TAMIL
- இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி, 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டு டிசம்பரில் 6.74 சதவீதம் அதிகரித்து 74.78 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
- கடந்தாண்டு டிசம்பரில் மொத்த நிலக்கரி உற்பத்தியில், நிலக்கரி இந்தியா நிறுவனம், 60.220 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது. இது 3.79 சதவீத வளர்ச்சி.
- 2019ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில், நிலக்கரி விநியோகம் கடந்தாண்டு டிசம்பரில் 14.62 சதவீதம் அதிகரித்து 75.05 மில்லியன் டன்னாக அதிகரித்தது.
- நிலக்கரி இந்தியா நிறுவனம் (சிஐஎல்) 60.67 மில்லியன் டன் நிலக்கரியை விநியோகம் செய்தது. இது 12.70 சதவீத வளர்ச்சி. சிங்கரேனி கொலியரீஸ் நிறுவனம் (எஸ்சிசிஎல்) 5.70 மில்லியன் டன் நிலக்கரியை விநியோகம் செய்தது. இது 2.01 சதவீத வளர்ச்சி.
- அனல் மின்சாரத்தின் தேவை 2021ம் ஆண்டு நவம்பரில் 12.7 சதவீதம் அதிகரித்தது. அனல் மின்சாரத்தின் உற்பத்தி கடந்தாண்டு டிசம்பரில் 11.84 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. 2021 டிசம்பரில் ஒட்டு மொத்த மின்சார உற்பத்தி, 2019 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 8.32 சதவீதம் அதிகம்.
- அனல் மின்சாரத்தின் உற்பத்தி 2021 டிசம்பரில் 85,579 மில்லியன் யூனிட். இதற்கு முந்தைய மாத மின் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 13.17 சதவீத வளர்ச்சி. மொத்த மின்சார உற்பத்தி 2021 டிசம்பரில், 1,13,094 மில்லியன் யூனிட்டாக அதிகரித்தது.
- India's total coal production increased by 6.74 per cent in December 2021 to 74.78 million tonnes as compared to December 2019. Out of the total coal production in December last year, Coal India produced 60.220 million tonnes. This is an increase of 3.79 percent.
- Compared to December 2019, coal supply increased by 14.62 per cent to 75.05 million tonnes in December last year. Coal India (CIL) distributed 60.67 million tonnes of coal. This is an increase of 12.70 per cent.
- Singareni Collieries (SCCL) supplied 5.70 million tonnes of coal. This is a growth of 2.01 percent. Demand for thermal power increased by 12.7 percent in November 2021. Thermal power generation grew by 11.84 per cent in December last year.
- Total electricity generation in December 2021 was 8.32 per cent higher than in December 2019.
- The production of thermal power in December 2021 was 85,579 million units. This is an increase of 13.17 per cent over the previous month. Total electricity generation in December 2021 increased to 1,13,094 million units.