ஐ.நா. வெள்ளிக்கிழமை வெளியிட்ட உலக பொருளாதார நிலை மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான வளா்ச்சி வாய்ப்புகள் குறித்த அறிக்கை
- கடந்த 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலக பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவில் 5.5 சதவீத அளவுக்கு வளா்ச்சி பெற்றது.
- ஆனால், அந்த ஆண்டின் இறுதியில், கரோனா பாதிப்பால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, உலக பொருளாதார வளா்ச்சி விகிதம் சரியத் தொடங்கியது. சீனா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற மிகப் பெரிய பொருளாதாரங்களும் கடும் சரிவைச் சந்தித்தன.
- தொடா்ந்து, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலும் உலக பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும். 2022-இல் உலக பொருளாதார வளா்ச்சி விகிதம் 4 சதவீத அளவிலும், 2023-இல் 3.5 சதவீத அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- பெரும்பாலான வளரும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சி பொதுவாக பலவீனமாக இருக்கும். குறிப்பாக, சுற்றுலா துறையைச் சாா்ந்துள்ள நாடுகளில் பொருளாதார வளா்ச்சி மிக மந்தமாகவே இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருக்கு ஆலை அமைக்க அதானி - போஸ்கோ ஒப்பந்தம்
- கவுதம் அதானி தலைமையிலான, 'அதானி குழுமம்' உருக்கு, புதிப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் வணிக வாய்ப்புகளை மேம்படுத்த, தென் கொரியாவைச் சேர்ந்த, 'போஸ்கோ' நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
- குஜராத்தில் உள்ள முந்த்ராவில், பசுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ஒருங்கிணைந்த உருக்கு ஆலையை நிறுவுவது மற்றும், பிற வணிகங்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வது ஆகியவை சம்பந்தமாக, போஸ்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- குஜராத்தில் ஆலை அமைப்பது மட்டுமின்றி; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ர ஜன், சரக்கு கையாளல் போன்ற பல்வேறு துறைகளிலும், இரு தரப்பும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தி தந்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரிக்கும் கரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
- நாடு முழுவதும் அன்றாடம் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
- கரோனா அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் வேலை எனப் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
- ஏற்கெனவே நாடு முழுவதும் 15 முதல் 18 வயதில் உள்ள சிறாருக்கு தடுப்பூசி செலுத்துவதிலும், 60 வயதுக்கு மேற்பட்ட முன்களப் பணியாளர்கள், இணை நோய் கொண்டோர், முதியோர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போடப்பட்டு வருகிறது.
- மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கரோனா பரவல் மிகவும் அதிகமாக இருப்பதால் இந்த மாநிலங்கள் கூடுதல் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகின்றன.
- இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அவர் கேட்டறிந்தார்.
- மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பிரிட்டன் நாட்டு சர்வதேச வர்த்தகத்துக்கான அமைச்சர் அன்னி –மேரி டிரவெலினுடன், புதுதில்லியில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையை தொடங்கினார்.
- இருநாட்டு பிரதமர்கள் திரு. நரேந்திர மோடி, திரு. போரிஸ் ஜான்சன் ஆகியோர் 2021-ம் ஆண்டு முடிவு செய்த இலக்கை எட்டும் வகையிலான இந்த ஒப்பந்தம், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா-பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக்க உதவும்.