல் தரிசில், உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை 11 லட்சம் ஏக்கரில் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் விதைகள் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
- உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில்கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருளை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மூலம் ரூ.97.01 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை, வணிகத்துறை கட்டிடங்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
- வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- மேலும், ரூ.50.73 கோடி மானியத்தில், விவசாயிகளுக்கு 2,118வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் வழங்குதல்மற்றும் வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்து, 5 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை வழங்கினார்.
பருத்தி விவசாயிகளின் நலனுக்காக 11 கோடியில் 'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பருத்தி விவசாயிகளின் நலனுக்காக 11 கோடியில் 'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' என்ற புதிய திட்டத்தை 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
- இதில், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அவற்றில் ஒரு சிறப்பம், நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம்.
மானாமதுரை அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்குறிச்சியில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மானாமதுரை மீனாட்சிசுந்தரம், உசிலங்குளம் தாமரைக்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
- கல்குறிச்சி கிராம மயானத்தில் கிடைத்த தாழியின் தடிமன் ஒரு இஞ்ச் ஆகும். இந்த தாழிகளின் வாய்ப்பகுதி ஒரு இஞ்ச், முக்கால் இஞ்ச், அரை இஞ்ச், கால் இஞ்ச் தடிமனில் காணப்படுகிறது.
- ஓடுகளின் உட்பகுதி கருமை நிறத்திலும், வெளிப்பகுதி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. மேலும் தாழியின் கழுத்து பகுதியில் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
- இந்த தாழிகள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது'
நடப்பு நிதியாண்டில் 9.2% பொருளாதார வளர்ச்சி - தேசிய புள்ளியியல் அலுவலகம் கணிப்பு
- கொரோனா தொற்றால் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், உலகம் முழுவதும் பணக்கார நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை பொருளாதார சந்திப்பை சந்தித்து வருகின்றன.
- இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. பல்வேறு தொழில்துறைகள் பெரும் பொருள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 9.2 சதவிகிதம் வளர்ச்சியடையும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.
- மணிப்பூர் - திரிபுரா மாநிலங்களை அசாம் வழியாக இணைக்கும் முதல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் மணிப்பூர் முதல்வர் திரு நாங்தோம்பம் பிரன் சிங் மற்றும் திரிபுரா முதல்வர் திரு பிப்லப் குமார் தேவ் ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.
- மணிப்பூர், திரிபுரா மற்றும் தெற்கு அசாம் மக்களின் நீண்டநாள் கோரிக்கை அகர்தலா- ஜிரிபம்-அகர்தலாவை இணைக்கும் சிறப்பு ரயில்கள் ஜன் சதாப்தி தொடக்கம் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் அகர்தலா மற்றும் ஜிரிமம் ரயில் நிலையங்களில் இருந்து ஒரே நேரத்தில் தொடங்கி வைக்கப்பட்டன.
- தெலங்கானாவின் ஐதராபாதில் ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்ற இ-நிர்வாகம் 2021 குறித்த 24-வது தேசிய கருத்தரங்கு நிறைவடைந்தது.
- “இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில் டிஜிட்டல் நிர்வாகம்” என்பது இந்தக் கருத்தரங்கின் மையப் பொருளாகும். இரண்டு நாள் நடைபெற்ற அமர்வுகளில் ஆழ்ந்த விவாதத்திற்குப் பின் இ-நிர்வாகம் குறித்த ‘ஐதராபாத் பிரகடனம்’ ஏற்கப்பட்டது.
- இந்தக் கருத்தரங்கின் அமர்வுகள் அனைத்தும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதாகவும் குடிமக்கள் பயனடைய இ-நிர்வாக கருவிகளை பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தைக் கற்றறிவதாகவும் இருந்தன.