Type Here to Get Search Results !

TNPSC 28th JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கிராமங்களில் அதிவேக இணைய இணைப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கை வெளியீடு
  • கிராமங்களில் கைபேசி சேவையை அதிகரிக்கவும், அதிவேக இணையவசதிகளை அளிக்கவும் புதிதாக தமிழ்நாடு தொலைத் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.
  • கிராமங்களில் இணைதயள வசதியை அளிக்கும் வகையில் பாரத்நெட், தமிழ்நெட் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 
  • இந்நிலையில், கிராமங்களில் தடையில்லா கைபேசி சேவையை அதிகரிக்கும் வகையிலும், அதிவேக இணையதள வசதியை அளிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் உயர்தர தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதிகளை அளிக்கும் வகையிலும் தமிழக அரசு, 'தமிழ்நாடு தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கை'யை உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணையை தகவல் தொடர்புத்துறை செயலர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ளார்.
  • இந்த கொள்கையில், தொலைத் தொடர்பு வசதி தொடர்பான பல்வேறு கட்டணங்கள், விண்ணப்பம் மற்றும் அனுமதி அளிக்கும் முறை, குறைதீர்க்கும் வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
  • குறிப்பாக, வலுவான மற்றும் பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்களுக்கு ஏற்ற தொலைத் தொடர்பு தளங்களை ஏற்பது இந்த கொள்கையின் நோக்கமாகும். RoW எனப்படும் ரைட் ஆப் வே அனுமதி வழங்குவதற்கு புதிய கட்டணங்களை அரசு அறிவித்துள்ளது.
  • தரைக்கு கீழ் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்க அனுமதி கோரும் விண்ணப்பத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1,000 என்ற திரும்பப் பெற முடியாத கட்டணம் அல்லது அதன் ஒரு பகுதியை வரியாக செலுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • அதேபோல, கைபேசிக்கான கோபுரங்கள் நிறுவுவதற்கான விண்ணப்பத்துக்கு, ஒருமுறை திரும்பப் பெறாத கட்டணமாக ஒரு கோபுரத்துக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • பொதுமக்களுக்கு ஏற்ற தொலைத் தொடர்பு தளங்களை ஏற்பது இந்த கொள்கையின் நோக்கமாகும்.
புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்
  • மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அப்பதவிக்கு தற்போது நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதிநேர உறுப்பினராகப் பணியாற்றியுள்ள ஆனந்த நாகேஸ்வரன் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
  • தொடர்ந்து மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ளார். 1994 மற்றும் 2011 க்கு இடையில் சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல தனியார் செல்வ மேலாண்மை நிறுவனங்களுக்கு மேக்ரோ-பொருளாதார மற்றும் மூலதன சந்தை ஆராய்ச்சியில் பல தலைமைப் பாத்திரங்களை அவர் வகித்துள்ளார்.
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குகிறது பிலிப்பைன்ஸ்
  • இந்திய - ரஷ்ய கூட்டு தயாரிப்பான, சூப்பர்சோனிக் வகையை சேர்ந்த பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியாவின் பிரம்மோஸ் ஏரோஸ்பேன் பிரைவேட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. 
  • நீர்மூழ்கிகள், போர் கப்பல்கள், விமானங்கள் என அனைத்து பரப்பில் இருந்தும் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்த முடியும். அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட இந்த ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்துள்ளது. 
  • இதற்காக 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையிலான பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து, இந்தியா வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'ஏஎல்எச் எம்கே 3' ரக ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் இணைப்பு
  • பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 புதிய ரக ஹெலிகாப்டர்கள் முறைப்படி போர்ட்பிளேரில் உள்ள ஐஎன்எஸ் உத்க்ரோஷ் ராணுவத் தளத்தில் சேர்க்கப்பட்டன. இதனை, அந்தமான் - நிக்கோபர் ராணுவப் பிரிவின் லெப்டினண்ட் ஜெனரல் அஜய் சிங் பெற்றுக்கொண்டார்.
  • ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஏஎல்எச் ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு தயாரித்துள்ளது. அதில் ஏஎல்எச் எம்கே 3 ரக ஹெலிகாப்டர் அதிநவீன வசதி கொண்டது.
