தமிழகத்தில் புத்தாக்கத்தின் மூலமாக புதிய தொழில்களை உருவாக்க அரசு துணை நிற்கும் சென்னையில் நடந்த 'இஸ்பா' மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
- இஸ்பா (Indian STEPs and Business incubators Association) அமைப்பின் 14-வது மாநாடு சென்னையில் தொடங்கியது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- 'இஸ்பா' போன்ற புத்தொழில் காப்பகங்கள் மூலமாகவே இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள புத்தொழில் காப்பகங்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்தவும், அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு இத்தகைய புத்தொழில் காப்பகங்கள், புத்தொழில் பூங்காக்களை உருவாக்கவும் செயல் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
- தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 60 நிறுவனங்களில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல விண்வெளி, மின் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நிறுவனங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். வரும்நாட்களில் புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத் தோட்டமாக தமிழகம் உருவெடுக்கும்.
பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
- கொரோனோ ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அதுசார்ந்த தொழிலாளர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
- இந்நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், 'பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உதய் (UIDAI) அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது.
கொரோனா அவசரகால பயன்பாட்டுக்கு ரூ.23,123 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
- கொரோனா அவசரகால பயன்பாட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.23,123 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அதன்படி சுகாதார கட்டமைப்பை தயார்படுத்தும் வகையில் 37,157 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளன. நாளொன்றுக்கு 19,236 மெட்ரிக் அளவிற்கு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது.
ஐசிசியின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார் அஜாஸ் படேல்
- கடந்தாண்டு டிசம்பர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேலை தேர்வு செய்தது ஐசிசி.
- அஜாஸ் படேல் கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்தியாவின் 73வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகி 14 வயது பரத் சுப்ரமணியம் சாதனை
- பதினான்கு வயதான பரத் சுப்ரமணியம் இந்தியாவின் 73வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகி சாதனைப்படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை, இத்தாலியில் நடந்த வெர்கானி கோப்பை ஓபனில் பதினான்கு வயதான பரத் சுப்ரமணியம் தனது மூன்றாவது மற்றும் இறுதி கிராண்ட் மாஸ்டருக்கான நெறியை முடித்த பிறகு இந்தியாவின் 73வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகி சாதனை படைத்தார்.