'ஆட்வெர்ப் டெக்' நிறுவனத்தில் 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' முதலீடு
- முகேஷ் அம்பானி தலைமையிலான, 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' நிறுவனம், 'ஆட்வெர்ப் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் 54 சதவீத பங்குகளை, 983 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.
- ஆட்வெர்ப் டெக், உள்நாட்டை சேர்ந்த, 'ரோபோட்டிக்' நிறுவனமாகும். இதனையடுத்து, அதிக அளவிலான பங்குகளை கொண்ட பங்குதாரராக, ரிலையன்ஸ் மாறியுள்ளது. இருந்த போதிலும், நிறுவனம், முன்பு போலவே தனியாகவே செயல்படும்.
- ரிலையன்ஸ் முதலீடு செய்திருக்கும் தொகையை, வெளிநாட்டிலும் வணிகத்தை விரிவுபடுத்த பயன்படுத்தப்படும். மேலும், மிகப் பெரிய தொழிற்சாலையை நொய்டாவில் அமைக்கவும் பயன்படுத்தப்படும்.
2021 சிறந்த கால்பந்து வீரராக லெவன்டோவ்ஸ்கி தேர்வு
- சுவிட்சர்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில், இறுதி பட்டியலில் நட்சத்திர வீரரான அர்ஜென்டினாவின் மெஸ்சி, எகிப்தின் முகமது சாலா ஆகியோர் இருந்த நிலையில் அவர்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாக்குகள் பெற்று லெவன்டோவ்ஸ்கி இந்த விருதை தக்கவைத்துள்ளார்.
- இவர் இந்த விருதை வென்றது இது 2வது முறையாகும், கடந்த ஆண்டும் சிறந்த வீரராக தேர்வானார்.
- கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பின் 2வது முறையாக இவர் இந்தவிருதை பெற்றுள்ளார். பார்சிலோனா கேப்டன் ஸ்பெயினின் அலெக்ஸியா புட்டெல்லாஸ் சிறந்த பெண் வீரருக்கான விருதைப் பெற்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ பிபா சிறப்பு விருதை பெற்றார்.
- சிறந்த கோல் கீப்பராக செனகலை சேர்ந்த எட்வார்ட்மெண்டி, மகளிர் பிரிவில் சிலியின் எண்ட்லர் விருது பெற்றனர்.
- நியூஸ்ஆன்ஏர் வானொலி நேரலையின் உலகளாவிய தரவரிசையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலாக 18 முதல் 44 வயதிற்குட்பட்ட நேயர்கள் (இந்தியா நீங்கலாக) இருப்பது தெரிய வந்துள்ளது. நியூஸ்ஆன்ஏர் செயலி உலகில் இளைஞர்களிடையே மாபெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது.
- அகில இந்திய வானொலியில் நேரலை நிகழ்வுகளில் மிகவும் பிரபலமான நியூஸ்ஆன்ஏர் செயலி தொடர்பான சமீபத்திய தரவரிசையில் (இந்தியா நீங்கலாக) உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் முதன் முறையாக நுழைந்துள்ளது.
- பப்புவா நியூகினியா வெளியேறி உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக அரை மாத (15 நாள்) நேயர் கணிப்பில் ஃபிஜி முன்னிலையில் உள்ளது.
- அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பில் உலகளவில் (இந்தியா நீங்கலாக) ஏஐஆர் தர்மசாலா முதல் 10 இடங்களில் ஒன்றாக புதிதாக நுழைந்துள்ளது.
- ஆஸ்மிதா மும்பை, ஏஐஆர் தெலுங்கு, ஏஐஆர் சென்னை ரெயின்போ ஆகியவற்றை முதன்மை பட்டியலிலிருந்து விலக்கி ஏஐஆர் மாஞ்சேரி, எஃப்எம் கோல்டு மும்பை ஆகியவை மீண்டும் இடம் பெற்றுள்ளன.
- அகில இந்திய வானொலியின் 240-க்கும் அதிகமான வானொலி சேவைகள் நியூஸ்ஆன்ஏர் செயலி, பிரசார் பாரதியின் அதிகாரபூர்வ செயலி ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன.
- நியூஸ்ஆன்ஏர் செயலியின் நேரலைக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் 85-க்கும் அதிகமான நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான நேயர்கள் இருக்கின்றனர்.
- உலகளவில் நியூஸ்ஆன்ஏர் சேவைகளின் முதல் 10 இடத்தில் தில்லி எஃப்எம் கோல்டு முதலிடத்தில் உள்ள நிலையில், ஏஐஆர் தமிழ் 7-வது இடத்தில் உள்ளது.
- நியூஸ்ஆன்ஏர் நேரடி ஒலிபரப்பில் முதல் 10 இடங்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஃபிஜி முதலாவதாக உள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா 2-வது, 3-வது இடங்களை பெற்றுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் 10-வது இடத்தில் உள்ளது.
- இந்த நாடுகளில் முதல் 10 இடங்களை பெற்றுள்ள வானொலி நிகழ்ச்சிகளில் ஏஐஆர் சென்னை, ஆஸ்திரேலியாவில் 7-வது இடத்தைப் பெற்றுள்ளது.
- ஏஐஆர் தமிழ், அமெரிக்காவில் 4-வது இடத்தில் உள்ளது. ஏஐஆர் தமிழ் ஒலிபரப்பில் அமெரிக்கா முதல் இடத்திலும், சிங்கப்பூர் 5-வது இடத்திலும், இலங்கை 7-வது இடத்திலும், மலேசியா 8-வது இடத்திலும் உள்ளன.
- அனைத்தையும் உள்ளடக்கிய நல்லாளுகை, உள்ளாட்சி அமைப்புக்களை வலுப்படுத்துதல் மற்றும் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, தேசிய நல்லாட்சி மையம், இந்திய அரசு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனம் ஆகியவை 17 ஜனவரி 2022 திங்கட்கிழமை அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- சிறந்த நல்லாட்சி செயல்முறைகளை அனைத்து திட்டங்களில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக இந்த இரண்டு தேசிய நிறுவனங்களின் திறன்களின் மூலம் வெவ்வேறு கூட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
- பஞ்சாயத்துராஜ் நிறுவனங்கள் உட்பட அரசின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளின் அறிவுத்திறனை பரிமாறிக்கொள்வதற்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன.
- நல்லாளுகைக் கொள்கைகளை அவற்றின் உண்மையான உணர்வில் செயல்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புற சமூகங்களுக்குப் பயனளிக்கும் வகையில் சேவைகளை வழங்கும் நோக்கத்தில் பொது நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் அவற்றை திறம்பட செயல்படுத்துவதை புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதி செய்யும்.
- பஞ்சாயத்து அளவில் மின்-ஆளுமையை மேம்படுத்துதல், பஞ்சாயத்து அளவில் நல்ல நிர்வாக மாதிரிகளை ஆவணப்படுத்துதல், படிவங்கள் உள்ளிட்டவற்றை எளிமைப்படுத்துதல் மற்றும் கிராமப்புற நிர்வாகத்தின் சிறந்த நடைமுறைகள் உட்பட பல முக்கிய பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.