பிக் பாஷ் லீக் கோப்பையை வென்றது பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி
  • மெல்போர்னில் நடைபெற்ற பிபிஎல் இறுதிச்சுற்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
  • முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த சிட்னி அணி, 16.2 ஓவர்களில் 92 ரன்கள் மட்டும் எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 
  • பிபிஎல் கோப்பையை வென்ற பெர்த் அணி, 4-வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. பிபிஎல் கோப்பையை நான்கு முறை வென்ற முதல் அணி என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி - இந்தியாவுக்கு வெண்கலம்
  • மஸ்கட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் அசத்தலான ஆடிய இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய வீராங்கனை ஷா்மிளா தேவி ஆட்டநாயகி ஆனாா்.
150 கிராமங்களுக்கு இஸ்ரேல் வேளாண் தொழில்நுட்ப உதவி
  • வேளாண் துறையில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இந்தியாவும் இஸ்ரேலும் முடிவு செய்துள்ளன. இதன்படி, 29 வேளாண்மை திறன் மையங்களை சுற்றியுள்ள 150 கிராமங்களுக்கு இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இந்தியக் கடற்படை மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்தியக் கடற்படை வேலை வாய்ப்பு நிறுவனம் (ஐஎன்பிஏ) மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை 27 ஜனவரி 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 
  • முன்னாள் கடற்படை வீரர்களை இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் பணியமர்த்துவதற்காக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இந்தியக் கடற்படைப் பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் செயல் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு மோனு ராத்ரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • முன்னாள் படைவீரர்களுக்கு அவர்களின் தகுதிகள், அனுபவம் மற்றும் சேவைக் காலத்தில் பெற்ற திறன்களுக்கு ஏற்ப வாய்ப்புகளை வழங்குவதை இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர் மூழ்குதல் ஆதரவு கப்பல் திட்டத்தின் முதல் கப்பலைக் கட்டும் பணி கொல்கத்தாவில் தொடக்கம்
  • நீர் மூழ்குதல் ஆதரவு கப்பல் (டிஎஸ்சி) திட்டத்தின் முதல் கப்பலின் கட்டுமானப் பணி 27 ஜனவரி 2022 அன்று கொல்கத்தாவில் உள்ள டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனததில் தொடங்கியது. இந்தியக் கடற்படையின் பிரதிநிதிகள் காணொலி மூலம் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
  • இந்தியக் கடற்படைக்கு ஐந்து டிஎஸ்சிக்களை (யார்டுகள் 325 முதல் 329 வரை) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பிப்ரவரி 21-ல் கையெழுத்தானது.
  • துறைமுகத்திற்கு உள்ளேயும் அருகாமையிலும் உள்ள கப்பல்களுக்கு டைவிங் உதவி, நீருக்கடியில் பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக இந்தக் கப்பல்கள் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்படும். நவீன நீர்மூழ்கிக் கருவிகள் கப்பல்களில் பொருத்தப்படும்.
  • அனைத்து முக்கிய மற்றும் துணை உபகரணங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் மேக் இன் இந்தியா முன்முயற்சிகளுக்கு இந்த கப்பல்கள் பெருமை சேர்க்கின்றன.
படையில் இருந்து விலக்கப்பட்ட குக்ரி போர்க்கப்பல், டையு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையின் முதல் ஏவுகணை ஏந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் குக்ரி (பி49), தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ நிர்வாகத்திடம் 26 ஜனவரி 2022 அன்று ஒப்படைக்கப்பட்டது.
  • நேர்த்தியாக நடைபெற்ற விழாவில் படையில் இருந்து விலக்கப்பட்ட ஐஎன்எஸ் குக்ரியை தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ மற்றும் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான திரு பிரஃபுல் படேலிடம் ரியர் அட்மிரல் அஜய் வினய் பவெ ஒப்படைத்தார்.
ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடுதல் - நாசிக் ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் தேவாஸ் வங்கி நோட்டு நிறுவனத்தில் தொடக்கம்
  • நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் கீழ், ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை, நாசிக்-ல் உள்ள ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் தேவாஸ் நகரில் உள்ள வங்கி நோட்டு அச்சகத்தில் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய நிறுவனம்(எஸ்பிஎம்சிஐஎல்) தொடங்கியது.
  • நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகத்தில், புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை நிதியமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் திருமதி மீனா ஸ்வரூப் ஜனவரி 27ம் தேதி தொடங்கி வைத்தார். 
  • தேவாஸ் நகரில் உள்ள வங்கி நோட்டு அச்சகத்தில், பொருளாதார விவகாரங்கள் துறை ஆலோசகர் திரு சசாங் சக்சேனா காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel