Type Here to Get Search Results !

உலக எய்ட்ஸ் தினம் / WORLD AIDS DAY


TAMIL
  • உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். 
  • இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
  • 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல் மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.
  • இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது, இதில் 270,000 குழந்தைகள்.
  • புதிய எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குளோபல் ஸ்னாப்ஷாட், கடந்த ஆண்டில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் எய்ட்ஸ் தொடர்பான காரணங்களால் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டதாகவும் , 120,000 குழந்தைகள் இறந்ததாகக் காட்டுகிறது.
  • நீடிக்கும் கோவிட்-19 தொற்றுநோய், எச்.ஐ.வி தொற்றுநோயை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. இதனால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள், இளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எய்ட்ஸ் நோய்க்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகளை பெற முடியாமல் போயுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
  • இதற்கிடையில், அதிகரித்து வரும் வறுமை, மனநலப் பிரச்சினைகள் ஆகியவை குழந்தைகள் மற்றும் பெண்களின் தொற்றுநோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன" என்று UNICEF தெரிவித்துள்ளது.
  • உலகளவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 5ல் 2 பேருக்கு அவர்களின் நிலை தெரியாது. மேலும் எச்.ஐ.வி. உள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையி (ART) இருக்கின்றனர். 
  • ஏற்கெனவே எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைகள் முறையாக அனைவருக்கும் சென்று சேராத நிலையில் கொரோனா நெருக்கடி அந்த இடைவெளியை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
  • இந்தியா மட்டுமன்றி 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கோவிட்-19 காரணமாக பல நாடுகளில் எச்ஐவி சேவைகள் முறையாக நடக்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • அதிக வறுமை கொண்ட நாடுகளில் எச்ஐவி குழந்தை பரிசோதனை 50 முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய சிகிச்சை துவக்கங்கள் 50லிருந்து 25 ஆக குறைந்துள்ளது. 
  • பல நாடுகளில் சுகாதார வசதிகள் விநியோகம், தாய்வழி எச்.ஐ.வி சோதனை மற்றும் ஆன்டிரெட்ரோவைரல் எச்.ஐ.வி சிகிச்சை ஆகியவற்றிலும் கணிசமான குறைப்பு ஏற்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் கர்ப்பிணிப் பெண்களிடையே ART கவரேஜ் 71 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் 2020 இல் சோதனைகள் மீண்டும் அதிகரித்தாலும், பரிசோதனை அளவுகள் கோவிட்-19 க்கு முந்தையதை விட மிகக் குறைவாகவே உள்ளன. மேலும் இதன் தாக்கத்தின் உண்மையான அளவு தெரியவில்லை.
  • 2020 ஆம் ஆண்டில், துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் புதிய எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 89 சதவீதமாகவும் , உலகளவில் எச்ஐவியுடன் வாழும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் 88 சதவீதம் பேர் என்றும் கண்டறிந்துள்ளது. 
  • அதில் ஆண்களை விட இளம்பெண்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகம் என்கிறது. எய்ட்ஸ் தொடர்பான குழந்தை இறப்புகளில் சுமார் 88 சதவீதம் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளன.
2030ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்க ஐநா சபையின் திட்டம் இதுதான்
  • எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்க்கு எதிரான போராட்டத்தில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கடந்த ஆண்டுகளில் அனைத்து பிராந்தியங்களிலும் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
  • குழந்தைகளுக்கான உலகளாவிய ART பரிசோதனையில் கர்ப்பிணிப்பெண்கள் (85 சதவீதம்) மற்றும் பெரியவர்கள் (74 சதவீதம்) ART சிகிச்சை பெறும் குழந்தைகளில் அதிக சதவீதம் தெற்காசியாவில் (95 சதவீதத்திற்கும் அதிகமானோர்), அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (77 சதவீதம்), கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் (59 சதவீதம்), கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா ( 57 சதவீதம்), லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (51 சதவீதம்), மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா (36 சதவீதம்).
  • கடந்த ஆண்டு எய்ட்ஸ் தொடர்பான காரணங்களால் சுமார் 15.4 மில்லியன் குழந்தைகள் பெற்றோரை அல்லது இருவரையும் இழந்துள்ளனர். 
  • எய்ட்ஸ் நோயினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் உலகம் முழுவதும் உள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதமாக இருக்கின்றனர்.
ENGLISH
  • World AIDS Day is observed annually on the first day of December. It is customary for events to be held on a thematic basis each year. Today it aims to raise awareness about AIDS and its consequences. 
  • The idea for AIDS Day first emerged at the 1988 World Health Ministerial Conference on AIDS. Since then governments and voluntary organizations have been implementing it around the world today.
  • The number of people living with AIDS between 1981 and 2007 was over 250 lakhs and till 2007, 332 lakhs of people were living with the disease. Thus the disease is considered to be the most terrible epidemic in history. 
  • Despite the progress and monitoring of the latest therapies, AIDS caused 20 million deaths worldwide in 2007, including 270,000 children. The new HIV and AIDS Global snapshot shows that one child has been infected with AIDS-related causes every 120 minutes and 120,000 children have died in the past year.
  • Prolonged Govt-19 infection has exacerbated the HIV epidemic. This suggests that vulnerable children, adolescents, pregnant women, and nursing mothers may not be able to receive testing and treatment for AIDS.
  • Meanwhile, rising poverty and mental health problems further increase the risk of infection among children and women, ”UNICEF said. Worldwide, 2 out of 5 children infected with HIV do not know their status. And HIV. More than half of all children have antiretroviral therapy (ART).
  • The corona crisis has widened that gap as treatments for AIDS have not already reached everyone systematically. The report said that not only in India but in many other countries due to Govt-19 in early 2020, HIV services were not functioning properly.
  • In poorer countries, HIV screening rates have dropped by 50 to 70 percent. The number of new treatment initiatives for children under 14 has dropped from 50 to 25. There has also been a significant reduction in the distribution of health facilities, maternal HIV testing and antiretroviral HIV treatment in many countries.
  • By 2020, ART coverage among pregnant women in South Asia will drop from 71 percent to 56 percent. Although the number of trials will increase again in June 2020, the test levels are still much lower than before the Govt-19. And the true extent of its impact is unknown.
  • By 2020, 89 percent of children infected with the new HIV in sub-Saharan Africa and 88 percent of children and adolescents living with HIV worldwide will be diagnosed. It says that the number of young women is six times higher than that of men. About 88 percent of AIDS-related infant deaths occur in sub-Saharan Africa.
  • This is the United Nations' plan to eradicate AIDS by 2030. Despite some improvements in the fight against HIV and AIDS, children and adolescents continue to lag behind in all regions over the years, the report said.
  • Pregnant women (85 percent) and adults (74 percent) account for the highest percentage of children receiving ART in the global ART screening in South Asia (over 95 percent), followed by the Middle East and North Africa (77 percent), East Asia and the Pacific (59 percent), and the East. And South Africa (57 percent), Latin America and the Caribbean (51 percent), and West and Central Africa (36 percent).
  • About 15.4 million children lost one or both parents to AIDS-related causes last year. The number of children who have lost their parents to AIDS is around 10 percent of the world's children who have lost their parents.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel